மதுலிகா ராம்தேகே

இந்தியப் பெண் தொழில் முனைவர்

மதுலிகா ராம்தேகே (Madhulika Ramteke) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக தொழிலதிபர் ஆவார். பெண்களால் நடத்தப்படும் ஒரு நுண் நிதி வங்கியை நிறுவினார்.நுண்நிதி வங்கி என்பது கிராமப்புற நகர்ப்புற ஏழை மக்களுக்குச் சிறு அளவில் சேமிப்பு, கடன் மற்றும் இதர நிதிச் சேவைகளை அளித்து, அவர்களின் வருமானத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதாகும். மார்ச் 8, 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று பன்னாட்டு மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுலிகா ராம்தேகேவுக்கு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியதற்காக நாரி சக்தி விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்.

மதுலிகா ராம்தேகே நாரி சக்தி விருது பெறுகிறார்

தொழில்தொகு

ராம்தேகே சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள இராச்நந்த்கான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.[1] படிப்பறிவில்லாத வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்த பிறகு பெற்றோருக்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார். ராம்தேகே தனது கிராமத்தில் பெண்களுக்கான சுய உதவிக் குழுவை நிறுவியபோது ஓர் இந்திய சமூகத் தொழில்முனைவோரானார். இது நுண்நிதி நிறுவனம் மூலம் உள்ளூர் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 2001 ஆம் ஆண்டு மா பம்லேசுவரி வங்கியை நிறுவியது.[2] ராம்தேகே தனது சேமிப்பை மற்ற பெண்களுடன் சேர்த்து, உடல்நலம் அல்லது பழைய மிதிவண்டி வாங்குவது போன்ற செயல்களுக்கு பணம் செலுத்த விரும்பும் மற்ற பெண்களுக்கு கடன் கொடுக்கத் தொடங்கினார். வங்கி பின்னர் நிலத்தை குத்தகைக்கு எடுக்கத் தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி வங்கி 5,372 கிளைகளைக் கொண்டிருந்தது. முழுமையாக பெண்களால் நடத்தப்பட்டது.[3] 80,000 பெண்களை உள்ளடக்கிய சிறிய சுயஉதவி குழுக்களைக் கொண்டுள்ளது.[3] குடும்பத் வன்முறையில் இருந்து தப்பிய பெண்களுக்கும் ராம்தேகே உதவுகிறார். கிராமவாசிகளுக்கு கிழங்கு வளர்ப்பது மற்றும் மண்புழு உரத்தை எவ்வாறு நிர்வகிப்பது போன்ற திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார்.[4] இரசாயன உரங்களைப் பயன்படுத்துவது மோசமான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்றும் புழுக்களால் இயற்கையாக உருவாக்கப்பட்ட உரம் சிறந்த சுவையான உணவை உற்பத்தி செய்கிறது என்றும் இவர் நம்புகிறார்.[2] 2018 ஆம் ஆண்டில் இவர் 64 கிராமங்களில் சிறந்த சுகாதாரத்திற்கான திட்டங்களை ஏற்பாடு செய்தார்.[4]

2016 ஆம் ஆண்டில் ராம்தேக்கின் சுயஉதவி குழு மூன்று சங்கங்களை அமைத்தது: பசுவின் பால் விற்பனை, ஒரு ஆயுர்வேத மூலிகை வளர்ப்பது மற்றும் சர்க்கரை-ஆப்பிள் பயிரிடுவது ஆகிய பணிகளை இவை மேற்கொண்டன.[1] இத்தகைய இவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், ராம்தேகேக்கு 2021 ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.[1]

இதையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுலிகா_ராம்தேகே&oldid=3444728" இருந்து மீள்விக்கப்பட்டது