மணலூர் (திருச்சூர் மாவட்டம்)
மணலூர் (Manaloor) இந்தியாவின் தென் பகுதியிலுள்ள கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
மணலூர்
Manaloor மணலூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 10°29′45″N 76°6′0″E / 10.49583°N 76.10000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சுர் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,130 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கே.எல்- |
மக்கள்தொகையியல்
தொகு2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணலூர் கிராமத்தில் 17757 பேர் வசித்தனர். இதில் 8442 பேர் ஆண்களாகவும் 9315 பேர் பெண்களாகவும் இருந்தனர்.
அரசியல்
தொகுமணலூர் சட்டமன்றத் தொகுதி திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும். [1]
இயற்கை விவசாயம்
தொகுமணலூர் இயற்கை விவசாயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகும். இந்தியப் பிரதமர் 2016 ஆம் ஆண்டில் மணலூருக்குச் சென்றபோது, இயற்கை வேளாண்மை நுட்பங்களைப் பயன்படுத்தி மணலூரில் 3,000 வலுவான பார்வையாளர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. [2]
பிரபலமான ஆளுமைகள்
தொகுவி.எம்.சுதீரன் - இந்திய அரசியல்வாதி
சிஎன் செயதேவன் -இந்திய அரசியல்வாதி
மறைந்த கிருசுணன் கனியபரம்பில் - இந்திய அரசியல்வாதி
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Kerala. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
- ↑ "Article കോഴിക്കോട്ട് മോദിക്ക് വിരുന്നൊരുക്കാന് മണലൂരില് ജൈവ പച്ചക്കറികൃഷി". Archived from the original on 2016-08-12.