மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம்
மத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம் (Central Tribal University of Andhra Pradesh) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் விசயநகரம் மாவட்டத்தில் உள்ள மர்ரிவலசாவில் இன்னும் அமைக்கப்படாத ஒரு இந்திய மத்தியப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் தற்காலிக வளாகத்திலிருந்து இயங்குகிறது.
வகை | மத்தியப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2019 |
துணை வேந்தர் | டி. வி. கட்டிமணி |
அமைவிடம் | மாரீவலசா, விசயநகர மாவட்டம் , , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | ctuap |
வரலாறு
தொகுஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 க்கு பதின்மூன்றாவது அட்டவணையின் கீழ் மத்திய அரசாங்கத்தால் இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுள்ளது.[1]
2015ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச அரசால் விசயநகர மாவட்டத்தில் உள்ள ரெல்லி கிராமத்தில் 525 ஏக்கர் நிலம் இப்பல்கலைக்கழகத்திற்காக ஒதுக்கப்பட்டது.[2] இப்பல்கலைக்கழகத்திற்காக மத்திய அமைச்சரவை ₹834 கோடி (US$100 மில்லியன்) அனுமதித்துள்ளது. இதில் பல்கலைக்கழகத்தின் கட்டுமானத்திற்காக, ₹420 கோடி (US$53 மில்லியன்) முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டது.[3] 2019-20 கல்வியாண்டிற்கான கல்வி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளைத் தொடங்க, விசயநகர மாவட்டம், கொண்டகரகம் கிராமத்தில் உள்ள ஆந்திரா பல்கலைக்கழக வளாகம் தற்காலிக வளாகமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகள் முடிந்ததும் ரெல்லி கிராமத்தில் உள்ள இதன் சொந்த கட்டிடத்திற்குப் பல்கலைக்கழகம் மாற்றப்படும்.[4] ஆந்திரப் பல்கலைக்கழகம் வழிகாட்டி பல்கலைக்கழகமாகச் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.[2]
2019ஆம் ஆண்டில், மத்திய பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டம், 2019 மூலம் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.<[5] ஆகத்து 2020-ல், டி. வி. கட்டிமணி பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.[6]
ஜனவரி 2021 வரை, பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் இறுதி செய்யப்படவில்லை.[7] மென்டடா மண்டலத்தில் குந்திநாவலசையில் அடையாளம் காணப்பட்ட நிலத்தினை பார்வையிட்ட அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.[7] இது முன்மொழியப்பட்ட இடம் அல்லாததால், மற்ற இடங்களான பேச்சிபெண்டா மண்டலம், மெண்டடா மண்டலத்தில் சின்னமேடப்பள்ளி மற்றும் தத்திராஜேருவில் உள்ள மரிவலசையில் உள்ள இடங்களும் பரிசீலிக்கப்பட்டன.[8]
ஆளுகை
தொகுபல்கலைக்கழகம் மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ல் அமைக்கப்பட்ட விதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறது.[9] இந்தியக் குடியரசுத் தலைவர் பல்கலைக்கழகத்தின் பார்வையாளர் . வேந்தர் ஆவார். பல்கலைக்கழகத்தின் சம்பிரதாயத் தலைவராக இருக்கும் போது நிர்வாக அதிகாரங்கள் துணைவேந்தரிடம் இருக்கும். கல்வி அவை, நிர்வாகக் குழு, கல்விக் குழு, கல்வி வாரியம் மற்றும் நிதிக் குழு ஆகியவை பல்கலைக்கழகத்தின் நிர்வாக அமைப்புகளாகும்.[9]
பல்கலைக்கழக அவை பல்கலைக்கழகத்தின் உச்ச அதிகாரம் மற்றும் பல்கலைக்கழகத்தின் பரந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கும், பல்கலைக்கழகத்தின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கும் அதிகாரம் கொண்டது. நிர்வாக சபை என்பது பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த நிர்வாக அமைப்பாகும். கல்விக் குழுவானது பல்கலைக்கழகத்தின் மிக உயர்ந்த கல்வி அமைப்பாகும், மேலும் பல்கலைக்கழகத்தின் கல்விக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் பொது மேற்பார்வை செய்வதற்கும் பொறுப்பாகும். அனைத்து கல்வி விடயங்களிலும் நிர்வாக சபைக்கு ஆலோசனை வழங்க உரிமை உண்டு. நிதிக் கொள்கைகள், இலக்குகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களைப் பரிந்துரைக்க நிதிக் குழு பொறுப்பாகும்.[9]
கல்வி & நுழைவுத் தேர்வு
தொகுமத்திய பழங்குடியினர் பல்கலைக்கழகம், ஆந்திரப் பிரதேசம் முதுநிலை, ஒருங்கிணைந்த பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குகிறது.[10] இதன் இளநிலை படிப்புகளுக்கு மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் 2022-ஆம் கல்வி ஆண்டிலிருந்து சேர்க்கை நடைபெறுகிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Andhra Pradesh Reorganisation Act, 2014" (PDF). p. 74. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
- ↑ 2.0 2.1 "Centre sanctions ₹420 crore for tribal university at Relli" (in en-IN). தி இந்து. 5 July 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/centre-sanctions-420-crore-for-tribal-university-at-relli/article28288031.ece. பார்த்த நாள்: 22 November 2020.
- ↑ "AP Govt allots 526 acres of land for Tribal University in Kothavalasa". The Hans India. பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
- ↑ "Central tribal varsity of Andhra Pradesh to offer certificate courses". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "The Central Universities (Amendment) Act, 2019" (PDF). The Gazette of India. இந்திய அரசு. 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.
- ↑ "T.V. Kattimani appointed first V-C of tribal varsity" (in en-IN). தி இந்து. 18 August 2020. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tv-kattimani-appointed-first-v-c-of-tribal-varsity/article32388779.ece. பார்த்த நாள்: 22 November 2020.
- ↑ 7.0 7.1 G., Siva. "Land for Andhra Pradesh's Central Tribal University almost finalised" (in en). தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/city/visakhapatnam/land-for-central-tribal-university-almost-finalised/articleshow/80219415.cms.
- ↑ "Vizianagaram: Special Chief Secretary inspects lands for CTU" (in en). The Hans India. 8 January 2021. https://www.thehansindia.com/andhra-pradesh/vizianagaram-special-chief-secretary-inspects-lands-for-ctu-665896.
- ↑ 9.0 9.1 9.2 "Central Universities Act, 2009". இந்திய அரசு. 2009-03-20.
- ↑ "Courses". ctuap.in. Central Tribal University of Andhra Pradesh. Archived from the original on 24 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.