பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம்

(மத்தியச் சந்தை இலகுத் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பசார் செனி நிலையம் அல்லது பசார் செனி எல்.ஆர்.டி. நிலையம் (ஆங்கிலம்: Pasar Seni station அல்லது Pasar Seni LRT station மலாய்: Stesen Pasar Seni அல்லது LRT Pasar Seni சீனம்: 中央艺术坊站) என்பது கோலாலம்பூரில் அமைந்துள்ள ஓர் இலகுத் தொடருந்து நிலையமாகும்.[1]

 KJ14   SBK16 
பசார் செனி

Pasar Seni Station
இலகு விரைவு தடம்
அதிவிரைவு தடம்
பொது தகவல்கள்
அமைவிடம்பசார் செனியை அடுத்து
உரிமம்1. பிரசரனா மலேசியா
(Prasarana Malaysia) (LRT)
2. எம்.ஆர்.டி. நிறுவனம் (MRT Corp) (MRT)
இயக்குபவர்ரேபிட் கேஎல்
நடைமேடை1 தீவு நடைமேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்இணைக்கும் நிலையங்கள்  KA02 கோலாலம்பூர் தொடருந்து நிலையம்; கேடிஎம் கொமுட்டர் (KTM Komuter); கேடிஎம் இடிஎஸ் (KTM ETS)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை KJ14  உயர்த்தப்பட்ட நிலையம்
 KG16  நிலத்தடி
தரிப்பிடம்இல்லை
வரலாறு
திறக்கப்பட்டதுசெப்டம்பர் 1, 1998

பசார் செனி என்பது முன்பு கோலாலம்பூர் மத்தியச் சந்தை (Central Market) என்று அழைக்கப்பட்டது. பெட்டாலிங் சாலைக்கு (Petaling Street) மிக அருகில் இந்த நிலையம் உள்ளது. 1985-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மத்தியச் சந்தை புனரமைப்பு செய்யப்பட்டு பசார் செனி எனும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையமாக மாற்றப் பட்டது.

இதே இடத்தில் தான் பசார் செனி எல்ஆர்டி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையத்தை கிளானா ஜெயா வழித்தடம் (Kelana Jaya Line); காஜாங் வழித்தடம் (Kajang Line) ஆகிய இரு தடங்கள் இணைக்கின்றன.[2]

பொது

தொகு

கிளானா ஜெயா வழித்தடம் செப்டம்பர் 1, 1998இல் சுபாங் டெபோவிற்கும் பசார் செனி நிலையத்திற்கும் இடையே துவங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1999இல் பசார் செனி நிலையத்திலிருந்து புத்ரா முனையத்திற்கு விரிவாக்கப்பட்டது. புத்ரா முனையம் தற்போது கோம்பாக் நிலையம் என அறியப்படுகின்றது.

இந்த தொடருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் தொடருந்து நிலையம் 400 மீட்டர் தொலைவில் நடைத்தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் முதன்மையான பேருந்து முனையங்கள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

தொகு

மேலும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு