வீரவில பன்னாட்டு வானூர்தி நிலையம்
வீரவில பன்னாட்டு வானூர்தி நிலையம் (Weerawila International Airport) என்பது இலங்கையில் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். இலங்கை அரசுத்தலைவராக மகிந்த ராசபக்ச பதவியேற்றதன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாளான நவம்பர் 19, 2006 அன்று தெற்கிலங்கையில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரவில என்ற இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது[1].
இவ்வானூர்தி நிலையமானது 4 கிலோமீட்டர்கள் நீளமான ஓடுபாதை மற்றும் ஒரே நேரத்தில் 14 வானூர்திகளைத் தரிக்கும் வசதி போன்றவற்றைக் கொண்டிருக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதற்காக 125 மில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கை அரசு செலவிடவிருந்தது[2]. இத்திட்டமானது 2009இல் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இத்திட்டம் பல சுற்றுச்சூழல் இடர்களைத் தோற்றுவித்ததை அடுத்து முற்றாகக் கைவிடப்பட்டது. இதற்குப் பதிலாக அம்பாந்தோட்டையில் மத்தலை என்னுமிடத்தில் புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.
தற்போதய நிலை
தொகுஇவ்விமான நிலையம் தற்போது இலங்கை வான்படைத் தளமாக இயங்குகிறது.
உசாத்துணைகள்
தொகு- ↑ வீரவில பன்னாட்டு வானூர்தி நிலையம் டெய்லி மிரர் அணுகப்பட்டது நவம்பர் 29 2006 (ஆங்கில மொழியில்)
- ↑ வீரவிலவிலும் பன்னாட்டு வானூர்தி நிலையம் பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம் வீரகேசரி, அணுகப்பட்டது நவம்பர் 29, 2006 (தமிழில்)