மண்டேலா

2021 தமிழ் தொலைக்காட்சித் திரைப்படம்

மண்டேலா என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அரசியல் நையாண்டி தொலைக்காட்சித் திரைப்படமாகும். இப்படத்தை அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் எழுதி, இயக்கியுள்ளார். படத்தை எஸ். என். சசிகாந்த், வை நொட் ஸ்டூடியோவின் ராமச்சந்திரா ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, அதே நேரத்தில் இப்படத்தை ஓபன் விண்டோ புரொடக்சன்சின் பாலாஜி மோகன்இணைந்து தயாரித்தார். மறைந்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பெயரானது இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகி பாபு முதனைமை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது வழிகாட்டி பாத்திரத்தில் ஷீலா ராஜ்குமார் நடிக்க, கண்ணா ரவி, சங்கிலி முருகன், ஜி. எம். சுந்தர் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இப்படத்திற்கான இசையை பரத் சங்கர் அமைக்க, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்றவற்றை விது அய்யன்னா மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டது.

மண்டேலா
வகைஅரசியல் நையாண்டி
எழுத்துமடோன் அஸ்வின்
இயக்கம்மடோன் அஸ்வின்
நடிப்புயோகி பாபு
சீலா ராஜ்குமார்
இசைபரத் சங்கர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். ச்சிகாந்த்
சக்ரவர்த்தி ராமச்சந்திரா
பாலாஜி மோகன்
ஒளிப்பதிவுவிது அய்யண்ணா
தொகுப்புபிலோமின் ராஜ்
தயாரிப்பு நிறுவனங்கள்வை நொட் ஸ்டூடியோஸ்
ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ்
ஓபன் விண்டோ புரொடக்சன்ஸ்
விஸ்பெரி பிலிம்ஸ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்ஏப்ரல் 4, 2021 (2021-04-04)

இரண்டு சாதிப் பிரிவினர் ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் பின்னணியில் இந்த படம் அமைந்துள்ளது, அந்த ஊரில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளியின் ஒற்றை வாக்கு தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சூழல் ஏற்படுகிறது.[1] இப் படம் நேரடியாக 2021 ஏப்ரல் 4 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாகவும், மறுநாள் சர்வதேச அளவில் நெற்ஃபிளிக்சு மூலமாகவும் வெளியிடப்பட்டது.[2][3]

கதை தொகு

தமிழ்நாட்டில் சூரங்குடி என்ற சிறிய கிராமத்தில், சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். அந்த மக்கள் இரு சாதி பிரிவுகளாக வடக்கூர், தெக்கூர் என பிரிவுற்றுள்ளனர். கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் உடல்நலம் பாதிக்கபட்ட நிலையில், அவரது இரண்டு மகன்களும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்கிறார்கள். இந்த இருவருக்கும் பின்னால் ஊரில் உள்ள இரண்டு சாதிகள் பிரிந்து நிற்க்கின்றனர. இரு தரப்பு வாக்குகளும் சமமாக உள்ளன. இந்நிலையில் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த இளிச்சவாயன் அல்லது நெல்சன் மண்டேலா ( யோகி பாபு) என்ற உள்ளூர் சிகையலங்கார நிபுணரின் வாக்கு கூடுதலாக உள்ளது. நெல்சன் மண்டேலாவின் வாக்கை யார் பெறுவது என்பதற்கு இரு தரப்பினரும் போட்டிபோடுகின்றனர். போட்டியிடும் இரு தரப்பினரை்க் கொண்டு, மண்டேலா ஊருக்கு சாலை அமைப்பது, பள்ளியைக் கட்டுவது, பொதுக்கழிப்பிடம் கட்டுவது, சாலை விளக்குகளை அமைப்பது போன்றவற்றை செய்வித்து கிராமத்தை மேம்படுத்துகிறார். படமானது சொல்லப்படாத ஓர் ஆச்சரியத்துடன் முடிவடைகிறது. ஆனால் சூரங்குடி கிராமம் வென்றது என்று ஊகிக்கப்படுகிறது.

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இப்படம் குறித்து 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் அறிவித்தார், படத்தின் முதன்மை ஒளிப்பதிவு அன்றே தொடங்கியது.[4] இந்த படத்தில் முடிதிருத்துநர் கதாபாத்திரத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[5] இயக்குனர் பாலாஜி மோகன் படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார். இது அவரது ஓபன் விண்டோ புரொடக்சன்ஸ் பதாகையின் முதல் திரைப்படத் தயாரிப்பு முயற்சியாகும். நாளைய இயக்குநர் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட மடோன் தன்னிடம் ஆர்வத்தை வெளிப்படுத்திய பாலாஜியிடம் ஒரு கதையை சொன்னார், படம் பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக அவர் தயாரிப்பாளர் எஸ். சஷிகாந்தை கூட்டாக சேர்த்துக் கொண்டு படத்தை தயாரித்தார். கதையைப் பற்றி பேசிய பாலாஜி, "இது கிராமப்புற பின்னணியில் எடுக்கபட்ட ஒரு சமூக நையாண்டி படமாகும். இன்றைய சூழ்நிலையில் பொருத்தமான சில விஷயங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. இது நகைச்சுவையைக் கொண்டிருந்தாலும், இது மிகவும் விவேகமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும். " [6]

படத்தின் படப்பிடிப்பானது ஒரே கட்டமாக 2019 நவம்பரில் நடத்தப்பட்டது.[7]

