தியா மிர்சா

இந்திய வடிவழகி மற்றும் நடிகை

தியா மிர்சா ரெக்கி (பிறப்பு தியா ஆண்ட்ரிச் ; 9 திசம்பர் 1981 [1] ) என்பவர் ஒரு இந்திய நடிகையாவார். இவர் முதன்மையாக இந்தித் திரைப்படங்களில் பணிபுரிகிறார். 2000 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் பட்டம் வென்ற பிறகு, 2000 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் இன்டர்நேசனல் அழகி பட்டத்தை வென்றார். ரெஹ்னா ஹை டெர்ரே தில் மெய்ன் (2001) என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தியா மிர்சா
2023 இல் தியா மிர்சா
பிறப்புதியா ஆண்ட்ரிச்
9 திசம்பர் 1981 (1981-12-09) (அகவை 43)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலங்காணா), இந்தியா
பணி
  • நடிகை
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது
பட்டம்மிஸ் ஏசியா பசிபிக் இண்டர்நேசனல் 2000
பெமினா மிஸ் இந்தியா ஆசியா பசிபிக் 2000
வாழ்க்கைத்
துணை
  • சாகில் சங்கா
    (தி. 2014; divorce 2019)
  • வைபவ் ரேகி (தி. பிழை: செல்லாத நேரம்)
பிள்ளைகள்2

அதைத் தொடர்ந்து இவர் தஸ் (2005), லகே ரஹோ முன்னா பாய் (2006), ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் (2007), சஞ்சு (2018) உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தன் முன்னாள் கணவர் சாகில் சங்காவுடன் இணைந்து பார்ன் ஃபிரீ என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். [2] [3] விவாகரத்துக்குப் பிறகு, இவர் 2019 ஆம் ஆண்டில் தானே சொந்தமாக ஒன் இந்தியா ஸ்டோரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் பிறகு இவர் காபிர் (2019), ஐசி 814: தி காந்தஹார் ஹைஜாக் (2024) ஆகிய வலை தொடர்களில் நடித்தார்.

துவக்க கால வாழ்க்கை

தொகு

மிர்சா இந்தியாவின் ஐதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை, ஃபிராங்க் ஹேண்ட்ரிச், மியூனிக்கைத் தளமாகக் கொண்ட ஒரு ஜெர்மன் வரைகலை மற்றும் தொழில்துறை கண்காட்சி வடிவமைப்பாளரும், கட்டடக் கலைஞரும், ஓவியரும், உட்பகுதி வடிவமைப்பாளரும் ஆவார். இவரது தாயார் தீபா, ஒரு பெங்காலி உட்பகுதி வடிவமைப்பாளரும், நிலத்தோற்ற வடிவமைப்பாளரும் ஆவார். மேலும் அவர் குடிநோயாளிகள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு உதவவும் தன்னார்வத் தொண்டராக உள்ளார். இவருக்கு நான்கரை வயது இருந்தபோது, இவருடைய பெற்றோர் மணமுறிவு செய்து கொண்டனர். [4] [5] இவரது தாயார் ஐதராபாத்தைச் சேர்ந்த அகமது மிர்சா என்ற முசுலிம் நபரை மணந்த பிறகு, இவர் தனது மாற்றாந்தந்தையின் குடும்பப் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டார். அவர் 2003 இல் இறந்தார். [4]

துவக்கத்தில் இருபாலர் பள்ளியான வித்யாரண்யா உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, மிர்சா கைதராபாத்தில் உள்ள மகளிர் பள்ளியான நாசர் பள்ளியில் சேர்ந்தார். பின்னர் இவர் ஸ்டான்லி ஜூனியர் கல்லூரியில் பயின்று, ஐதராபாத் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [6]

தொழில்

தொகு

வடிவழகியாக

தொகு

மிர்சா கல்லூரியில் படிக்கும் போது நீரஜின் மல்டி மீடியா ஸ்டுடியோ என்ற ஊடக நிறுவனத்தில் வணிக நிர்வாகியாகப் பணியாற்றினார். [7] அதே நேரத்தில், இவர் லிப்டன், வால்ஸ் ஐஸ்கிரீம், எமாமி மற்றும் பல வணிக்க் குறியீடுகளின் அச்சு விளம்பரங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் வடிவழகியாகத் தோன்றினார். 2000 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், பின்னர் 2000 ஆம் ஆண்டு மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றார். [8] [9] 2013 ஆம் ஆண்டில், டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட "50 அழகான முகங்கள்" என்ற பட்டியலில் மிர்சாவுக்கு 15 வது இடத்தைக் கொடுத்தது. [10]

