மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில்
தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
மார்க்கசகாயேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கருகிலுள்ள மூவலூரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருநாவுக்கரசர் தேவாரப் பாடல்களில் காணப்படும் தேவார வைப்புத் தலம் ஆகும்.
மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | மூவலூர் மார்க்கசகாயேஸ்வரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மயிலாடுதுறை |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மார்க்கசகாயேஸ்வரர் |
தாயார்: | சௌந்தரநாயகி |
தல விருட்சம்: | புன்னை. |
தீர்த்தம்: | காவிரி, சந்திர புஷ்கரணி, துர்க்கை புஷ்கரணி, உபமன்யு கூபம் |
அமைவிடம்
தொகுஇத்தலம் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇத்தலத்தில் உறையும் இறைவன் மார்க்கசகாயேஸ்வரர். இறைவி மங்களநாயகி, சௌந்தரநாயகி.
மயிலாடுதுறை சப்தஸ்தானம்
தொகுமயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
- பங்கேற்கும் பிற ஆறு கோயில்கள்
- அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில்
- மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மயூரநாதசுவாமி கோயில்
- கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர் கோயில்
- சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர் கோயில்
- துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில்
- சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- மூவலூர் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்