மத்திய தடய அறிவியல் ஆய்வகம்

மத்திய தடய அறிவியல் ஆய்வகம் (Central Forensic Science Laboratory) என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவாகும், இது நாட்டில் உள்ள தடயவியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பாகும்.[1]

மத்திய தடய அறிவியல் ஆய்வகம், ஹைதராபாத்

இடங்கள்

தொகு

இந்தியாவில் ஐதராபாத்து, கொல்கத்தா, சண்டிகர், புது தில்லி, குவகாத்தி, போபால் மற்றும் புனே ஆகிய ஏழு இடங்களில் மத்திய தடயவியல் ஆய்வகங்கள் உள்ளன.

ஐதராபாத்தில் உள்ள ஆய்வகம் இரசாயன அறிவியலிலும், கொல்கத்தாவில் (இந்தியாவின் மிகப் பழமையான ஆய்வகம்) உள்ள ஆய்வகம்உயிரியல் அறிவியலிலும், சண்டிகரில் உள்ள ஆய்வகம் இயற்பியல் அறிவியலிலும் சிறந்து விளங்குகிறது. புது தில்லி ஆய்வகம், தில்லியின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் கீழ் வருகிறது. மற்ற ஆய்வகங்கள் உள்துறை அமைச்சகத்தின் தடய அறிவியல் சேவைகள் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. புது தில்லியில் உள்ள ஆய்வகம் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) கட்டுப்பாட்டில் உள்ளது. இது இதன் சார்பாக வழக்குகளை விசாரிக்கிறது.

மேலும் பார்க்கவும்

தொகு
  • தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம்
  • லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் தேசிய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் நிறுவனம்

மேற்கோள்கள்

தொகு
  1. Menon, N. R. Madhava, ed. (2003). Criminal Justice India Series, Vol. 8. Allied Publishers. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7764-490-4.

வெளி இணைப்புகள்

தொகு