மண்ணூர் மகா சிவன் கோயில்
மண்ணூர் மகா சிவன் கோயில் (Mannur Maha Shiva Temple) என்பது கேரளத்தின், கோழிக்கோடு நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயிலானது, இந்தியாவின் கேரளாவில் உள்ள முல்லப்பள்ளி சாலியம் சாலையில், கடலுண்டி என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவனுக்கு அமைக்கப்பட்ட ஓர் இந்துக் கோயிலாகும். [1] இக்கோயில் பரசுராமரால் கட்டப்பட்ட 108 சிவன் கோவில்களில் ஒன்றாகும்.
மண்ணூர் மகா சிவன் கோயில் | |
---|---|
மண்ணூர் மகா சிவன் கோயில் பின்புறம், கோழிக்கோடு, கேரளம் | |
ஆள்கூறுகள்: | 11°09′10″N 75°50′01″E / 11.1528°N 75.8337°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
மாவட்டம்: | கோழிக்கோடு |
அமைவிடம்: | கடலுண்டி |
ஏற்றம்: | 49.58 m (163 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சிவன் |
தாயார்: | பார்வதி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | இரண்டு |
விபரங்கள்
தொகுஇந்தக் கோயிலானது திருவன்னூர் சிவன் கோயிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோயிலின் கஜபிருஷ்ட வடிவாக்கப்பாணியானது, இருநூறு ஆண்டுகள் பழமையானது. அன்றாடம் சிவலிங்க பூசையை பரசுராமர் திருவன்னூரில் தொடங்கி மண்ணூர் மகா சிவன் கோயிலில் முடிப்பதாக ஐதீகம் உள்ளது. இதன் தொடர்ச்சியாக இக்கோயிலின் உச்சிகாலப் பூசை சிறப்புவாய்ந்ததாக உள்ளது. ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்பபடுகிறது.[2]