இசை தொகு

இப்படத்திற்கு ஓர்கா இசைக்குழுவின் பரத் சங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் இசைக் கோப்பில் யுகபாரதி, அறிவு, மமிலிவா ரண்ட்ரியாமஹிஹாஜோசா, பிரதீப் குமார், பாரத் சங்கர் ஆகியோரால் எழுதப்பட்ட ஆறு பாடல்கள் இடம்பெற்றன. இதில் ஒரு பாடலான "ஓரு நீதி ஒன்பாது சாதி" என்ற பாடலானது 1921 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் தனிப்பாடலாக வெளியிடப்பட்டது,[8] மீதமுள்ள பாடல்கள் சோனி மியூசிக் முத்திரை மூலம் 20 மார்ச் 2021 அன்று வெளியிடப்பட்டன.[9]

பாடல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஒரு நீதி ஒன்பது சாதி"  அந்தகுடி இளயராஜா 4:42
2. "ஏலோ ஏலோ"  அறிவு 2:50
3. "மைக் டெஸ்டிங்"  மனோ ஈஸ்ரன் தனுஷ் 4:24
4. "எலே மண்டேலா"  அந்தோணிதாசன், மூசா மாஷியானே 4:32
5. "மண்டேலா டிரிபியூட்"  பாரதி சங்கர் 3:26
6. "Iaino – To Live"  பரத் சங்கர், சாந்தா ராண்ட்ரி, வோலோலோனா ராண்ட்ரியமிஹாஜசோவா 3:26

வெளியீடு தொகு

தனுஷின் ஜகமே தந்திரம் (2021) படத்தின் எண்ணியல் வெளியீடு தொடர்பாக, திரையரங்க உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வை நொட் ஸ்டுடியோவுக்கு எதிராக சிவப்பு அட்டை என்னும் தடையை அறிவித்தனர். மேலும் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் வரவிருக்கும் எந்த படங்களையும் விநியோகஸ்தர்கள் திரையிட மாட்டார்கள் என்று அறிவிக்கபட்டது.[10] இதன் விளைவாக, வைநெட் ஸ்டுடியோஸ் இப்படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட முடிவு செய்தது. அதன்படி படமானது விஜய் தொலைக்காட்சியில் 4 ஏப்ரல் 2021 அன்று திரையிடப்பட்டது. மேலும் நெட்ஃபிக்சில் 9 ஏப்ரல் 2021 வெளியிடபடுவதாக சொல்லப்பட்டது.[2][11] இருப்பினும், நெட்ஃபிக்சில் 2021 ஏப்ரல் 5 ஆம் நாள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில் அவர்கள் படத்தை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளியிட விரும்பினர்.[3][12] படத்தின் திரையரங்க சிறப்புக் காட்சியானது 2021 மார்ச் 31 அன்று சென்னை பி. வி. ஆர் சினிமாஸ் திரையரங்கில் நடந்தது [13]

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 "Here is the trailer of Yogi Babu's 'Mandela'" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/here-is-the-trailer-of-yogi-babus-mandela/articleshow/81692302.cms. 
 2. 2.0 2.1 "Yogi Babu's political satire Mandela to premiere on April 4!" (in en). https://www.sify.com/movies/yogi-babus-political-satire-mandela-to-premiere-on-april-4-news-tamil-vd0miofiechbg.html. 
 3. 3.0 3.1 "Mandela: TV, OTT Release date for Yogi Babu's film!". https://www.moviecrow.com/News/28051/mandela-tv-ott-release-date-for-yogi-babus-film. 
 4. "Yogi Babu's next titled 'Mandela', first-look out" (in en). 2019-07-24. https://www.thenewsminute.com/article/yogi-babus-next-titled-mandela-first-look-out-106057. 
 5. "Yogi Babu starts shooting for 'Mandela'" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yogi-babu-starts-shooting-for-mandela/articleshow/70359294.cms. 
 6. "Yogi Babu’s next is a social satire" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yogi-babus-next-is-a-social-satire/articleshow/70396549.cms. 
 7. "Yogi Babu's 'Mandela' shooting wrapped up" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/yogi-babus-mandela-shooting-wrapped-up/articleshow/72121962.cms. 
 8. "Yogi Babu Mandela Single Oru Needhi Onbathu Saathi". 2021-03-19. https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/yogi-babu-mandela-single-oru-needhi-onbathu-saathi.html. 
 9. "Check Out Latest Tamil Music Audio Songs Jukebox Of 'Mandela' Starring Yogi Babu, Sangili Murugan, G.M. Sundar, Sheela Rajkumar And Kanna Ravi | Tamil Video Songs" (in en). https://timesofindia.indiatimes.com/videos/entertainment/music/tamil/check-out-latest-tamil-music-audio-songs-jukebox-of-mandela-starring-yogi-babu-sangili-murugan-g-m-sundar-sheela-rajkumar-and-kanna-ravi/videoshow/81765135.cms. 
 10. "Red card for Y Not Studios?". https://www.moviecrow.com/News/27710/red-card-for-y-not-studios. 
 11. "Mandela – Vijay TV premiere and Netflix release dates inside, read on!" (in en-US). https://www.letsott.com/mandela-vijay-tv-premiere-and-netflix-release-dates-inside-read-on. 
 12. "Star Vijay to premiere Mandela on April 4 – Exchange4media" (in en). https://www.exchange4media.com/industry-briefing-news/star-vijay-to-premiere-mandela-on-april-4-111996.html. 
 13. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டேலா&oldid=3660591" இருந்து மீள்விக்கப்பட்டது