மனிதரில் குருதிக் குழு முறைமைகள்

(மனிதரில் குருதிக் குழு முறைமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகம் (ISBT - International Society of Blood Transfusion) மனிதரில் 39 குருதி குழு முறைமைகள் (Blood Group Systems) இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது[1]. அவற்றில் முக்கியமானவையாக ஏபிஓ குருதி குழு முறைமையும், ஆர்எச் குருதி குழு முறைமையும் கருதப்படுகின்றன. இந்த ஏபிஓ, ஆர்எச் பிறபொருளெதிரியாக்கிகளைப் போன்ற வேறும் பல பிறபொருளெதிரியாக்கிகள் குருதிச் சிவப்பணுவின் மென்சவ்வின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. எடுத்துக் கட்டாக ஒரு குருதியானது ஏபிஓ, ஆர்எச் நேர் நிலையை (Rh positive) கொண்டிருக்கும் அதேவேளையில், MN நேர் (MNS system), K நேர் (Kell system), Lea or Leb நேர் (Lewis system) ஆகவும் இருக்கலாம். அனேகமான இந்த குழு முறைமைகளின் பெயர், முதன் முதலில் எந்த ஒரு நோயாளியில் குறிப்பிட்ட பிறபொருளெதிரி அறியப்பட்டதோ, அவரின் பெயரில் குறிப்பிடப்பட்டது.

அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகத்தின் வரைவிலக்கணப்படி, குருதிக் குழு முறைமையானது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையில் (locus) அமைந்த எதிருருக்களாலோ, அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறுக்குப் பரிமாற்றம் (crossover) மூலம் மீண்டிணைதல் (recombination) நிகழும் சாத்தியமற்ற, மிகவும் நெருக்கமான அமைந்த அமைப்பொத்த/ சம (homologous) மரபணுக்களாலோ கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்[2].

ஏபிஓ குருதி குழு முறைமை

தொகு

இந்த முறைமையில் குருதியானது A, B, AB, O என்னும் நான்கு முக்கியமான வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆனாலும் குருதி மாற்றீட்டை சிக்கலாக்கும் தன்மை கொண்ட 200 க்கும் மேற்பட்ட வேறுபட்ட சிறிய வகைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. இவை அரிதான குருதி வகைகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இவை ஓரிரு எழுத்துக்களால் + அல்லது - குறியீட்டுடன் பெயரிடப்படும். ஆனாலும் சிலர் அதிக எழுத்துக்களால், விபரமாகக் குறிப்பிட்டு நீண்ட பெயர்களாகவும் அடையாளப்படுத்துவர்.

ஆர்எச் குருதி குழு முறைமை

தொகு

இந்த முறைமையில் குருதியானது ஆர்எச்-நேர் (Rh+), ஆர்எச்-எதிர் (Rh-) என்னும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆர்எச்-நேர் என்பது குருதிச் சிவப்பணுக்களில் சில பிறபொருளெதிரியாக்கிகள் இருப்பதையும், ஆர்எச்-எதிர் என்பது அந்த பிறபொருளெதிரியாக்கிகள் இல்லாத நிலையையும் குறிக்கின்றது.

