மரியா ரோ வின்சென்ட்

இந்தியப் பின்னணி பாடகி

மரியா ரோ வின்சன்ட் (Mariya Ro Vincent) ஒரு திரைப்படப்பாடகர், இசையமைப்பாளர் மற்றும் குரல் ஏற்பாட்டாளர் ஆவார். ஏ.ஆர்.ரஹ்மான் , ஹாரிஸ் ஜெயராஜ், டி. இம்மான் , விஜய் ஆண்டனி, ஸ்ரீனிவாஸ், அனிருத் ரவிச்சந்தர், எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஜோஷ்வா ஸ்ரீதர் போன்ற சிறந்த இசை இயக்குனர்களுடன் பணிபுரிந்துள்ளார்.[1] அவரது வெற்றி பாடல்களில் சில கடல் திரைப்படத்தில் இருந்து "அடியே", வணக்கம் சென்னை திரைப்படத்தில் இருந்து "ஹே" போன்றவை அடங்கும். கடல், மரியான், நெடுஞ்சாலை, மில்லியன் டாலர் ஆர்ம், யாமிருக்க பயமேன் மற்றும் இது போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் அவரது குரல் இடம்பெற்றுள்ளது.[2] மலேசியாவில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" மற்றும் மழவில் மனோரமாவின் "ஜோஸ்கோ இந்திய குரல்" மற்றும் மலேசியாவில் உள்ள ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியில் "சூப்பர் ஸ்டார்" போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யவும், தயாரிக்கவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[3] எல் ஃபெ என்றழைக்கப்படும் குரல் இசைக்குழுவின் முன்னணி பாடகராகவும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும் ஈடுபடுகிறார்.

மரியா ரோ வின்சன்ட்
பிறப்புசென்னை, தமிழ்நாடு
இசை வடிவங்கள்தமிழ், போப் மற்றும் ஹிப்ஹாப்.
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர் மற்றும் குரல் ஏற்பாட்டாளர்
இசைத்துறையில்2010 முதல் தற்போது வரை

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி

தொகு

மரியா ரோஷ்னி வின்சென்ட் சென்னை நகரில் 1989, ஜனவரி 4 ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை திரு லியோ வின்சென்ட், ஒரு பொறியியலாளர் மற்றும் இவரது தாயார் பெயர் திருமதி.அனிதா வின்சென்ட் என்பதாகும். இவரது இளைய சகோதரி மரியான் ரஞ்சினி வின்சென்ட் ஒரு வரைகலை வடிவமைப்பாளர் ஆவார். இவர் குடும்பத்தில் ஒரே தொழில்முறை இசைக்கலைஞர் ஆவார். அவர் குட் ஷெப்பர்ட் மெட்ரிக்லேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இருந்து இளங்கலை விலங்கியல் பட்டம் பெற்றார். அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச இசைக் கல்லூரி (ஐ.சி.ஓ.ஓ.எம்) மற்றும் பாஸ்டனில் உள்ள பெர்க்லீ மியூசிக் ஆஃப் மியூசிக் ஆகியவற்றில் இசையமைப்பில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இவர் லண்டன் டிரினிட்டி கல்லூரியில் பியானோவில் 8 வது நிலை முடித்துள்ளார்.[4] அவர் பியானோ மற்றும் கிட்டார் என்ற இசைக் கருவிகளை வாசிக்க நன்கு அரிந்தவர்.

தொழில்

தொகு

கச்சேரி ஆரம்பம் என்ற படத்தில் இசை இயக்குனரான டி. இம்மான் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்படத்தில் "கடவுளே" பாடலை இவர் பாடினார்.[5] ஏ.ஆர்.ரஹ்மானின் கே.எம். காலேஜ் ஆப் மியூசிக்கில் சமகால மேற்கத்திய இசையை பயிற்றுவிப்பாளராக இவர் பணிபுரிந்தார். அங்கே பணியாற்றிக் கொண்டிருக்கையிலேயே ஏ. ஆர். ரகுமான் இவரது திறமையைக் கண்டு அவரது "கடல்" படத்தில் "அடியே" என்ற பாடலை பாட ஒரு வாய்ப்பு கொடுத்தார்.[6]

குறிப்புகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-22.
  2. https://eventaa.com/roevincent89-1456811548-4875
  3. https://www.justdial.com/entertainment/artist/Maria-Roe-Vincent/A537027
  4. https://www.nettv4u.com/celebrity/tamil/playback-singer/maria-roe-vincent
  5. https://www.imdb.com/name/nm5420234/
  6. https://starclinch.com/maria-roe-vincent
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியா_ரோ_வின்சென்ட்&oldid=3566597" இலிருந்து மீள்விக்கப்பட்டது