மதகடிப்பட்டு

மதகடிப்பட்டு (Madagadipet) இந்தியாவின், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது வில்லியனூர் வட்டம் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கு உட்பட்ட ஓர் கிராமமாகும்.[1] இக்கிராமானது தமிழ்நாடு மாநிலத்தின் எல்லைப் பகுதியாகும்.

மதகடிப்பட்டு
Madagadipet
கிராமம்
மதகடிப்பட்டில் உள்ள புதுச்சேரி மாநிலத்தின் நுழைவாயில்
மதகடிப்பட்டில் உள்ள புதுச்சேரி மாநிலத்தின் நுழைவாயில்
நாடு India
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்புதுச்சேரி
வட்டம்வில்லியனூர்
நகராட்சிமண்ணாடிப்பட்டு
மக்கள்தொகை
 • மொத்தம்7,253
மொழி
 • அலுவல் மொழிபிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுPY-05

மக்கட் தொகை தொகு

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இக்கிராமத்தில் 1709 குடும்பங்கள் உள்ளன. இங்கு மொத்தம் மக்கள் தொகை 7253 ஆகும். இதில் ஆண்கள் 3608 மற்றும் பெண்கள் 3645 ஆகும்.[2]

போக்குவரத்து தொகு

இது புதுச்சேரி மற்றும் விழுப்புரத்திற்கு நடுவே உள்ளது. இங்கிருந்து விழுப்புரம் 16 கி.மீ தொலைவிலும், புதுச்சேரி 24 கி.மீ தொலைவிலும் உள்ளது. இதன் அருகில் உள்ள விமான நிலையம், புதுச்சேரி விமான நிலையம் (25 கி.மீ) ஆகும்.

கல்வி நிலையங்கள் தொகு

  • சிறீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
  • சிறீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மதகடிப்பட்டு, புதுச்சேரி
  • சிறீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்பக் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
  • சிறீ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி
  • வெங்கடேசுவரா கல்வியல் கல்லூரி, மதகடிப்பட்டு, புதுச்சேரி

வார சந்தை தொகு

 
மதகடிப்பட்டு வார சந்தை

இக்கிராமத்தில் ஒவ்வொறு செவ்வாய்கிழமை அன்று வார சந்தை நடைபெறுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "madagadipet".
  2. "madagadipet demographic".
  3. "மதகடிப்பட்டு வாரச் சந்தையில் விற்பனை மந்தம்".தினமணி (சனவரி 11, 2017)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதகடிப்பட்டு&oldid=3898636" இலிருந்து மீள்விக்கப்பட்டது