மறைசுடு மரைகுழல் துப்பாக்கி

மறைசுடு நீள் துப்பாக்கி அல்லது தொலைகுறித் துப்பாக்கி (sniper rifle) என்பது ஆள் கொண்டு செல்லக்கூடிய, உயர் துல்லியமான, தோளில் வைத்து சுடும் மரைகுழல் துப்பாக்கி ஆகும். இது படைத்துறை அல்லது சட்ட அமுலாக்கலுக்காக பயன்படுத்தப்படுவதும், சிறிய ஆயுதங்களைவிட நீண்ட தூரத்திற்கு அதிக துல்லியத்துடன் சுடக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மறைசுடு நீள் துப்பாக்கி உயர் அளவு துல்லியத்துக்காக உருவாக்கப்பட்டதும், தொலைக்காட்டி காண்குறி இணைக்கப்பட்டு, மைய வெடி வெடியுறையைக் கொண்டதுமான ஆயுதமாகவுள்ளது.

ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு பயன்படுத்தும் 7.62×51மிமீ எம்40 மறைசுடு நீள் துப்பாக்கி.
.50 குழல் விட்டம் கொண்ட எம்82ஏ1 மறைசுடு நீள் துப்பாக்கி ஒரு சடப்பொருள் எதிர்ப்பு நீள் துப்பாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

வைட்வேத் நீள் துப்பாக்கி உலகின் முதலாவது நீண்ட தூர மறைசுடு நீள் துப்பாக்கியாக விவாதத்திற்கு இடமின்றிக் கருதப்படுகிறது.[1] முக்கியமான பிரித்தானியப் பொறியியலாளரான சேர் யோசப் வைட்வேத் அதனை வடிவமைத்திருந்தார். அதில் வழமையான சுடுகுழாய்க்குப் பதிலாக திருகிய அறுகோணம் கொண்ட குழாயினைப் பயன்படுத்தியிருந்தார்.

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Whitworth Rifle".

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sniper rifles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.