மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம்

மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம் (Mattala Rajapaksa International Airport) இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இது அம்பாந்தோட்டை பன்னாட்டு விமான நிலையம் எனவும் அழைக்கப்படுகிறது.[1] தென்னிலங்கையில் அம்பாந்தோட்டை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த வானூர்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2009ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அம்பாந்தோட்டையில் புகழ்பெற்ற ராசபக்ச குடும்பத்தின் நினைவாக இவ்வானூர்தி நிலையத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மத்தல ராஜபக்ச பன்னாட்டு வானூர்தி நிலையம்

මත්තල රාජපක්ෂ ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ
Mattala Rajapaksa International Airport
  • ஐஏடிஏ: HRI
  • ஐசிஏஓ: VCRI
    HRI is located in இலங்கை
    HRI
    HRI
    இலங்கையில் வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இலங்கை அரசு
இயக்குனர்Airport and Aviation Services (Sri Lanka) Ltd
சேவை புரிவதுஅம்பாந்தோட்டை
அமைவிடம்மத்தல, அம்பாந்தோட்டை, இலங்கை
மையம்
ஆள்கூறுகள்06°17′24″N 81°07′01.2″E / 6.29000°N 81.117000°E / 6.29000; 81.117000
இணையத்தளம்www.mria.lk
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 3,500 11,483 அஸ்பால்டு

இது ஆரம்பத்தில் தென்னிலங்கை மக்களுக்காக வீரவில என்ற இடத்தில் கட்டப்படவிருந்தது. ஆனாலும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கைவிடப்பட்டு அம்பாந்தோட்டையின் வடக்கே 15 கிமீ தொலைவில் உள்ள மத்தல என்ற இடத்தில் அமைக்கப்பட்டது. $209 மில்லியன் செலவில்[2] முதலாவது கட்டம் நவம்பர் 2009 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2013 மார்ச் 18இல் இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் இது அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[3]

சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

தொகு

மத்தளை உலங்குவானூர்தி நிலையம் மூலம் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமானங்களில் பறவைகள் மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கதாகும். இதைவிட வன விலங்குகள் மற்றும் பறவைகள் விமான நிலையத்தை அண்டாது தடுக்க நீர் நிலைகள் மூடிவைக்கப்பட்டுள்ளது[4].

நெற்களஞ்சியம்

தொகு

தற்போது ஃபிளை துபாய் என்கிற ஒரே ஒரு விமான நிறுவனம் மட்டுமே இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறது. எனவே அதிக பயன்பாடின்றி கிடக்கும் இவ்விமான நிலையத்தின் கிட்டங்களை நெற்களஞ்சியங்களாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டு, இவ்விமான நிலையத்தில் நெல் மூட்டைகளை சேமித்து வைத்துள்ளது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. News Mattala gets priority over BIA
  2. "‘Mattala airport to be tourism, cargo hub end 2012’". The Daily News. 25 April 2011 இம் மூலத்தில் இருந்து 1 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110501071729/http://www.dailynews.lk/2011/04/25/bus01.asp. பார்த்த நாள்: 25 April 2011. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-03-18.
  4. Panic as peacocks hit plane at MRIA
  5. நெற்களஞ்சியமாகும் இலங்கை சொகுசு விமான நிலையம்