மது காடு
மது காடு அல்லது மதுவனம் (Madhu forest) (சமஸ்கிருதம்-मधुवन) யமுனை ஆற்றின் மேற்கிலுள்ள பண்டைய வட இந்தியாவில் அமைந்த அடர்ந்த காடு. இக்காடு வானர அரசன் சுக்ரீவனுக்கு சொந்தமான தோட்டம் என்று அறியப்படுகிறது. சீதையைக் கண்டறிந்த பின் அனுமன் இந்த தோட்டத்திற்கு அங்கதன் மற்றும் பிற வானரங்களுடன் வந்தாகவும் அங்கு அவர்களுக்கு பிடித்தமான தேனை உண்டனர் என்றும் புராணம் வழியாக அறியப்படுகிறது.[1]
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும்
தொகுபண்டைய புராணமான இராமாயணத்தின்படி, மது என்னும் பெயர் கொண்ட அசுரன் ஒருவன் இந்த காட்டையும் தேசத்தையும் ஆண்டு வந்தான். கோசல நாட்டின் மன்னன் இராமனின் சகோதரனான சத்துருக்கனனால் மது அரக்கன் தோற்கடிக்கப்பட்டான். சத்துருக்கனன் அக்காட்டை சுத்தப்படுத்தி மதுரா என்னும் நகரை உருவாக்கினான். அந்த நகரே பிறகு சூரசேன இராச்சியத்தின் தலைநகராக மாறியது என்று மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. யாதவ மன்னர்கள் உக்ரசேனனும் கம்சனும் மேற்கூறிய பகுதியினை ஆட்சி செய்தனர்.
அரி வம்சத்தில்
தொகுஅரி வம்சத்தின்படி (95.5242-8), யது சந்ததியினரும் யாதவ மன்னருமான மது மதுவனத்திலிருந்து ஆட்சி செய்தான். இராமனின் சகோதரனும் மது வம்சத்தியில் வந்தவனுமான சத்துருக்கனன் மாதவ லாவணனை கொன்று, மதுவன காட்டை வெட்டி அங்கு மதுரா என்னும் நகரை உருவாக்கினான். இராமனும் அவனது சகோதரர்களும் மறைந்த பிறகு சத்வதரின் மகனும் மது வம்சத்தின் பீமன் இந்நகரை மீட்டான்.[2]