மரியா பிரைமாசென்கோ
மரியா ஒக்சன்டியவனா பிரைமாசென்கோ (உக்ரைனியன்: Марія Оксентіївна Примаченко; 12 சனவரி 1909 –18 ஆகத்து 1997) ஒரு உக்ரேனிய நாட்டுப்புற கலை ஓவியர் ஆவார். சுயமாக கலைகளை கற்றுக்கொண்ட கலைஞரான இவர் ஓவியம் வரைதல், சித்திரத்தையல் மற்றும் சுட்டாங்கல் (பீங்கான்) சிலை வடித்தல் போன்ற பல கலைகளில் ஈடுபட்டார்.
மரியா பிரைமாசென்கோ | |
---|---|
Марія Примаченко | |
தாய்மொழியில் பெயர் | Марія Примаченко |
பிறப்பு | மரியா பிரைமாசென்கோ 12 சனவரி 1909 போலோட்னியா, கீவ் ஆளுநராகம், உருசியப் பேரரசு |
இறப்பு | ஆகத்து 18, 1997 | (அகவை 88)
கல்லறை | போலோட்னியா, இவான்கிவ் ராயன், உக்ரைன் |
தேசியம் | உக்ரைனியர் |
அறியப்படுவது | ஓவியம் |
பிள்ளைகள் | பெடிர் பிரைமாசென்கோ |
விருதுகள் | செவ்செங்கோ தேசிய பரிசு, 1966 |
1966 ஆம் ஆண்டில் இவருக்கு உக்ரைனின் உயரிய விருதான செவ்செங்கோ தேசிய பரிசு வழங்கப்பட்டது. இவரின் நினைவாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) 2009 ஆம் ஆண்டை பிரைமாச்சென்கோ ஆண்டாக அறிவித்தது. மேலும் கீவ் நகரில் உள்ள ஒரு தெரு மற்றும் ஒரு சிறிய கோள் (கிரகம்) இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளன. 1937 ஆம் ஆண்டு பாரிசு நகரில் நடந்த உலக கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்களை பார்வையிட்ட பிறகு, "இந்த புத்திசாலித்தனமான உக்ரேனியரின் கலை அதிசயத்திற்கு நான் தலைவணங்குகிறேன்" என்று பிரபல ஓவியர் பாப்லோ பிக்காசோ கூறினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமரியா 1909 ஆம் ஆண்டு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது ஆரம்ப வாழ்க்கையின் பெரும்பகுதியை கீவ் மாகாணத்தில் உள்ள போலோட்னியா கிராமத்தில் கழித்தார்.[1] இவர் நான்கு ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றார். ஆனால் அதன் பிறகு போலியோ நோயால் பாதிக்கப்பட்டதனால் பள்ளிபடிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த உடல் குறைபாடு இவரது வாழ்க்கையை வெகுவாக பாதித்தது.[2] பின்னர் மரியா ஓவியம் வரைய தொடங்கினார். இவர் தன் ஆரம்ப கலை அனுபவங்களை பின்வருமாறு விவரித்தார்: "ஒரு இளம் பெண்ணாக இருந்த பொது, நான் ஓர் வாத்துகளின் குழுவை கவனித்து வளர்த்து வந்தேன். ஒரு நாள் நான் அவைகளை பூக்கள் நிரம்பிய காடு, வயல்கள் ஆகியவற்றை கடந்து ஒரு ஆற்றின் கரைக்கு கூட்டி சென்றேன். அங்கு ஆற்றங்கரை மணலில் ஒரு குச்சியை கொண்டு கற்பனையான பூக்களை வரைய ஆரம்பித்தேன். பின்னர், இயற்கை நிறங்களை பயன்படுத்தி என் வீட்டின் சுவர்களுக்கு வண்ணம் தீட்ட முடிவு செய்தேன். அதன் பிறகு நான் ஓவியம் வரைவதை நிறுத்தவில்லை".[3]
இவரது இளமை பருவத்தில் இவரின் தாயார் இவருக்கு சித்திரத்தையல் கலையை கற்றுக் கொடுத்தார். 1920 களின் பிற்பகுதியில் இருந்து 1930 களின் முற்பகுதி வரை மரியா இவான்கிவ் கூட்டுறவு சித்திரத்தையல் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருந்தார்.[3] இவரது திறமையை பார்த்த சக கலைஞர் டெட்டியானா புளூரு 1935 ஆம் ஆண்டில் கீவ் நகரில் உள்ள உக்ரேனிய கலை அருங்காட்சியகத்தின் மத்திய பட்டறையில் பணியாற்ற இவரை அழைத்தார்.
