மன்யதா தத்
மன்யதா தத் (Manyata Dutt)(பிறப்பு தில்நவாசு சேக்; 22 சூலை 1978), மன்யதா என்று அழைக்கப்படுபவர், இந்தியத் தொழிலதிபர், முன்னாள் நடிகை மற்றும் சஞ்சய் தத் தயாரிப்பு நிறுவனத்தின் தற்போதைய முதன்மை செயல் அலுவலர் ஆவார். இவர் 2008-ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை மணந்தார்.[1] பிரகாஷ் ஜாவின் 2003-ல் வெற்றி பெற்ற கங்காஜலில் குத்தாட்டப் பாடல் மூலம் இவர் மிகவும் பிரபலமானவர்.[1][2][3]
மன்யதா தத் Manyata Dutt | |
---|---|
தனது பிறந்தநாளின் போது 2017-ல் | |
பிறப்பு | தில்நவாசு சேக் 22 சூலை 1978[1] மும்பை, மகராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி |
|
அமைப்பு(கள்) | சஞ்சய் தத் தாயரிப்பு நிறுவனம் (முதன்மை செயல் அலுவலர்) |
வாழ்க்கைத் துணை | சஞ்சய் தத் (தி. 2008) |
பிள்ளைகள் | 2 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமன்யதா தத் ஒரு முஸ்லீம் குடும்பத்தில்[4] 22 சூலை 1978 அன்று மும்பையில் பிறந்தார்.[1][3] இவர் துபாயில் வளர்ந்தவர் ஆவார்.[3] இவர் திரையுலகில் சாரா கான் என்று அழைக்கப்பட்டார்.[1] 2008-ல் கமல் ரஷித் கானின் தேஷ்ட்ரோஹியில் இவர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜாவால் இவருக்கு "மன்யாதா" என்ற திரைப் பெயர் இடப்பட்டது.[1] ஆனால் இவரது தந்தை இறந்தவுடன் நட்சத்திரமாக வேண்டும் என்ற இவரது விருப்பம் முடிவுக்கு வந்தது. குடும்ப வணிகத்தின் பொறுப்பைக் கவனிக்கத் தொடங்கினார்.
மன்யதா 7 பிப்ரவரி 2008 அன்று கோவாவில் சஞ்சய் தத்தை மணந்தார்.[5] இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இவர்களுக்கு 21 அக்டோபர் 2010 அன்று ஷாஹ்ரான் என்ற ஆண் குழந்தை இக்ரா என்ற பெண் குழந்தை என இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர்.[6][7]
தொழில்
தொகுதிருமணத்திற்கு முன்பும், தத்தை சந்திப்பதற்கு முன்பும், நடிகை நிமித் வைஷ்ணவ் இணையாக லவ்வர்ஸ் லைக் அஸ் போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்தார்.[8] பின்னர் படத்தின் உரிமையை சஞ்சய் தத் ரூ. 20 லட்சம் கொடுத்துப் பெற்றார்.[8]
கங்காஜல் திரைப்படத்தில் "அல்ஹத் மஸ்த் ஜவானி" என்ற குத்தாட்டப் பாடல் மான்யதா தத் நடித்துப் படமாக்கப்பட்டுள்ளது.
பெருமை
தொகுசஞ்சய் தத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சூன் 29, 2018 அன்று வெளியிடப்பட்ட ராஜ்குமார் கிரானி இயக்கிய வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சஞ்சுவில், இவரது பகுதியை நடிகை தியா மிர்சா நடித்துள்ளார். ரன்பீர் கபூர் சந்சய் சத் வேடத்தில் நடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Singh, Harneet (29 January 2009). "From performing item numbers to becoming Mrs. Dutt: Manyata". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.Singh, Harneet (29 January 2009). "From performing item numbers to becoming Mrs. Dutt: Manyata". The Indian Express. Retrieved 30 May 2016.
- ↑ "Sanjay Dutt told me never give up, says wife Manyata". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ 3.0 3.1 3.2 Lalwani, Vickey (5 December 2010). "From Manyata to Mrs Dutt!". Mumbai Mirror. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.Lalwani, Vickey (5 December 2010). "From Manyata to Mrs Dutt!". Mumbai Mirror. Retrieved 30 May 2016.
- ↑ "Sanjay Dutt and Manyata's marriage is valid, rules court". Zee News. 28 May 2008. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ Rao, Girish. "Sanjay Dutt weds>Manyata". Rediff. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Manyata Dutt delivers twins". The Times of India. 21 October 2010. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Sanjay Dutt's twins watch 'Policegiri' with their mom Manyata". News 18. 3 July 2013. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ 8.0 8.1 Shah, Kunal M. (29 February 2008). "Bride and prejudice". Mumbai Mirror. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
வெளி இணைப்புகள்
தொகு- Manyata Dutt at IMDb
- Manyata Dutt at Bollywood Hungama