மத்திய மாகாண சபையின் கொடி
மத்திய மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான மத்திய மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பயன்பாட்டு முறை | Civil and state கொடி |
---|---|
அளவு | 2:3 |
ஏற்கப்பட்டது | 14 நவம்பர், 1987 |
வடிவம் | நடுவில் செந்நிறப் பின்னணியில் சிங்கமும், அதன் இரு பக்கங்களிலும், சூரிய சந்திரர்கள், தாமரை ஆகிய சின்னங்களும் உள்ளன. |
அமைப்பு
தொகுமத்திய மாகாணத்தின் கொடியின் நடுவில் சிவப்பு நிறச் சதுரத்தினுள் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கம் காணப்படுகிறது. இச்சிவப்புச் சதுரத்தின் விளிம்பில் மஞ்சள் நிறக் கரையும், அதற்கு உள்ளே நான்கு மூலைகளிலும் அரசிலைச் சின்னங்களும் காணப்படுகின்றன. இதன் இரு பக்கங்களிலும் சிவப்பு நிற இரட்டைக் கோடுகளால் வரையப்பட்ட செவ்வகங்கள் உள்ளன. இவற்றுள், இடப்புறச் செவ்வகத்துள் சூரியனையும், சந்திரனையும் குறிக்கும் சின்னங்கள் ஒன்றன்கீழ் ஒன்றாக அமைந்துள்ளன. வலது பக்கச் செவ்வகத்தினுள் இரண்டு தாமரைச் சின்னங்கள் உள்ளன. இம்மூன்றுக்கும் மேலே மத்திய மாகாணம் எனத் தடித்த எழுத்துக்களில் சிங்களத்திலும், கீழே ஒரே வரியில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வெள்ளை நிறப் பின்னணியைக் கொண்டுள்ளன. இவ்வெள்ளை நிறப் பகுதியைச் சுற்றிலும், கொடியின் விளிம்பில் நாற்புறமும் சிவப்பு நிறப் பட்டையும், அப்பட்டையின் நடுவில் மஞ்சள் நிறத்தில் புள்ளிக் கோடும் உள்ளன.[1]
மேற்படி கொடியில் செந்நிறப் பின்னணியில் அமைந்த சிங்கம் இம்மாகானத்துள் அமைந்த கண்டி மாவட்டத்தையும், வெள்ளைப் பின்னணி மாத்தளை மாவட்டத்தையும், தாமரைச் சின்னங்கள் நுவரெலியா மாவட்டத்தையும் குறிக்கின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ மத்திய மாகாணத்தின் கொடி பரணிடப்பட்டது 2014-12-19 at the வந்தவழி இயந்திரம், மத்திய மாகாண சபையின் இணையத்தளம்.
- ↑ மத்திய மாகாணத்தின் கொடி பரணிடப்பட்டது 2014-12-19 at the வந்தவழி இயந்திரம், மத்திய மாகாண சபையின் இணையத்தளம்.