குருதிக் குழு முறைமைகள்

தொகு
International Society of Blood Transfusion (ISBT) எண் முறைமையின் பெயர் முறைமையின் அடையாளம் பிறபொருளெதிரித்தூண்டி (epitope) அல்லது காவி (carrier), குறிப்பு நிறப்புரியின் எண்
001 ஏபிஓ குருதி குழு முறைமை / ABO ABO Carbohydrate (N-Acetylgalactosamine, galactose). A, B and H antigens mainly elicit IgM antibody reactions, although anti-H is very rare, see the Hh antigen system (Bombay phenotype, ISBT #18). 9
002 MNS பிறபொருளெதிரியாக்கி முறைமை MNS GPA / GPB (glycophorins A and B). Main antigens M, N, S, s. 4
003 P பிறபொருளெதிரியாக்கி முறைமை P1 கிளைக்கோகொழுமியம். Antigen P1. 22
004 ஆர்எச் குருதி குழு முறைமை / Rh RH Protein. C, c, D, E, e antigens (there is no "d" antigen; lowercase "d" indicates the absence of D). 1
005 Lutheran பிறபொருளெதிரியாக்கி முறைமை LU Protein (member of the immunoglobulin superfamily). Set of 21 antigens. 19
006 Kell பிறபொருளெதிரியாக்கி முறைமை KEL Glycoprotein. K1 can cause hemolytic disease of the newborn (anti-Kell), which can be severe. 7
007 Lewis பிறபொருளெதிரியாக்கி முறைமை LE Carbohydrate (fucose residue). Main antigens Lea and Leb - associated with tissue ABH antigen secretion. 19
008 Duffy பிறபொருளெதிரியாக்கி முறைமை FY Protein (chemokine receptor). Main antigens Fya and Fyb. Individuals lacking Duffy antigens altogether are immune to malaria caused by Plasmodium vivax and Plasmodium knowlesi. 1
009 Kidd பிறபொருளெதிரியாக்கி முறைமை dbMHC Protein (urea transporter). Main antigens Jka and Jkb. 18
010 Diego பிறபொருளெதிரியாக்கி முறைமை DI Glycoprotein (band 3, AE 1, or anion exchange). Positive blood is found only among East Asians and Native Americans. 17
011 Yt பிறபொருளெதிரியாக்கி முறைமை YT Protein (AChE, acetylcholinesterase). 7
012 XG பிறபொருளெதிரியாக்கி முறைமை XG Glycoprotein. X
013 Scianna பிறபொருளெதிரியாக்கி முறைமை SC Glycoprotein. 1
014 Dombrock பிறபொருளெதிரியாக்கி முறைமை DO Glycoprotein (fixed to cell membrane by GPI, or glycosyl-phosphatidyl-inositol). 12
015 Colton பிறபொருளெதிரியாக்கி முறைமை CO Aquaporin 1. Main antigens Co(a) and Co(b). 7
016 Landsteiner-Wiener பிறபொருளெதிரியாக்கி முறைமை LW Protein (member of the immunoglobulin superfamily). 19
017 Chido பிறபொருளெதிரியாக்கி முறைமை CH/RG C4A C4B (complement fractions). 6
018 Hh பிறபொருளெதிரியாக்கி முறைமை H Carbohydrate (fucose residue). 19
019 XK (புரதம்) / Kx XK Glycoprotein. X
020 Gerbich பிறபொருளெதிரியாக்கி முறைமை GE GPC / GPD (Glycophorins C and D). 2
021 Cromer பிறபொருளெதிரியாக்கி முறைமை CROM Glycoprotein (DAF or CD55, regulates complement fractions C3 and C5, attached to the membrane by GPI). 1
022 Knops பிறபொருளெதிரியாக்கி முறைமை KN Glycoprotein (CR1 or CD35, immune complex receptor). 1
023 Indian பிறபொருளெதிரியாக்கி முறைமை IN Glycoprotein (CD44 adhesion function?). 11
024 OK பிறபொருளெதிரியாக்கி முறைமை / Ok OK Glycoprotein (CD147). 19
025 Raph பிறபொருளெதிரியாக்கி முறைமை MER2 Transmembrane glycoprotein. 11
026 JMH பிறபொருளெதிரியாக்கி முறைமை JMH Protein (fixed to cell membrane by GPI). 6
027 Ii பிறபொருளெதிரியாக்கி முறைமை I Branched (I) / unbranched (i) polysaccharide. 6
028 Globoside பிறபொருளெதிரியாக்கி முறைமை GLOB Glycolipid. Antigen P. 3
029 GIL பிறபொருளெதிரியாக்கி முறைமை GIL Aquaporin 3. 9
030 Rh- இணைந்த கிளைக்கோ புரதம் RHAG Rh-associated glycoprotein. 6

வெளி இணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Table of blood group systems". International Society of Blood Transfusion. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-11-14. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. ISBT Committee on Terminology for Red Cell Surface Antigens. "Terminology Home Page". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2009-02-13.