மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய இதழ்

மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய இதழ் (European Journal of Clinical Microbiology & Infectious Diseases) என்பது மாதந்தோறும் வெளிவரும் ஒரு மருத்துவ மீள் ஆய்விதழ் ஆகும். இவ்விதழ் 1982-ல் மருத்துவ நுண்ணுயிரியியல் சார்ந்த ஐரோப்பிய இதழ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1987 முதல் தற்போதைய பெயரில் இவ்விதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பதிப்பாசிரியர் இலியா பிராவனி என்பவராவார். இதன் முதன்மைப் பதிப்பாளர் அலெக்ஸ் வான் பெல்க்கம். இந்த இதழ் இசுபிரிங்சர் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு வருகிறது.[1]

மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் தொற்றுநோய்க்கான ஐரோப்பிய ஆய்விதழ்  
துறை நுண்ணுயிரியல் & தொற்று நோய்கள்
மொழி
பொறுப்பாசிரியர்: இலாரண்ட் போய்ரெல்
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் இசுபிரிங்கர் பதிப்பகம் வணிக ஊடகம்
வரலாறு 1982–முதல்
வெளியீட்டு இடைவெளி: மாதந்தோறும்
Open access கலப்பின திறந்த அணுகல்
தாக்க காரணி 2.837 (2019)
குறியிடல்
ISSN 0934-9723 (அச்சு)
1435-4373 (இணையம்)
CODEN EJCDEU
OCLC 17800606
இணைப்புகள்

"ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகள்" இந்த இதழானது 2019ஆம் ஆண்டில் 2.837 தாக்க காரணியையும், "தொற்று நோய்கள்" பகுப்பில் 72 பத்திரிகைகளில் 37 ஆவது  தரவரிசையையும், "நுண்ணுயிரியல்" பகுப்பில் 119 பத்திரிகைகளில் 55வது தரவரிசையையும் பெற்றது.[2][3]

மேலும் படிக்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "European Journal of Clinical Microbiology & Infectious Diseases". Ulrichsweb. பார்க்கப்பட்ட நாள் 2014-12-20.
  2. "Journals Ranked by Impact: Microbiology". 2013 Journal Citation Reports. Web of Science (Science ed.). Thomson Reuters. 2014.
  3. "Journals Ranked by Impact: Infectious Diseases". 2013 Journal Citation Reports. Web of Science (Science ed.). Thomson Reuters. 2014.

வெளி இணைப்புகள்

தொகு