மணல் உப்புக்கொத்தி

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Charadrius|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

மணல் உப்புக்கொத்தி ( Charadrius leschenaultii ) என்பது உப்புக்கொத்திக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை ஆகும்.

மணல் உப்புக்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Charadrius
இனம்:
இருசொற் பெயரீடு
Charadrius leschenaultii
(Lesson, 1826)

பரவல்

தொகு
 
கட்ச்சில் மணல் உப்புக்கொத்தி
 
கட்ச்சில் மணல் உப்புக்கொத்தி

இது துருக்கியின் அரை பாலைவனங்களிலும் நடு ஆசியா வழியாக கிழக்கு நோக்கியும் இனப்பெருக்கம் செய்கிறது. இது வெற்றுத் தரையில் கூடு கட்டுகிறது. கிழக்கு ஆபிரிக்கா, தெற்காசியா, ஆத்திரேலியாவின் மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு இந்த இனம் வலுவாக வலசை போகின்றது. இது மேற்கு ஐரோப்பாவில் அலைந்து திரியும் ஒரு அரிய பறவை ஆகும். இது ஐஸ்லாந்து வரை மேற்கு ஐரோப்பா பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வட அமெரிக்காவில் இரண்டு முறை காணப்பட்டது. அண்மையில் 14, மே, 2009 அன்று புளோரிடாவின் ஜாக்சன்வில்லில் காணப்பட்டது. [2]

துணை இனங்கள்

தொகு

இதில் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை: C. l. columbinus மற்றும் C. l. scythicus கடைசியாக C. l. crassirostris என்பது ஆகும். [3]

விளக்கம்

தொகு

இந்தப் பறவையானது நீண்ட கால்களும் தடிமனான அலகும் கொண்டது. இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவைகளுக்கு சாம்பல் முதுகும், வெள்ளை அடிப்பகுதியும் இருக்கும். நெஞ்சு, நெற்றி, கழுத்து போன்றவை கஷ்கொட்டை நிறத்தில் இருக்கும். பெண் பறவை மங்கிய நிறத்தில் இருக்கும்.

குளிர் காலத்தில் வலசை போகும்போது இவறின் தோற்றம் மாறுகிறது. அப்போது இவற்றின் நெற்றியும் கண்ணின் மேற்பகுதியும் சிவந்த மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறத்தில் இருக்கும். அலகடியில் இருந்து கண்ணின் கீழ்ப்பகுதி வழியாக காதுவரை அகன்ற பழுப்பு நிறக்கோடு செல்லக் காணலாம். உடலின் மேற்பகுதி சாம்பற் பழுப்பு நிறம். மார்பும் வயிறும் வெண்மை நிறம். மார்பில் தெளிவற்ற பழுப்பு நிற வளையம் மிக மங்கலாகத் தெரியும்.

சூழலியல்

தொகு

இதன் உணவில் பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள், வளையப் புழுகள் உள்ளன.


ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ( AEWA ) பாதுகாப்பில் இடம்பெற்ற பறவைகளில் மணல் உப்புக் கொத்தியும் ஒன்றாகும்.

Wynnum Esplanade, SE குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
 
முட்டை - MHNT

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2019). "Charadrius leschenaultii". IUCN Red List of Threatened Species 2019: e.T22693862A153879900. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22693862A153879900.en. https://www.iucnredlist.org/species/22693862/153879900. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "From Asia by air, rare bird visits Huguenot". Times-Union, Florida. Jacksonville.com. 2009-05-15. பார்க்கப்பட்ட நாள் 2009-05-17.
  3. Carlos, C. J., S. Roselaar, & J-F. Voisin (2012).

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Charadrius leschenaultii
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணல்_உப்புக்கொத்தி&oldid=3771421" இலிருந்து மீள்விக்கப்பட்டது