மணக்காட்டு பத்ரா கோயில்
மணக்காட்டு பத்ரா கோயில் இந்திய மாநிலமான கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் பொன்குன்னம் அருகில் உள்ள சீரக்கடவு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும் .இங்குள்ள மூலவரான பத்ரகாளி அம்மன் "மணக்காட்டுஅம்மா" வடிவில் வீற்றிருக்கிறார். தேவி, பக்தர்களுக்கு " ஸ்ரீ எனப்படுகின்ற செழிப்பையும், பத்ரதா எனப்படுகின்ற பாதுகாப்பையும் சமமாக வழங்குகிறார். [1][2] தினசரி குருதி பூசைக்குப் புகழ்பெற்ற இக்கோயில், சபரிமலை யாத்ரீகர்களுக்கு அன்னதானத்தை வழங்குகின்ற முக்கிய இடமாகும்.
புராணம்
தொகுதற்போதைய அமைப்பு 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரு காலத்தில் தைங்கனூர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு துறவி சீரக்கடவு கிராமத்தில் வாழ்ந்து வந்தார். யட்சிகள், கந்தர்வர்கள், பேய்கள் போன்ற, சில இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். அவற்றைக் கட்டுப்படுத்தும் சடங்குகளை மேற்கொள்ள அவர் அடிக்கடி தொலைதூரப் பகுதிகளுக்கு அழைக்கப்பட்டார். அவர் இந்த ஆவிகளை நக்ஸ்-வோமிகா மரம் என்ற கஞ்சிரம் மரத்திலோ ஒரு சிலையிலோ வைத்து பொருத்தமான இடங்களில் பிரதிஷ்டை செய்து வந்தார். ஒரு நாள், ஒரு சிலையில் அவ்வகையில் நிறுவப்பட்ட ஒரு யட்சிதன்னை விடுவிக்குமாறு துறவியிடம் தான் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன் என்று கூறி, அவருடைய வீட்டிற்கு வருவதாக உறுதியளித்தாள். [3]
அவளது வேண்டுகோளின் பேரில், அவளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று மத்திய அறையில் தங்க அறிவுறுத்தினார். யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற வாக்குறுதி பெற்று, முன்னெச்சரிக்கையாக ஒரு மந்திர நூலை வைத்தார். துறவியின் செயலில் மகிழ்ச்சியடையாத அவளும் சில நிபந்தனைகளை விதித்தாள். அதன்படி அந்த அறையை ஒரு சன்னதியைப் போல பாதுகாக்க வேண்டும் என்றும், யாரும் பேசாமல் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்றும், தாழ்ந்த சாதியினர் வீட்டின் நுழைவாயிலுக்குள் நுழையவோ, துறவியைத் தொடவோ கூடாது என்ற நிபந்தனைகளை விதித்து இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கடைப்பிடிக்காவிட்டால், அவள் மந்திர இழையிலிருந்து விடுபட்டு, எதையும் செய்வதாகக் கூறினாள். [3]
துறவி யட்சியின் நிபந்தனைகளுக்கு ஏற்றார். அவருக்கும், அவரது வயதான தாய்க்கும் மட்டுமே அவள் தெரிந்தாள். அம்மா அவளை ஒரு அழகான இளம் பெண்ணாகப் பார்த்தாள், அந்தப் பெண் தனக்கு உதவுவதற்காக தனது மகன் கொண்டு வந்ததாக அந்தத் தாய் நினைத்தாள். ஒரு முறை நீண்ட பயணம் சென்று, தனது வீட்டிற்குத் திரும்பினார். நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது எஜமானரைப் பார்த்ததில், துறவியின் சீடர் ஒருவர் தற்செயலாக மகிழ்ச்சியில் வந்து அவரைத் தொட்டதும், தங்கியிருந்த யட்சி வீட்டை விட்டு மறைந்தாள். [3]
வெளிவந்த யட்சி விடுவிக்கப்பட்ட பிறகு, யட்சி கிராம மக்களுக்கு தீங்கு செய்ய ஆரம்பித்தார். பெரியம்மை போன்ற பல்வேறு தொற்று நோய்களைப் பரப்பக் காரணமானார். இந்த குழப்பமான சூழ்நிலைக்கு தீர்வு காணக்கூடிய நபரைத் தேடிச் சென்றார். "மணக்கட்டு மனை" என்னுமிடத்திற்குச் சென்றும தலைவரிடம் நிலையைக் கூறினார். தீய ஆவியின் தொல்லைகளைத் தவிர்க்க ஒரே வழியாக கிராமத்தில் பத்ரகாளி தேவிக்கு ஒரு சன்னதியைக் கட்டும்படி அறிவுறுத்தப்பட்டனர். தொடர்ந்து கருவறை கட்டப்பட்டது. [3]
அமைவிடம்
தொகுஇக்கோயில் அமைந்துள்ளது பொன்குன்னத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், எருமேலியிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் பொன்குன்னம் - மன்னம்பலவு சாலையில் உள்ளது.[2][4]
மூலவர்
தொகுஇங்கு பத்ரகாளி மூலவராக உள்ளார். துர்கா, புவனேஸ்வரி, நாகராஜர், நாகதேவதா, ராக்ஷஸ்சு, விஷ்ணுமாயா போன்ற துணைத்தெய்வங்கள் உள்ளனர்.[3]
திருவிழாக்கள்
தொகுடிசம்பரில் மண்டலத் திருவிழாவும், ஏப்ரலில் பொங்கல் திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுகின்ற குறிப்பிடத்தக்க திருவிழாக்களாகும். [5] மலையாள மாதமான தனுவில் (டிசம்பர்) வருடாந்திர திருவிழா நடத்தப்படுகிறது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Biju Mathew, ed. (2014). Pilgrimage to Temple Heritage, Volume 1. Kerala, India: Info Kerala Communications Pvt Ltd. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8192128443 – via Volume 1.
- ↑ 2.0 2.1 "✍pedia - Manakkattu Sree Bhadra Temple, Chirakkadavu, Kottayam" (in en-US). ✍pedia. 2011-12-01. http://pedia.desibantu.com/manakkattu-sree-bhadra-temple/.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Temple, Manakattu Sree Bhadra. "Manakattu Sree Bhadra Temple". manakkattusreebhadratemple.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-24.
- ↑ Days, Festival. "Manakkattu Sree Bhadra Temple Dwajaprathishta Programmes - Festival Days". www.festivaldays.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-24.
- ↑ "Thiru Ulsavam 2016 - Manakkatu Radholsavam". allevents.in. பார்க்கப்பட்ட நாள் 2016-12-24.