மருந்தாக்கல் உணவுகள்

மருந்தாக்கல் உணவுகள் (NEUTRACEUTICALS) என்பது ஆங்கிலத்தில் நியூட்ராசுயூட்டிகல்சு (NEUTRACEUTICALS) எனப்படுகிறது

அறிமுகம்தொகு

மருந்தாக்கல் உணவுகள் (NEUTRACEUTICALS) என்பது ஆங்கிலத்தில் நியூட்ராசுயூட்டிகல்சு (NEUTRACEUTICALS) எனப்படுகிறது. இந்த வார்த்தை நியுட்ரிசன் (சத்துணவு),பார்மசுயூட்டிகல்சு (மருந்தாக்கல் தொழில்) ஆகியவற்றிலிருந்து வந்ததாகும்.[1]இதன் பொருள் நோய்ப்பாதுகாப்பு மருந்தாக, இணை உணவாகப் பயன்படுவதாகும். உணவுப் பொருள்களில் உள்ள பைட்டோ சத்துகள் நோயைத் தடுக்க உதவுகிறது.பைட்டோ சத்துகளில் டர்பீன்சு,பைட்டோசுடிரால்கள், பீனால், தியோல்கள் உள்ளன.

டர்பீன்சுதொகு

டர்பீன்சு (TERPENES) தானியங்கள்,காய்கறிகள்,சோயா பீன்சு,பசுமை தாவரங்களில் உள்ளன. டர்பீன்களின் எதிர்வினைகளை அறிவியலாளர் வோட்டோ வாலக் என்பவர் ஆராய்ந்தார்.[2]

பகுதிப் பொருள்கள்தொகு

  • கரோட்டினாய்டுகள் (CAROTENOID)
  • லிமோனாய்டுகள் (LIMENOIDS)

கரோட்டினாய்டுகள்தொகு

காரட்.தக்காளி,பசலைக்கீரையில் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளன. இவை கண்நோய் வராமல் காக்கின்றன.

லிமோனாய்டுகள்தொகு

லிமோனாய்டுகள் கிச்சிலி பழங்களின் தோலில் அதிகம் உள்ளன. இவை நுரையீரலுடைய திசுக்களைப் பாதுகாக்கின்றன.

பைட்டோசுடிரால்கள்தொகு

பைட்டோசுடிரால்கள் சேனை கிழங்கு,பூசணி விதைகள்,மஞ்சள் நிற காய்கறிகள் போன்றவற்றில் பெருமளவு உள்ளது. இவை மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

பீனால்தொகு

பீனால் கத்தரிக்காய்,திராட்சை போன்றவற்றில் பெருமளவு உள்ளது. இவை திசுக்கள் சிதைவடைவது,வீக்கம் அடைவது போன்றவற்றைத் தடுக்கின்றன.

பகுதிப் பொருள்கள்தொகு

  • பிளேவோனாயிடுகள் (FLAVONOIDS)
  • ஆன்தோசையனிடின்கள் (ANTHOCYANIDINES)
  • ஐசோபிளேவோன்கள் (ISOFLAVONES)

பிளேவோனாயிடுகள்தொகு

ஒவ்வாமையைக் கட்டுப்படுத்தக்கூடியது.[3] உடலில் வரும் கட்டிகளைத் தடுக்கக்கூடியது.

ஆன்தோசையனிடின்கள்தொகு

புரத வகையான கொலாச்சனைத் (COLLAGEN) தயாரிக்கக்கூடியது.

ஐசோபிளேவோன்கள்தொகு

மொச்சை,பயறுகளில் உள்ள இவை கட்டிகளைத் தடுக்கக்கூடியவை.

தியோல்தொகு

தியோல் (THEOL) வெங்காயம், பூண்டு, முட்டைகோசு, டர்னிப் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இவை கட்டிகளைத் தடுக்கக்கூடியவை.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "What are neutraceuticals?". news medical life sciences. 30 மார்ச் 2015. 22 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தி இந்து". வோட்டோ வாலக். 27 மார்ச் 2017. 
  3. "terpenes". medical Jane. 2017. 22 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.
  4. சத்துணவியல்,மேல்நிலை முதலாண்டு. உணவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிகள்: தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். 2004. பக். 141,142.