மருந்தியல் பட்டதாரி திறனறிதல் தேர்வு
மருந்தியல் பட்டதாரி திறனறிதல் தேர்வு (Graduate Pharmacy Aptitude Test) என்பது இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் மருந்தியல் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ஆகும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான சோதனைத் தேர்வாகும். இத்தேர்வு தேசியத் தேர்வு முகமையால் நடத்தப்படும் வருடாந்திர அகில இந்தியத் தேர்வாகும். 2018ஆம் ஆண்டு வரை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழு, புது தில்லியால் இத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவிகளுக்கான மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்கும் வகையில் அமைந்துள்ளது.[1]
தேசியத் தேர்வு முகமையின் கீழ் பாடத்திட்டமும் வினாத்தாளின் முறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளநிலை மருந்தியல் பாடத்திட்டத்தின் அடிப்படையின் தேர்விற்கான பாடத்திட்டம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகு- இந்தியாவில் உள்ள பொது சேவை கமிஷன்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Registration for GPAT-2013 Graduate Pharmacy Aptitude Test". All India Council for Technical Education. Archived from the original on 28 July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
வெளி இணைப்புகள்
தொகு[1] :[GPAT 2021 தகுதித் தலைப்புகள்]