மதுராந்தகம் தொடருந்து நிலையம்

மதுராந்தகம் தொடருந்து நிலையம் (Maduranthakam railway station, நிலையக் குறியீடு:MMK) இந்தியாவின்தமிழ்நாடு மாநிலத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் என்னும் ஊரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.

மதுராந்தகம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்மாநில நெடுஞ்சாலை 117, மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு[1]
இந்தியா
ஆள்கூறுகள்12°30′16″N 79°53′36″E / 12.5044°N 79.8933°E / 12.5044; 79.8933
ஏற்றம்31 மீட்டர் (102 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை - விழுப்புரம் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுMMK
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சென்னை
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
மதுராந்தகம் is located in தமிழ் நாடு
மதுராந்தகம்
மதுராந்தகம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
மதுராந்தகம் is located in இந்தியா
மதுராந்தகம்
மதுராந்தகம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இது தென்னக இரயில்வே மண்டலத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. சென்னை சென்ட்ரல் இரயில்வேயின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கிய இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று மற்றும் விரைவு இரயில் மற்றும் பயணிகள் ரயில் போக்குவரத்து என இரண்டையும் கையாள்கிறது. இந்த இரயில் நிலையம் தென்னிந்தியாவின் பல பகுதிகளான சென்னை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் போன்ற இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகள் மற்றும் உள்ளூர் இரயில்களும் இந்த இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சில விரைவு ரயில்கள் மட்டுமே இங்கே நிறுத்தப்படுகின்றன. அனைத்து விரைவு ரயில்கள் 10 கி.மீ (6.2 மைல்) தொலைவில் உள்ள மேல்மருவத்தூர் இரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது. இது மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்டதாகும்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Madurantakam railway station". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014.
  2. http://Melmaruvathur[தொடர்பிழந்த இணைப்பு] railway station. Indiarailinfo. Retrieved 26 July 2014.
  3. "மதுராந்தகம் ரயில் நிலையம் ஆய்வு".