மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகள்

டோகோன் சடங்கு முகமூடி

மரபுவழி ஆப்பிரிக்க முகமூடிகள் துணை-சகாரா ஆப்பிரிக்க மக்களின் மரபுவழிப் பண்பாடு, கலை ஆகியவற்றில் முக்கியமான அம்சங்கள். இவை பெரும்பாலும் சடங்கு தொடர்பானவை. சடங்குக்கான முகமூடிகளுடன் தொடர்பான குறிப்பிட்ட உட்பொருள்கள் பண்பாட்டுக்குப் பண்பாடு பெருமளவுக்கு வேறுபட்டாலும், சில கூறுகள் பெரும்பாலான ஆப்பிரிக்கப் பண்பாடுகளுக்குப் பொதுவானவை. எடுத்துக்காட்டாக, முகமூடிகளுக்கு ஆன்மீக, சமயப் பொருள்கள் இருப்பதுடன், சடங்கு நடனங்களிலும், சமூக, சமய நிகழ்வுகளிலும் பயன்படுகின்றன. அத்துடன், முகமூடிகளை உருவாக்கும் கலைஞர்களுக்கும், அவற்றை அணிந்துகொண்டு நடனமாடுபவர்களுக்கும் சமூகத்தில் சிறப்புத் தகுதி உண்டு. பெரும்பாலான வேளைகளில், முகமூடி செய்தல் என்பது, அவை குறிக்கின்ற குறியீட்டு அறிவுகளுடன், தந்தையிடமிருந்து மகனுக்குச் சொல்லித்தரப்பட்ட ஒரு கலையாகும்.

முகமூடிகள் ஆப்பிரிக்கக் கலையின் முக்கியமான கூறுகளில் ஒன்று. இதன் செல்வாக்குப் பொதுவாக ஐரோப்பிய, மேனாட்டுக் கலைகளில் காணப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டில், கியூபிசம், போவியம், அகவுணர்ச்சி வெளிப்பாட்டியம் போன்ற கலை இயக்கங்கள் பரந்ததும், பல்வேறுபட்ட மரபுரிமைகளைக் கொண்டவையுமான ஆப்பிரிக்க முகமூடிகளிலிருந்து அகத்தூண்டல்களைப் பெற்றுள்ளன.[1] இந்த மரபுரிமையின் செல்வாக்கு, தெற்கு மற்றும் நடு அமெரிக்க முகமூடிக் களியாட்ட ஊர்வலங்களில் இருப்பதைக் காணலாம்.[2]

மேற்கோள்கள்தொகு