இவர் போலியோ நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய கீவ் நகரில் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார், இதற்கு பிறகு இவரால் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக எழுந்து நிற்க முடிந்தது. இவர் அப்பொழுது அங்கு வாசில் மேரின்சுக்கை சந்தித்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது மற்றும் 1941 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெடிர் பிரைமச்சென்கோ என்ற ஒரு மகன் பிறந்தார்.[4] இருவருக்கும் இடையே திருமணம் நடப்பதற்கு முன்பே, 1941 ஆம் ஆண்டு வாசில் இரண்டாம் உலகப் போரில் கலந்துகொள்ள சென்றார். பின்னர் இவர் போரில் பின்லாந்து நாட்டில் இறந்தார்.[2] இதற்கு பின்னர் இவர் இவான்கிவ் நகரத்திற்கு திரும்பினார் மற்றும் அங்கு ஒரு கூட்டு பண்ணையில் பணியாற்றினார். இவரது மகன் பெடிர் பின்னர் ஒரு நாட்டுப்புறக் கலைஞராக இருந்தார். இவரது பேரன்கள் பெட்ரோ மற்றும் இவான் ஆகியோரும் தற்போது நாட்டுப்புறக் கலைஞர்களாக இருக்கின்றனர்.[4]
வாழ்க்கை
தொகு1936 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுக் கட்சியின் முதல் நாட்டுப்புறக் கலை கண்காட்சியில் மரியாவின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சி மாஸ்கோ, லெனின்கிராட் மற்றும் வார்சா போன்ற பல நகரங்களில் காட்சிப்படுத்தப்பட்டது. 1937 ஆம் ஆண்டில், இவரின் படைப்புகள் பாரிசு நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டன.[3]
மரியாவின் படைப்புகள் பெரும்பாலும் உக்ரேனிய மற்றும் போலந்து நாட்டுப்புற மரபுகளை சார்ந்து இருக்கின்றன. இவை இயற்கை, உலகம் மற்றும் கற்பனை கதைகள் போன்ற பலவற்றை சித்தரிக்கின்றன.[5][6] சிறிது காலம் சித்திரத்தையல் கலையில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் 1930 களில் மீண்டும் ஓவியத்திற்கு மாறினார். இந்தக் காலகட்டத்தை சேர்ந்த இவரது படைப்புகள் வெள்ளை பின்னணி கொண்ட துணிகளில் வரையப்பட்டுள்ளன. மேலும் இவை பெரும்பாலும் உக்ரேனிய பாரம்பரியம் பற்றிய கருத்தாக்கங்களை சார்ந்திருந்தன.[3]
1960கள் முதல் 1980கள் வரை உள்ள காலத்தில் வரையப்பட்ட இவரது ஓவியங்கள் பெரும்பாலும் பல பிரகாசமான வண்ணங்களை கொண்டிருந்தன. 1970 ஆம் ஆண்டு முதல் இவர் ஓவியங்களுடன், அதன் பின்புறத்தில் அந்த படைப்பின் தலைப்புடன் தொடர்புடைய குறுகிய சொற்றொடர்கள் அல்லது பழமொழிகளைச் சேர்க்கத் தொடங்கினார்.[3]
விருதுகளும் அங்கீகாரமும்
தொகு1966 ஆம் ஆண்டில் இவருக்கு உக்ரைனின் உயரிய விருதான செவ்செங்கோ தேசிய பரிசு வழங்கப்பட்டது. இவரின் நினைவாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) 2009 ஆம் ஆண்டை பிரைமாச்சென்கோ ஆண்டாக அறிவித்தது.[7][8] மேலும் கீவ் நகரில் உள்ள ஒரு தெரு மற்றும் ஒரு சிறிய கோள் (கிரகம்) இவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ள.[9][10] 1937 ஆம் ஆண்டு பாரிசு நகரில் நடந்த உலக கண்காட்சியில் இவர் வரைந்த ஓவியங்களை பார்வையிட்ட பிறகு, "இந்த புத்திசாலித்தனமான உக்ரேனியரின் கலை அதிசயத்திற்கு நான் தலைவணங்குகிறேன்" என்று பிரபல ஓவியர் பாப்லோ பிக்காசோ கூறினார்.[11][12][13]
இவரது படைப்புகள் உக்ரைன், மற்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், போலந்து, பல்காரியா, பிரான்சு மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இவர் இயற்றிய சில பாடல்கள் உலகம் முழுவதும் பரவலாக வெளியிடப்பட்டன.[14][15] [16] இவரின் பெரும்பாலான கலைப்பொருட்கள் கீவ் நகரின் நாட்டுப்புற அலங்கார கலை அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளன.[2] மேலும் நியூயார்க் நகரில் உள்ள உக்ரேனிய அருங்காட்சியகத்தில் மரியாவின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள், தனித்துவமான பீங்கான் படைப்புகள், மர தகடுகள் மற்றும் விளக்கப்பட புத்தகங்கள் உள்ளன.[17]
