மருது அழகுராஜ்

மருது அழகுராஜ், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார். தற்போது இவர் நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவர் சிறந்த தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆவார்.

பின்னணிதொகு

முன்னர் மருது அழகுராஜ், அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நமது எம் ஜி ஆர் நாளிதழில் தலைமை ஆசிரியராக 2009ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். பின்னர் 2017-இல் அதிமுக, எடப்பாடி கே. பழனிச்சாமி அணி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி. டி. வி. தினகரன் அணி மூன்றாக இயங்கியது. நமது எம்ஜிஆர் செய்தி நாளிதழ் டி. டி. வி. தினகரன் கையில் சென்றது.

இந்நிலையில் அதிமுகவின் உள்கட்சி அரசியலில் குறுக்கீடு செய்யும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய அரசையும், நரேந்திர மோடியையும் தாக்கி, மருது அழகுராஜ், சித்திரகுப்தன் எனும் புனைபெயரில் "காவி அடி, கழகத்தை அழி" என்ற பெயரில் கவிதை ஒன்றை நமது எம்ஜிஆர் நாளிதழில் வெளியிட்டார். இதனால் 16 ஆகஸ்ட் 2017 அன்று மருது அழகுராஜ் நமது எம்ஜிஆர் நாளிதழின் தலைமைச் செய்தியாளர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.[1][2]

ஜெ. ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளில், பிப்ரவரி 2018-இல் துவக்கப்பட்ட அதிமுக கட்சியின் நமது அம்மா என்ற நாளிதழின் தலைமைச் செய்தி ஆசிரியராக மருது அழகுராஜ் நியமிக்கப்பட்ட்டார்.[3][4]

2021 சட்டமன்றத் தேர்தலில்தொகு

மருது அழகுராஜ் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ளார்.

மேற்கோள்கள்தொகு

  1. நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆசிரியர் நீக்கம்
  2. AIADMK mouthpiece editor Marudhu Alaguraj dismissed for his article on Centre, PM Modi
  3. AIADMK to launch 'Namadhu Amma' daily
  4. I wrote Sasikala’s first speech, says sacked editor Marudhu Azhaguraj

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருது_அழகுராஜ்&oldid=3118172" இருந்து மீள்விக்கப்பட்டது