மனசை ப. கீரன்
மனசை ப.கீரன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள் எனப் பல படைத்துள்ளார். இவர் அகில இந்திய வானொலி இயக்குநராகப் பணியாற்றியவர்.[1]
மனசை ப. கீரன் | |
---|---|
பிறப்பு | 24 ஏப்பிரல் 1938 |
இறப்பு | 28 மே 2012 (அகவை 74) |
பணி | கவிஞர் |
பிறப்பும் இளமையும்
தொகுவட ஆற்காடு மாவட்டம் மன்சுராபாத் எனும் ஊரில் ச. வே. பஞ்சாட்சரம்-சாரதாம்பாள் தம்பதியருக்கு மகனாக ஏப்ரல் 24, 1938 இல் பிறந்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பட்ட வகுப்பில் தமிழில் முதல் நிலையில் தேர்ச்சிப் பெற்று சேதுபதி தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளார்.[1]
தமிழ்ப் பணிகள்
தொகுசென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்[1] வானொலியில் நூற்றுக்கணக்கான கவிதைகள் வாசித்துள்ளார். கவியரங்கக் கவிதைகளில் பங்கு பெற்றும் கவிதைகள் படைத்துள்ளார். 1956களில் , ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று தமிழ்ச் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஆகஸ்டு 28, 1990 இல் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். 1979 இல் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூலுக்குப் பரிசு வழங்கும் விழாவில் இவர் எழுதிய தேர்க்கூட்டம் எனும் நாடகநூல் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.
படைப்புகள்
தொகுகவிதை நூல்கள்:
- காற்றிலே மிதந்த கவிதைகள்
- மணமாலை
- கடை திறக்கலாம்
- கவிதைப் பாலம்
நாடகங்கள்[2]:
- தேர்க்கூட்டம்
- உயிர்ப்பொம்மை
சிறுகதைகள் :
- பொன்னி
- பங்காளி
- மஞ்சள் மாளிகை
- மருத்துவச்சி மருதாயி
பிற நூல்கள் :
- இராமானுசர்
- அறிவியல் அறிஞர்கள்
- உலகச் சந்தை
- சில நாடுகள் சில செய்திக
- செயற்கரிய செய்தார்
- இரண்டு இதிகாசங்கள்
- அத்தையும் அண்ணனும்
- கல்வி ஒலிப்பரப்பின் கதை.
பெற்ற விருதுகள்
தொகு- 1984 இல் தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது[1]
- 1994 இல் நாகப்பன்-இராசாம்மாள் அறக்கட்டளை இலக்கிய விருது
- 1986 இல் கலிபோர்னியா உலகக் கவிஞர் மாநாட்டில் கௌரவ டாக்டர் பட்டம்
மறைவு
தொகுகீரன் தனது 75 ஆவது அகவையில், மே 28, 2012 இல் சென்னையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "காலமானார் மனசை ப.கீரன்". தினமணி நாளிதழ். செப்டம்பர் 20, 2012.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ படைப்பாளர்களும் படைப்புகளும்
உசாத்துணை
தொகு- ப.முத்துக்குமாரசாமி, 'இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க்கவிஞர்கள்'- பழனியப்பா பிரதர்ஸ்-2004.