இவரது பல படைப்புகள் இவான்கிவ் வரலாற்று மற்றும் உள்ளூர் வரலாற்று அருங்காட்சியகம் மீது 2022 ஆம் ஆண்டு உருசியா தாக்குதல் நடத்திய போது அழிக்கப்பட்டன.[18][19][20]
மேற்கோள்கள்
தொகு- ↑ Pryimachenko Maria, Sixteen Paintings in the National Museum of Ukrainian Folk Art, Shown On A Set of Sixteen Color Postcards Published By Aurora Art Publishers, Leningrad, 1979, "Art Ukraine" site
- ↑ 2.0 2.1 2.2 Bengal, Rebecca (1 March 2022). "Russian Forces Destroyed the Wild and Beautiful Art of Maria Prymachenko". Vice. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Maria Prymachenko's fantastic world of flowers and animals". blogs.bl.uk. பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
- ↑ 4.0 4.1 "75 years since the birth of Fyodor Vasylovich Prymachenko (Pryymachenko) (1941–2008), a master of folk decorative painting". slavutichlib.com.ua. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
- ↑ "Prymachenko Maria". Ukrainian Art Library (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 March 2022.
- ↑ Kolisnyk, O. V., and M. O. Kovalenko. "Naive art: features of creative perception." Art and Design (2021).
- ↑ Vivienne Chow (28 February 2022). "Russian Forces Burned Down a Museum Home to Dozens of Works by Ukrainian Folk Artist Maria Prymachenko". Artnet. https://news.artnet.com/art-world/maria-prymachenko-ukraine-russia-2078634.
- ↑ Maria Prymachenko at Ukrainian Art Library. [Accessed 2 March 2021].
- ↑ "The Artistic Legacy of Maria Prymachenko". Oseredok. Archived from the original on 2022-12-04. பார்க்கப்பட்ட நாள் 2023-05-21.
- ↑ Schmadel, Lutz D. (10 June 2012). Dictionary of Minor Planet Names. Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-29718-2.
- ↑ Bengal, Rebecca (2022-03-01). "Russian Forces Destroyed the Wild and Beautiful Art of Maria Prymachenko". Vice (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
- ↑ Kemp, Kit; Bond, Will (2022-03-11). "The Art of Ukraine". Kit Kemp (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
- ↑ White, Katie (2022-03-15). "Ukrainian Artist Maria Prymachenko's Fantastical Visions Have Captivated the World—Here Are 3 Key Insights Into Her Life and Work". Artnet News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-17.
- ↑ 100th anniversary of the birth of Maria Primachenko, painter (1908–1997), Unesco Portal, year 2008
- ↑ "Daily: Marimekko print copied from Ukrainian folk artist". News. 29 May 2013. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.
- ↑ Coins of UKRAINE 1901–2014: Coins of Europe Catalog 1901–2014.
- ↑ "Maria Prymachenko: GLORY TO UKRAINE". www.theukrainianmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2023-11-06.
- ↑ "The occupiers burned the museum in Ivankovo, the works of Maria Priymachenko were burned". Ukrainskaya pravda.
- ↑ Giorgobiani, Natia (28 February 2022). "A museum with unique works by Maria Primachenko burned down near Kiev". www.perild.com. Archived from the original on 28 February 2022. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
- ↑ "Pryimachenko's paintings were saved. Villagers carried them out of the burning museum. Espresso". zahid.espreso.tv. பார்க்கப்பட்ட நாள் 2 March 2022.