மன்னார் அமுதன்

மன்னார் அமுதன் (Mannar Amuthan) அல்லது கௌதமன் என்ற புனைபெயரில் அறியப்படும் சோசப்பு அமுதன் இடானியல் அல்லது ஜோசப் அமுதன் டானியல், தமிழ் எழுத்தாளர் ஆவார்.[3] இவர் பாக்கள், சிறுகதைகள், கட்டுரைகள் முதலானவற்றை எழுதி வருகின்றார்.[1]

மன்னார் அமுதன்
பிறப்புசோசப்பு அமுதன் இடானியல்
1984[1]
சின்னக்கடை, மன்னார், இலங்கை[1]
தேசியம்இலங்கையர்
மற்ற பெயர்கள்கௌதமன்
அறியப்படுவதுஎழுத்தாளர்
சமயம்கிறித்தவர்[2]
பெற்றோர்அனிசிடசு பிரின்சு தேவேந்திரன் சோசப்பு, சகாயம் விராசுப்பிள்ளை சோசப்பு

வாழ்க்கைக் குறிப்புதொகு

இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள சின்னக்கடையில், 1984ஆம் ஆண்டில் இடானியல் சோசப்பு பிறந்தார்.[1] இவர் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.[1] பின், 1990இல் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்ற பின், விருதுநகர் மாவட்டத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.[4]

எழுதிய நூல்கள்தொகு

  • விட்டு விடுதலை காண், பாத்தொகுப்பு.[5]
  • அக்குரோணி, பாத்தொகுப்பு.[6]

விருதுகளும் பட்டங்களும்தொகு

2011இல், தடாகம் கலை இலக்கிய வட்டமானது, மன்னார் அமுதனுக்கு அகத்தியர் விருதையும் கலைத்தீபப் பட்டத்தையும் வழங்கியது.[7] கலைமுத்துப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 கணபதி சர்வானந்தா (2015 நவம்பர் 22). "மன்னார் அமுதன்; புரட்சிகரமான கருத்துகளைத் தயக்கமின்றி திரைப்பதிவாக்கத் துடிக்கும் குறும்படப் படைப்பாளி". யாழ் தினக்குரல். 
  2. "கிறிஸ்தவ மதக் கருத்துக்கள் மக்கள் மனதில் பதிய கூத்துக்கலை உதவியது கவிஞர் மன்னார் அமுதன்". வீரகேசரி. 2011 மார்ச் 27. pp. 9. 
  3. "மன்னார் அமுதன்". தமிழ் ஆதர்ஸ். பார்த்த நாள் 2015 நவம்பர் 22.
  4. க. கோகிலவாணி (2009 ஆகத்து 30). "இலக்கிய உலகின் முடி சூடா ராணி கவிதை". மித்திரன். 
  5. 5.0 5.1 க. கோகிலவாணி (2011 செப்டம்பர் 7). "'ஏரோட்டினாலும் தேரோட்டினாலும் பாடிக்கொண்டே வாழ்ந்தவர் நாம்'". தமிழ்மிரர். பார்த்த நாள் 2015 நவம்பர் 22.
  6. K. S. Sivakumaran (2011 திசம்பர் 7). "Tamil poems in translation". Daily News. பார்த்த நாள் 2015 நவம்பர் 22.
  7. "தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் படைப்பாளிகள் கௌரவிப்பு". தமிழ்மிரர் (2011 சூலை 8). பார்த்த நாள் 2015 நவம்பர் 22.

வெளியிணைப்புகள்தொகு

தளத்தில்
மன்னார் அமுதன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_அமுதன்&oldid=2716316" இருந்து மீள்விக்கப்பட்டது