மரத் தக்காளி

(மரத்தக்காளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மரத் தக்காளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Solanales
குடும்பம்:
பேரினம்:
Solanum
இனம்:
S. betaceum
இருசொற் பெயரீடு
Solanum betaceum
Antonio José Cavanilles
வேறு பெயர்கள் [1]
  • Cyphomandra betacea (Cav.) Sendtn.
  • Cyphomandra crassifolia (Ortega) J.F. Macbr.
  • Pionandra betacea (Cav.) Miers
  • Solanum betacea Cav.
  • Solanum crassifolium Ortega
  • Solanum insigne Lowe
பழுத்த பழம்

மரத்தக்காளி அல்லது குறுந்தக்காளி (Tamarillo) என்பது உருளைக் கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த சிறிய பூக்கும் தாவரம் ஆகும். இது முட்டை வடிவ உண்ணத்தகு பழங்களை விளைவிக்கிறது.[2] மரத்தக்காளியானது ஒரு சிறு மரப்பயிர் ஆகும்.

பரவல்

தொகு

இது பெரு நாட்டின் மலைக் கிராமங்களில் இருந்து தோன்றியது. பின்னர் அங்கிருந்து நியூசிலாந்து, பிரேசில், இந்தியா, இலங்கை நாடுகளுக்குப் பரவி பயிரிடப்படுகிறது. இதை தக்காளிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்றாலும் இது மலைப்பிரதேசங்களில் மட்டுமே வளரக்கூடியது என்பதால், சமவெளிப் பகுதிகளில் பயிரிட முடியாதது. இவை தொடர்ந்து 5, 6 ஆண்டுகள் மகசூல் தரக்கூடியன. இப்பயிர் கடல் மட்டத்தில் இருந்து 1,000 முதல் 7,500 அடி உயரமான இடங்களில் வளர்கிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, அசாம், நாகாலாந்து, இமாசலப்பிரதேச மாநிலங்களில் பயிரிடப்படுகின்றது. தமிழ்நாட்டில் சிறுமலை, கொடைக்கானல், ஊட்டி, தாண்டிக்குடி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பிரதேசங்களில் விவசாயிகள் மரத்தக்காளியை சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர்.

பழம்

தொகு

முட்டை வடிவப் பழங்கள் 4-10 செ. மீ நீளமுடையன. அவற்றின் நிறம் மஞ்சள் முதல் செம்மஞ்சள், சிவப்பு, ஊதா எனப் பல உள்ளன. இவை தக்காளியைப் போன்ற சுவைகொண்டதாக உள்ளன. சாதாரண தக்காளி, செடியில் இருந்து பறித்த பழம் ஒரிரு நாளில் அழுகிவிடுகின்றன. ஆனால், மரத்தக்காளி பழங்கள் 7 முதல் 8 நாட்கள் வரை சாதாரணமாக கெடுவதில்லை. குறைந்த சீதோஷ்ண நிலையில் சுமார் 15 நாட்கள் வரை நன்றாக இருக்கும். சாதாரண தக்காளியைப் போல் இதை அப்படியே பயன்படுத்த முடியாது. தோலை சுற்றி கசக்கும் தன்மை இருக்கும். அதனால் தோலை நீக்கிவிட்டு, பயன்படுத்துகின்றனர்.[3]

பழக்கூறு, சில முக்கிய ஆக்கக்கூறுகள்[4]
ஆக்கக்கூறு [g/100g] எல்லை ஆக்கக்கூறு [mg/100g] எல்லை
நீர் அளவு 81–87 உயிர்ச்சத்து ஏ 0.32–1.48
புரதங்கள் 1.5–2.5 உயிர்ச்சத்து சி 19.7–57.8
கொழுப்பு 0.05–1.28 கல்சியதம் 3.9–11.3
நார்ப்பொருள் 1.4–6.0 மக்னீசியம் 19.7–22.3
மொத்த அமிலம் 1.0–2.4 இரும்பு 0.4–0.94

உசாத்துணை

தொகு
  1. "The Plant List: A Working List of All Plant Species". Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2015-08-09.
  2. www.tamarillo.com
  3. "தக்காளிக்கு மாற்றாகுமா மரத்தக்காளி?". செய்திக் கட்டுரை. தி இந்து. 20 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூலை 2017.
  4. Prohens, Jaime; Nuez, Fernando (2001). "The Tamarillo (Cyphomandra betacea): A Review of a Promising Small Fruit Crop". Small Fruits Review 1 (2): 43–68. doi:10.1300/J301v01n02_06. 

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamarillo
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரத்_தக்காளி&oldid=3577993" இலிருந்து மீள்விக்கப்பட்டது