நடிகையாக

தொகு

இவர் கௌதம் மேனன் இயக்கிய ரெஹ்னா ஹை டெர்ரே தில் மேன் என்ற படத்தில் அறிமுகமானார், இது மேனனின் தமிழ் திரைப்படமான மின்னலேயின் மறு ஆக்கம் ஆகும். [11] பின்னர் இவர் அலக், தம், தீவானப்பன், தும்கோ ந பூல் பாயேங்கே, தும்சா நஹின் தேகா: எ லவ் ஸ்டோரி, பரினீதா, தஸ், லகே ரஹோ முன்னா பாய், சலாம் மும்பை போன்ற படங்களில் தோன்றினார். 2018 ஆம் ஆண்டு, சஞ்சு என்ற வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சஞ்சய் தத்தின் மனைவி மன்யதா தத் வேடத்தில் நடித்தார். அது அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக ஆனது. 2020 ஆம் ஆண்டில், இவர் தப்பாத் படத்தில் தோன்றினார், அது சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றது.

இவர் 2019 இல் ஜீ5 வலைத் தொடரான காஃபிரில் தோன்றினார். காஷ்மீரை பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடரில், மோகித் ரைனாவுக்கு ஜோடியாக நடித்தார். [12]

தயாரிப்பாளராக

தொகு

2011 ஆம் ஆண்டில், இவர் தன் முன்னாள் கணவர் சாகில் சங்காவுடன் இணைந்து பார்ன் ஃப்ரீ என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் லவ் பிரேக்கப்ஸ் ஜிந்தகி, பாபி ஜசூஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான மைண்ட் தி மல்ஹோத்ராஸ் என்ற வலைத் தொடரையும் தயாரித்தார். இந்தத் தொடரில் சைரஸ் சாஹுகர் மற்றும் மினி மாத்தூர் ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்தனர். [13] 2019 திசம்பரில், "ஒன் இந்தியா ஸ்டோரிஸ்" என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்குவதாக அறிவித்தார். [14]

எழுத்துப்பணிகள்

தொகு

இவர் இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பிற வெளியீடுகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[சான்று தேவை][ மேற்கோள் தேவை ]

அழகிப் போட்டிகள்

தொகு

மிர்சா ஃபெமினா மிஸ் இந்தியா 2000 போட்டியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் மிஸ் ஆசியா பசிபிக் 2000 போட்டிக்குச் சென்று அங்கு வென்றார். மிஸ் இந்தியாவில் மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல், மிஸ் ஏவான், மிஸ் க்ளோஸ்-அப் ஸ்மைல் ஆகிய பட்டங்களையும் வென்றார். 3, திசம்பர், 2000 அன்று பிலிப்பைன்சின் மணிலாவில் மிஸ் ஆசியா பசிபிக் பட்டத்தை வென்றபோது, தாரா ஆன் ஃபோன்சேகாவுக்குப் அடுத்து 27 ஆண்டுகளில் இந்தப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் சர்வதேச போட்டிகளில் இந்தியா வெற்றி பெறுவதில் இவர் ஹாட்ரிக் சாதனை படைத்தார்; லாரா தத்தா பிரபஞ்ச அழகி பட்டத்தையும், பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தையும் அதே ஆண்டில் வென்றனர். [15]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2014 ஏப்ரலில், மிர்சா தனது நீண்டகால வணிக கூட்டாளியான சாஹில் சங்காவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அவர்கள் 18, அக்டோபர், 2014 அன்று தெற்கு தில்லியின் சத்தர்பூரில் உள்ள இவரது பண்ணை வீட்டில் திருமணம் செய்து கொண்டனர். [16] ஆகஸ்ட் 2019 இல், மிர்சா தங்கள் பிரிவை அறிவித்தார். [17] [18]

15 பிப்ரவரி 2021 அன்று, மிர்சா மும்பை பாந்த்ராவில் தொழிலதிபர் வைபவ் ரெக்கியை மணந்தார்.

