மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்

மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில் தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் உள்ள சிவன் கோயில் ஆகும். திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள பெருமானுக்கு உள்ளதைப்போல இங்குள்ள பெருமானுக்கும் ஐயாறப்பர் என்ற பெயர் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
பெயர்
பெயர்:மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
அமைவிடம்
ஊர்:மயிலாடுதுறை
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐயாறப்பர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி

அமைவிடம்

தொகு

மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் இக் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஐயாறப்பர். இறைவி அறம் வளர்த்த நாயகி.

தோரண வாயில்

தொகு

2010 ஆம் ஆண்டில், இக் கோயில் முகப்பில் புதியத் தோரண வாயில் அமைக்கப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனத்தால் திறந்துவைக்கப்பட்டது.[1]

மயிலாடுதுறை சப்தஸ்தானம்

தொகு

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும். பங்கேற்கும் பிற கோயில்கள்:

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[2].

மேற்கோள்

தொகு
  1. மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயிலில் தோரண வாயில் திறப்பு, 20.2.2010, தினமணி
  2. மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா 17.4.2013, தினமணி