மனுபாய் ஜோதானி

மனுபாய் லல்லுபாய் ஜோதானி (Manubhai Lallubhai Jodhani 28 அக்டோபர் 1902 - 29 டிசம்பர் 1979) குஜராத்தி எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், பறவையியலாளர், தாவரவியலாளர் மற்றும் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த பதிப்பாசிரியர் ஆவார். இவர் 15 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். [1]

மனுபாய் ஜோதானி
ஜோதானி 1946இல்
ஜோதானி 1946இல்
தொழில்எழுத்தாளர், நாட்டுப்புறவியலாளர், பறவையியலாளர், தாவரவியலாளர்

வாழ்க்கை

தொகு

1902 அக்டோபர் 28 அன்று பர்வாலாவில் (தற்போது இது போடாட் மாவட்டத்தில் உள்ளது) பிறந்தார். [2] [3] [4] இவர் தனது ஆரம்ப பள்ளி கல்வியை லீம்புடியில் பெற்றார். 1920 இல் பார்வாலாவில் பள்ளி ஆசிரியரானார். 1930 இல் அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்வதற்காக தனது பதவியினை பதவி விலகினார்.[5] தொடர்ந்து மகாத்மா காந்தி முன்னெடுத்த உப்பு சத்தியாகிரகத்தில் கல்ந்துகொண்டார்.தோல்ராவில் நடந்த உப்புச் சத்யாகிரகத்தில் இவர் முக்கிய பங்காற்றினார். அதனால் இவர் மீது ஆங்கிலேய அரசு கைதாணை பிறப்பித்தது.[6]

இவர் 29 டிசம்பர் 1979 இல் இறந்தார். [4] [7] இவரது மகன் வசந்த்குமார் ஜோதாயும் அறிவியல் மற்றும் விலங்குகள் குறித்த எழுத்தாளர் ஆவார். [2]

படைப்புகள்

தொகு

ஜோதனி நாட்டுப்புற இலக்கியத் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளார். [8] [5] இவர் ஒரு பறவையியலாளர் மற்றும் தாவரவியலாளராகவும் இருந்துள்ளார். [9] குஜராத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்தான கதைகளின் முன்னோடியாக இவர் அறியப்பட்டார்.[10][11]

நாட்டுப்புற இலக்கியம் குறித்த இவரது படைப்புகளில் சோரதி ஜவாஹிர் (1930), சோரதி விபூட்டோ (1964), ராண்டல்னா கீட்டோ, குஜராத்தி லோக்சஹித்யா மாலா மற்றும் ஜனபாத் (1940, 1944, 1955; ஸ்கெட்சஸ்) ஆகியன அடங்கும். [12]

இவரது சிறுகதைகளில் ஷில்வதி (1928) மற்றும் சுந்தரியோனா சங்கர் ஆகியன ஆகும். நக்மதி (1932) இவர் எழுதிய ஒரே புதினம் ஆகும். காதிமிதி பாலாவடோ மற்றும் குமரோனி பிரவாஸ்கதா ஆகியன குழந்தைகள் இலக்கியத்திற்கான இவரது படைப்புகள் ஆகும். [2]

இவர் சரத் சந்திர சட்டோபாத்யாயின் பிந்தூர் சேலே அஸ் பிந்து (1939) என்பதனை மொழிபெயர்த்தார். [13]

அங்கீகாரம்

தொகு

அகமதாபாத்தில் உள்ள பால்டியில் இவரது பெயரில் ஒரு சாலை உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Akademi, Sahitya. Whos Who Of Indian Writers (in ஆங்கிலம்). Dalcassian Publishing Company.
  2. 2.0 2.1 2.2 Whos Who Of Indian Writers. New Delhi: Sahitya Akademi. 1961. p. 143.Whos Who Of Indian Writers. New Delhi: Sahitya Akademi. 1961. p. 143.
  3. "મનુભાઈ જોધાણી" (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
  4. 4.0 4.1 Desai, Ratilal Deepchand. Amruta-Sameepe (in குஜராத்தி). Gurjar Granthratna Karyalaya.Desai, Ratilal Deepchand (2003). "7. ધિંગા લોકસાહિત્યકાર શ્રી મનુભાઈ જોધાણી". In Desai, Nitin R. (ed.). Amruta-Sameepe (in Gujarati). Ahmedabad: Gurjar Granthratna Karyalaya. pp. 373–374.
  5. 5.0 5.1 "મનુભાઈ જોધાણી" (in குஜராத்தி). Gujarati Sahitya Parishad. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28."મનુભાઈ જોધાણી" (in Gujarati). Gujarati Sahitya Parishad. Retrieved 2020-04-28.
  6. Madhad, Raghavji (2020-03-25). "આંખો આંસુથી વહેવા લાગી હતી: સૌરાષ્ટ્રના સ્વાતંત્ર્ય સૈનિકો અને લડતો". Sandesh. பார்க்கப்பட்ட நாள் 2020-04-28.
  7. Gujarat. Smt Hiralaxmi Navanitbhai Shah Dhanya Gurjari Kendra, Gujarat Vishvakosh Trust.
  8. "Contribution of Gujarat to the Field of Folklore". Indian Folklore Research Journal (National Folklore Support Centre) (2–5): 77. 2002. https://books.google.com/books?id=MxraAAAAMAAJ&q=manubhai+jodhani&dq=manubhai+jodhani. 
  9. Daniel, J. C.; Ali, Sálim; Ugra, Gayatri (2003). Petronia: Fifty Years of Post-independence Ornithology in India : a Centenary Dedication to Dr. Salim Ali, 1896-1996. Bombay Natural History Society. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-566653-3.
  10. JAMUNA, K. A. (2017-06-01). Children's Literature in Indian Languages (in ஆங்கிலம்). Publications Division Ministry of Information & Broadcasting. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-2456-1.
  11. Jamunā, Ke E.; Division, India Ministry of Information and Broadcasting Publications (1982). Children's literature in Indian languages (in ஆங்கிலம்). Publications Division, Ministry of Information and Broadcasting, Govt. of India.
  12. Magara, Naresh (January–February 2019). "ગુજરાતી લોકસાહિત્યક્ષેત્રે થયેલ સંશોધન – સંપાદનની કામગીરીની રૂપરેખા" (in gu). Sahitya Setu (Tanvi Shukla) 9 (49). பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-2372. http://www.sahityasetu.co.in/issue49/magara.php. 
  13. Śaratcandra o Bhāratīẏa sāhitya (in Bengali). Nikhila Bhārata Baṅga Sāhitya Sammelana, Dillī Sākhā. 1976. p. 1957.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனுபாய்_ஜோதானி&oldid=3767325" இலிருந்து மீள்விக்கப்பட்டது