தனக்கு மே 14 அன்று அவ்யான் ஆசாத் ரேகி என்ற ஆண் குழந்தை குறைபிரசவத்தில் பிறந்ததாகவும், குழந்தை 2 மாதங்கள் என்ஊசியுவில் இருந்ததாகவும் 14, யூலை , 2021 அன்று, மிர்சா அறிவித்தார். வைபவ் ரேக்கியின் முந்தைய திருமணத்திலிருந்து இவருக்கு சமைரா ரேகி என்ற வளர்ப்பு மகளும் உள்ளார்.

திரைப்படவியல்

தொகு

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு தலைப்பு கதாபாத்திரம் குறிப்புகள்
1999 என் சுவாசக் காற்றே நடனக்கனலைஞர் தமிழ்த்திரைப்படம்[19]
2001 ரெஃனா ஹை டெர்ரே தில் மே ரீனா மல்ஹோத்ரா
தீவானாபான் கிரண் சவுத்ரி
2002 டம்கோ நா பூல் பாயேங்கே முஸ்கான்
2003 தும் காவேரி
பிரான் ஜாயே பர் சான் நா ஜாயே சவுந்தர்யா
தேசீப் நசுனீன் ஜமால்
2004 கியூன் ஹோ கயா நா பிரீத்தி சிறப்புத் தோற்றம்
துஸ்மா நஹின் தேக்ஹா ஜியா
ஸ்டாப் சாமா
2005 பிளாக் மெயில் அஞ்சலி மோகன்
மை பிரதர் நிகில் அவராகவே சிறப்புத் தோற்றம்
நாம் கம் ஜாயேகா நடாஷா/கீதாஞ்சலி
கோய் மேரே தில் மெய்ன் ஹை சிம்ரன்
பரினீதா காயத்ரி
டஸ் அனு தீர்
2006 பைட் கிளப் மெம்பர்ஸ் ஒன்லி அனு சோப்ரா
பிரதீக்க்ஷா ரீனா பிரவுன் தொலைக்காட்சிப் படம்
பிர் ஹேரா பேரி கவர்ச்சி நடன மங்கை சிறப்புத் தோற்றம்
அலக் பூர்வா ராணா
லகே ராஹோ முன்னா பாயி சிம்ரன்
2007 ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிட் சில்பா
சூட்அவுட் அட் லோகந்வாலா மீடா மட்டூ
கேஷ் அதிதி
ஹேய் பேபி அவராகவே சிறப்புத் தோற்றம்
ஓம் சாந்தி ஓம்
டஸ் கஹானியே சியா
2008 கிரேசி 4 சிக்கா
2009 லக் பை சான்ஸ் அவராகவே சிறப்புத் தோற்றம்
ஜெய் வீரு அன்னா
கிசான் பிரியா
மேக்ஸ்
ஃபுரூட் அன்ட் நட் மோனிகா கோகலே
ரெகானா
2010 ஹம் தும் அவுர் கோஸ்ட் கெஹ்னா சின்கா
2011 லவ் பிரேக்கப் சிந்தகி நைனா
2012 பாஞ்ச் அத்யாய் இசிதா வங்காளப்படம்
2014 பாபி ஜாசூஸ்  – தயாரிப்பாளர்
பேமிலிவாலா அஞ்சலி
2016 சலாம் மும்பை கரீஷ்மா ஈரானிய-இந்தியப் படம்
2018 சஞ்சு மன்யதா தத்
2020 தாப்பட் சிவானி
2021 வைல்ட் டாக் பிரியா வெர்மா தெலுங்குத் திரைப்படம்[20]
2023 பீட் கீதாஞ்சலி [21]
தக் தக் உசுமா [22]

