மருத்துவ அறிவியல் நிறுவனம் (வாரணாசி)
மருத்துவ அறிவியல் நிறுவனம் ( IMS-BHU ) என்பது இந்தியாவின் வாரணாசியில் உள்ள பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் ஆறு நிறுவனங்களில் ஒன்றாகும். இது மருத்துவத் துறை, பல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆயுர்வேத துறை என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
சிக்சா விஞ்ஞான் சன்சுதான் | |
Other name | IMS-BHU |
---|---|
குறிக்கோளுரை | Chikitsitat punyatmam na kinchita |
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | No virtue greater than treatment |
வகை | மருத்துவக் கல்வி & ஆராய்ச்சி நிறுவனம் |
உருவாக்கம் | 1960 |
Parent institution | பனாரசு இந்து பல்கலைக்கழகம் |
அமைவிடம் | , |
வளாகம் | நகரம் |
இணையதளம் | www |
மருத்துவ அறிவியல் நிறுவனமானது பனாரசு இந்துப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியாகும். இது மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய இருபாலர் மருத்துவக் கல்வி நிறுவனமாகும்.
வரலாறு
தொகுஇந்நிறுவனம் 1960ஆம் ஆண்டு, ஒன்பது நவீன மருத்துவம் மற்றும் எட்டு ஆயுர்வேதத் துறைகளுடன் மருத்துவ அறிவியல் கல்லூரியாக இந்நிறுவனம் செயல்படத் தொடங்கியது. இதன் நிறுவன இயக்குநராகா கே. என். உடுப்பா இருந்தார்.
1971-ல், மருத்துவ அறிவியல் கல்லூரி, மருத்துவ அறிவியல் நிறுவனமாகத் தரம் உயர்த்தப்பட்டது. இன்று 33 நவீன மருத்துவத் துறைகளைக் கொண்டுள்ளது. இதில் 10 சிறப்புத் துறைகள், நான்கு பல் மருத்துவத் துறைகள், பதினொரு ஆயுர்வேதத் துறைகள் மற்றும் ஒரு செவிலியர் பள்ளி ஆகியவை அடங்கும்.
கல்வியாளர்கள்
தொகுஇந்த நிறுவனம் பனாரசு இந்து பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை நிலைகளில் மருத்துவ மற்றும் துணை மருத்துவ படிப்புகளை வழங்குகிறது. பிஏஎஎம்எஸ் (BAMS), எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் பிடீஎஸ் (BDS) படிப்புகளில் சேர்க்கை நீட் தேர்வு மூலம் தகுதியின் அடிப்படையில் நடைபெறுகிறது. பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் செவிலியர் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வளாகம்
தொகுமருத்துவ அறிவியல் நிறுவனம் பனாரசு பல்கலைக்கழகத்தின் முன் பகுதியில் உள்ளது. இந்த வளாகத்தில் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, மாணவர்கள் மற்றும் தங்கும் விடுதிகள், பணியாளர்கள் குடியிருப்புகள், தபால் அலுவலகம், கோயில், விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளன. வளாகத்தின் மருத்துவமனைப் பிரிவு பொதுவாகக் கூட்டமாகவும், பரபரப்பாகவும் இருக்கும். ஆனால் வளாகத்தின் குடியிருப்பு பகுதி அமைதியாகவும், சிறிய பூங்காக்களுடன் அழகாகவும் இருக்கும்.
அமைப்பு
தொகுமருத்துவ அறிவியல் நிறுவனம் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவை பொது இயக்குநரகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இல்லை. ஆனால் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி மத்திய பல்கலைக்கழகமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் மூன்று செயல்பாடுகள் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவம் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் தரமான கல்வியை வழங்குதல், மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு முன்னோடி நிறுவனமாக இருப்பது மற்றும் உயர்தர நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் மருத்துவமனையை நடத்தும் பொறுப்புக்குத் தலைமை நிர்வாகியாக இயக்குநரால் இந்த நிறுவனம் வழிநடத்தப்படுகிறது. துறைகளில் துறைத்தலைவர்கள், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி உட்பட நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதில் இயக்குநருக்கு உதவுகிறார்கள். துறைத் தலைவர்கள் தலைமையில் 28 கல்வித் துறைகள் உள்ளன. துணை மருத்துவமனை சேவையானது மருத்துவ கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் தொழில்நுட்பத் தலைவர்களால் கண்காணிக்கப்படும் தனிப்பட்ட பிரிவுகளுடன் உள்ளது.
