மதுரை கேடயப் பாம்பு

மதுரை கேடயப் பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
யூரோபெல்டிசு
இனம்:
யூ. மதுரென்சிசு
இருசொற் பெயரீடு
யூரோபெல்டிசு மதுரென்சிசு
(பெடோம், 1878)
வேறு பெயர்கள் [2]
  • சைல்யூபுரா மதுரென்சிசு
    பெடோம், 1878
  • யூரோபெல்டிசு ஆர்க்டிசெப்சு மதுரென்சிசு
    — விட்டேக்கர் & கேப்டன், 2004
  • யூரோபெல்டிசு மதுரென்சிசு
    — சிற்றினம்:கணேஷ், மற்றும் பலர், 2014

மதுரை சிறு பாம்பு என்றும் மதுரை கேடயப் பாம்பு என்றும் அழைக்கப்படும் யூரோபெல்டிசு மதுரென்சிசு (Uropeltis madurensis) யூரோபெல்டிடே குடும்பத்தினைச் சார்ந்த சிறிய புதைந்து வாழும் மண்ணுளிப் பாம்பு ஆகும். நச்சுத்தன்மையற்ற இப்பாம்பு மிக அருகிய இனமாக உள்ளது. இந்தச் சிற்றினம் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகின்றன .[3]

யூ. மதுரென்சிசு சிற்றினம் சமீபத்திய திருத்தங்களின் படி யூ. மதுரென்சிசு ஒரு தனித்துவமான சிற்றினமாக வெளிப்படும் வரை முன்னர் மற்றொரு சிற்றினமான யூ. ஆர்க்டிசெப்சு துணையினமாகக் கருதப்பட்டது.[4][5]

வரலாறு

தொகு

யூ. மதுரென்சிசு முதன்முதலில் 1878ஆம் ஆண்டில் ரிச்சர்ட் என்றி பெடோம் என்பவரால் விவரிக்கப்பட்டது. இவர் உயர் அலை மலைகள் அல்லது மேகமலையிலிருந்து மாதிரியைச் சேகரித்தார்.[6]

சொற்பிறப்பியல்

தொகு

மதுரென்சிசு என்ற சிற்றினப் பெயர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான மதுரையினைக் குறிக்கின்றது. இந்தச் சிற்றினத்தின் புவியியல் வரம்பை இது குறிக்கிறது.

அடையாளம் காணல்

தொகு

யூ. மதுரென்சிசு பின்வரும் பண்புகளால் அடையாளம் காணப்படுகிறது. தெளிவாக வரையறுக்கப்பட்ட, தடிமனாக, சுற்றப்பட்ட தட்டு போன்ற வால் கவசம். முதுகுப்பகுதி சீரான பழுப்பு நிறத்தில் நன்கு வரையறுக்கப்பட்ட இலகுவான தங்க மஞ்சள் வெளிப்புறம் கொண்ட செதில்களுடன் காணப்படும். வயிற்றுப்புறச் செதில்கள் 144 முதல் 157 வரை இருக்கும்.[5]

புவியியல் வரம்பு

தொகு

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மேகமலை வனவிலங்கு காப்பகத்திலும், திருவில்லிப்புத்தூர் வனவிலங்கு காப்பகத்திலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள மாநிலத்தின் பெரியாற்றுத் தேசியப் பூங்காவிலும் யூ மதுரென்சிசு காணப்படுகிறது. இது இப்பகுதியில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.

வாழ்விடம்

தொகு

வன வாழிட இனமான யூ. மதுரென்சிசு, பகுதி மலைப்பாங்கான காடுகள், மேகக்காடு மற்றும் வெப்பமண்டல மழைக்காடுகளில் 1300 மீட்டரிலிருந்து 1600 மீட்டர் உயரப் பகுதியில் காணப்படும். இது முதன்மை காடுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஏலக்காய், காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களிலும் மிதமான அளவில் காணப்படுகிறது.[1]

நடத்தை

தொகு

யூ. மதுரென்சிசு புதர்களில் வாழக்கூடிய, இரவு நேரப் பாம்பு ஆகும். இது பகல் நேரத்தில் கற்கள், விழுந்த மரக்கட்டைகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் மறைந்து வாழ்வதாக அறியப்படுகிறது. மழைக்காலங்களில், இருள் நேரங்களில் மேற்பரப்பில் தீவனத்திற்காக உலவும் தன்மையுடையது.

உணவு

தொகு

யூ. மதுரென்சிசு முக்கியமாக மண்புழுக்களை வேட்டையாடும் என்று நம்பப்படுகிறது.

பாதுகாப்பு நிலை

தொகு

யூ. மதுரென்சிசு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க செம்பட்டியலில் "அருகிய இனம்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது. வாழிட இழப்பு மற்றும் சாலைகளில் வாகனங்களால் கொல்லப்படுதல் இந்த அரிய இனத்தைப் பாதிக்கும் முதன்மை அச்சுறுத்தல்கள் ஆகும்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Ganesh, S.R.; Ghosh, A.; Giri, V. (2021). "Uropeltis madurensis ". The IUCN Red List of Threatened Species 2021: https://dx.doi.org/10.2305/IUCN.UK.2021-2.RLTS.T127942843A127942928.en. Accessed on 11 December 2022.
  2. சிற்றினம் Uropeltis madurensis at The Reptile Database www.reptile-database.org.
  3. species:Robert Alexander Pyron; Ganesh, S.R.; Sayyed, A.; Sharma, V.; Wallach, V.; Somaweera, R. (2016). "A catalogue and systematic overview of the shield-tailed snakes (Serpentes: Uropeltidae).". Zoosystema 38 (4): 453–506. doi:10.5252/z2016n4a2. https://zenodo.org/record/4578343. 
  4. Whitaker, Romulus; Captain, Ashok (2008). Snakes of India: The Field Guide. Chennai, India: Draco Books. 495 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8190187305.
  5. 5.0 5.1 Ganesh, S.R.; Aengals, R.; Ramanujam, E. (2014). "Taxonomic reassessment of two Indian shieldtail snakes in the Uropeltis ceylanicus species group (Reptilia: Uropeltidae)". Journal of Threatened Taxa 6 (1): 5305–5314. doi:10.11609/JoTT.o3636.5305-14. 
  6. Richard Henry Beddome (1878). "Description of six new Species of Snakes of the Genus Silybura, Family Uropeltidae, from the Peninsula of India". Proceedings of the Zoological Society of London 1878: 800–802.  (Silybura madurensis, new species, p. 802).

மேலும் வாசிக்க

தொகு
  • George Albert Boulenger (1890). The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. London: Secretary of State for India in Council. (Taylor and Francis, printers). xviii + 541 pp. (Silybura madurensis, p. 267).
  • Boulenger, G.A. (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families ... Uropeltidæ .... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I–XXVIII. (Silybura madurensis, pp. 156–157 + Plate IX, figures 2, 2a, 2b).
  • Sharma, R.C. (2003). Handbook: Indian Snakes. Kolkata: Zoological Survey of India. 292 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8181711694
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_கேடயப்_பாம்பு&oldid=4125700" இலிருந்து மீள்விக்கப்பட்டது