மருதாநதி அணை
மருதாநதி (ஆங்கில மொழி: Marudhanadhi) திண்டுக்கல் மாவட்ட பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, கடுகுதடி, கோம்பை ஆகிய பகுதிகள் இந்த நதிக்கு முக்கிய நீர் ஆதாரங்களாகும்.[1] ஆத்தூர் தாலுகாக்களைச் சேர்ந்த 6500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.[2] சேவுகம்பட்டி, பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் பேரூராட்சிகள், சித்தரேவு, அய்யங்கோட்டை, தேவரப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்குக் குடிநீர் மூலமாகவும் உள்ளது.
மருதாநதி அணை
தொகு74 அடி உயரம் கொண்ட மருதாநதி அணையானது 1979 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.[3] தமிழ்நாடு நீர்வளத் துறையில் மதுரை மண்டலக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு 189 மில்லியன் கன அடியாகும்.[4] ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவ மழையின் காலத்தில் அணை திறக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "70 அடியை எட்டிய நீர்மட்டம்: மருதாநதி அணையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு". மாலைமலர். https://www.maalaimalar.com/news/district/water-level-reaches-70-feet-engineer-team-inspects-marudhanadi-dam-673553. பார்த்த நாள்: 9 November 2023.
- ↑ "முதல் போகத்திற்காக திறக்கப்பட்ட மருதாநதி அணை - விவசாயிகள் மகிழ்ச்சி". சமயம். https://tamil.samayam.com/latest-news/dindigul/cooperation-minister-i-periyasamy-open-maruthanathi-dam-water-for-irrigation-at-dindigul/articleshow/94400827.cms. பார்த்த நாள்: 9 November 2023.
- ↑ "தமிழக பொதுப்பணித்துறையின் நீர்வளத் துறை இணையதளத்தில் உள்ள கோப்பு", பார்த்த நாள் ஜூலை 19, 2015
- ↑ "மருதாநதி அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/State/water-resources-department-officials-inspect-marudhanadi-dam-1071436. பார்த்த நாள்: 9 November 2023.