தரவரிசைகள்
தொகுமருத்துவ அறிவியல் நிறுவனமானது 2020-ல் இந்தியா டுடே தரப்பட்டியலில் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏழாவது இடத்தையும், தி வீக் கணிப்பில் 2019-ல் ஆறாவது இடத்தையும் மற்றும் 2019 இல் அவுட்லுக் இந்தியாவின் தரப்பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்தது.
மாணவர் வாழ்க்கை
தொகுஇந்த வளாகத்தில் புனர்வாசு அத்ரே விடுதி, ரூய்யா மருத்துவ விடுதி மற்றும் தன்வந்திரி விடுதி ஆகிய மூன்று இளங்கலை மாணவர்களுக்கான விடுதிகளும், முதுநிலைப் பட்டதாரிகளுக்கான பழைய முநி விடுதி, புதிய தங்கும் விடுதி, சுஷ்ருதா விடுதி ரூய்யா இணைப்பு என நான்கு விடுதிகளும் உள்ளன. திருமணமான மருத்துவர்கள் விடுதி. கஸ்தூரிபா பெண்கள் விடுதியில் இளங்கலை மற்றும் முதுநிலைப் பெண்கள் தங்கியுள்ளனர். அனைத்து விடுதிகளும் தங்கள் சொந்த உணவகங்களை நடத்துகின்றன.
விருதுகளும் பதக்கங்களும்
தொகு- பகவந்தாஸ் தாகுர்தாஸ் சந்த்வானி தங்கப் பதக்கம் மருத்துவ அறிவியல் நிறுவனம் -மருத்துவப் பட்டப் படிப்பில் முதலாவதாக வரும் மாணவருக்கு வழங்கப்படுகிறது.[1][2]
மாணவர் செயல்பாடுகள்
தொகுமருத்துவ அறிவியல் நிறுவனம் மாணவர்களுக்காகக் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார, இலக்கிய மற்றும் விளையாட்டு விழா ’அமுதம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் நடுப்பகுதியில் நடைபெறும். இளநிலை ஆண்கள் விடுதிகள் மற்றும் இளங்கலைப் பெண்கள் விடுதிகள் இரண்டும் ஆண்டுதோறும் விடுதி நாட்களை நடத்துகின்றன.[3][4]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- சுமிதா பிரபாகர்
- சபம் புத்திச்சந்திர சிங்
- ராதா மோகன் தாஸ் அகர்வால்
- முகமது அயூப்
- ராம் ஹர்ஷ் சிங்
மேம்பாடு
தொகுபிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனாவின் (பிஎம்எஸ்எஸ்ஒய்) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு இணையாக இந்த நிறுவனத்தை மேம்படுத்த இந்திய அரசு முடிவு செய்தது. மத்திய அரசு 80% நிதியினையும் மாநில அரசு 20% நிதியினை இதற்காக வழங்கியதன் அடிப்படையில் தரம் உயர்த்தும் பணி முடிந்துள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mallika Tewari, MBBS, MS, M.Ch, MRCS.EdAssociate Professor and Head Department of Surgical Oncology, Institute of Medical SciencesBanaras Hindu University Varanasi-221005, UP, India – Openventio Publishers" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
- ↑ Varanasi, Banaras Hindu University. "LIST OF MEDALS AND PRIZES" (PDF).
- ↑ "ELIXIR 2019 - Institute of Medical Sciences BHU". IndCareer College Events (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-01-13. Archived from the original on 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
- ↑ "ELIXIR 2019, Institute of Medical Sciences BHU, Cultural Festival, Varanasi". www.knowafest.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
- ↑ http://pmssy-mohfw.nic.in/phaseI.aspx