மணிந்தர் சிங் திர்
மணிந்தர் சிங் திர் (Mahinder Singh Dhir) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியிலும் ஆம் ஆத்மி அரசியல் கட்சியிலும் இவர் உறுப்பினராக இருந்தார். 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதியன்று பிறந்தார்.
மணிந்தர் சிங் திர் Maninder Singh Dhir | |
---|---|
சபாநாயகர் தில்லி சட்டமன்றம் | |
சட்டமன்ற உறுப்பினர் Member சங்கபுரா | |
பதவியில் 3 சனவரி 2014 – 14 பிப்ரவரி 2014 | |
முன்னையவர் | ராம் நிவாஸ் கோயல் |
பின்னவர் | பிரவீன் குமார் (ஆம் ஆத்மி கட்சி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தில்லி, இந்தியா | 20 ஏப்ரல் 1952
இறப்பு | 17 செப்டம்பர் 2018 | (அகவை 66)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மூலம்: Maninder Singh Dhir - Profile |
2013 ஆம் ஆண்டு திசம்பர் மற்றும் பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் மனிந்தர் சிங் திர் தில்லி சட்டமன்றத்தின் சபாநாயகராக இருந்தார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக சங்கபுரா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
நவம்பர் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மணிந்தர் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார். 2015 பிப்ரவரியில் 20450 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரான பிரவீன் குமாரிடம் தோல்வியுற்றார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதியன்று இவர் காலமானார்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Aam Aadmi Party to field former BJP corporator Harish Awasthi from Rithala". India Today. 2 October 2013. http://indiatoday.intoday.in/story/aam-aadmi-party-aap-former-bjp-corporator-harish-awasthi-rithala/1/312792.html.
- ↑ "Former Felhi Assembly Speaker Maninder Singh Dhir dies". United News of India. 17 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 October 2018.