மேற்கோள்கள்

தொகு
  1. "Turning 30 is the fabulous: Dia Mirza". The Indian Express. 9 December 2011. Archived from the original on 29 August 2016. Retrieved 13 July 2016.
  2. "Dia Mirza's production Bobby Jasoos shoot postponed due to her mother's heart surgery". என்டிடிவி. Archived from the original on 14 November 2013. Retrieved 12 November 2013.
  3. Preeti Arora (7 October 2011). "Love Breakups Zindagi Review". rediff.com.
  4. 4.0 4.1 "I took my surname Mirza from my step-father: Dia Mirza". The Times of India. Archived from the original on 30 August 2018. Retrieved 13 June 2014.
  5. "Dia Mirzas Wedding to be a Private Affair – NDTV Movies". NDTVMovies.com. Archived from the original on 19 October 2014. Retrieved 19 October 2014.
  6. "Dia Mirza – 2000-1991! – Miss India Winners 2009-1964 – Archives – Femina Miss India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 27 September 2011. Retrieved 2 June 2011.
  7. "Plan your expenses & trust instruments you have invested in: Dia Mirza". DNA India (in ஆங்கிலம்). 2 September 2019. Archived from the original on 5 November 2019. Retrieved 2 July 2020.
  8. "Dia Mirza: Lesser known facts" இம் மூலத்தில் இருந்து 12 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201012014616/https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/photo-features/dia-mirza-lesser-known-facts/photostory/46366473.cms. 
  9. "Dia Mirza Reminisces 20 years Of Miss India Pageant Days When She Shared Stage With Lara Dutta, Priyanka Chopra". News18. 20 May 2020. Retrieved 2 July 2020.
  10. "Photos - 50 Beautiful Faces: 100 years of Indian Cinema". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 23 December 2021.
  11. Mirza, Dia. Interview with Bharati Dubey. Face to Face: Dia Mirza. 18 October 2001.
  12. "Kaafir trailer: Dia Mirza, Mohit Raina star in this intense web series set in Kashmir". The Indian Express (in Indian English). 28 May 2019. Archived from the original on 3 June 2019. Retrieved 29 May 2019.
  13. "Dia Mirza-Produced Mind the Malhotras Is Amazon's Next Indian Series". NDTV Gadgets 360 (in ஆங்கிலம்). Archived from the original on 29 May 2019. Retrieved 29 May 2019.
  14. "Dia Mirza announces new production house 'One India Stories' on birthday". The New Indian Express. 9 December 2019. Archived from the original on 29 January 2020. Retrieved 29 January 2020.
  15. "Miss India Winners 2000 – 1991 – Indiatimes.com". The Times of India. Archived from the original on 29 March 2013. Retrieved 30 November 2011.
  16. Blaggan, Ishita (October 19, 2014). "Inside Dia Mirza, Sahil Sangha's Wedding". NDTV. https://www.ndtv.com/entertainment/picture-perfect-couple-dia-mirza-sahil-sangha-married-681264. 
  17. "Dia Mirza Announces Separation From Husband Sahil Sangha on Social Media". News 18. August 2019. https://www.news18.com/news/movies/dia-mirza-announces-separation-with-husband-sahil-sangha-on-social-media-2254039.html. 
  18. Basu, Nilanjana (August 2019). "Dia Mirza And Sahil Sangha Announce Separation After 11 Years Together: 'We Remain Friends'". https://www.ndtv.com/entertainment/dia-mirza-and-sahil-sangha-announce-separation-after-11-years-together-we-remain-friends-2078600. 
  19. WildWest Studios (13 November 2016). "A. R. Rahman Hit Tamil Song Jumbalaka Jumbalaka -En Swasa Kaatre". Archived from the original on 15 December 2019. Retrieved 10 January 2018 – via YouTube.
  20. K, Janani (29 August 2020). "Nagarjuna turns 61: Wild Dog team unveils new poster on actor's birthday" (in en). India Today. https://www.indiatoday.in/movies/regional-cinema/story/nagarjuna-turns-61-wild-dog-team-unveils-new-poster-on-actor-s-birthday-1716427-2020-08-29. 
  21. "WATCH: Dia Mirza and Vaibhav Rekha's son Ayaan Azaad excitedly talk to plants in a heart-melting video" (in en). PINKVILLA. 3 February 2022 இம் மூலத்தில் இருந்து 12 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220812014315/https://www.pinkvilla.com/entertainment/news/watch-dia-mirza-and-vaibhav-rekhis-son-avyaan-azaad-excitedly-talk-plants-heart-melting-video-1013727. 
  22. Khan, Lubra (27 September 2023). "Dhak Dhak poster OUT: Ratna Pathak, Dia Mirza, Fatima-Sanjana ooze swag; Taapsee Pannu unveils release date". Pink Villa. https://www.pinkvilla.com/entertainment/news/dhak-dhak-poster-out-ratna-pathak-dia-mirza-fatima-sanjana-ooze-swag-taapsee-pannu-unveils-release-date-1246335. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியா_மிர்சா&oldid=4227588" இலிருந்து மீள்விக்கப்பட்டது