மற்கலி கோசாலர்

மக்கலி கோசாலர் (Makkhali Gosala) என்பவர் ஆசீவகம் இயக்கத்தை நிறுவியவர். இவர் இயற்பெயர் மாசாத்தன் மற்றும் மன்கலி. இவர் பிறப்பு பொ.ஊ.மு. 523 என்பர்.  ஐயனார் எனும் அறப்பெயர் சாத்தன் திருப்பட்டூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குறுநிலமன்னன் மரபைச் சேர்ந்தவர். திருப்பட்டூர் இன்றைய திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவர் வடநாடு சென்று திகம்பரப்பிரிவைத் தோற்றுவித்த மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் பணியாற்றி, பின் கருத்து வேறுபாடு காரணமாக தமக்கென்று சங்கம் அமைத்துக் கொண்டார்.

மற்கலி கோசாலர்
Makkhali
On the left: மகாகாசியபர் meets an Ajivika and learns of the பரிநிர்வாணம்[1]
சுய தரவுகள்
சமயம்ஆசிவகத்தின் நிறுவனர்.

ஆசீவகம் என்ற சங்கத்தை சாவத்தி நகரில் வாழ்ந்த ஆலகாலா எனும் குயப்பெண் வீடே தலைமையகமாக விளங்கியது. "வைதிகநெறி" எனும் விதிக் கொள்கைக்கு எதிரான வாழ்க்கை முறை. குறிப்பாக, பொ.ஊ.மு. 600 முதல் பொ.ஊ. 250 வரை தமிழ் மக்களின் பேரியக்கமாகத் தழைத்தோங்கி வாழ்ந்த ஒரு சமய நெறி.

ஐயனாரே மற்கலி:

திருப்பட்டூர் என்று அழைக்கப்பெறும் திருப்பிடவூர், திருச்சி-பெரம்பலூர் சாலை வழியில் உள்ளது. இங்கே ஐயனார் கோயில் உள்ளது. ஐயனார் வழக்கமாக இடங்கையில் வைத்திருக்கும் செண்டுக்குப் பதிலாக, இங்கே, குட்டையான ஓலைச் சுவடியை வைத்திருக்கிறார்.

"கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்தந்தப் பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில்" என்று பெரியபுராணம் உரைக்கும் 'திருப்பிடவூர் பெருஞ்சாத்தன்' இவரே. 'கயிலையில் ஆதிநாதரிடமிருந்து 'ஆதி உலா' நூலைப் பெற்று வந்தவர் 'திருப்பிடவூர் பெருஞ்சாத்தன்' என்பது பெரியபுராணச் செய்தி. ஆதிநாதர் என்பவர் 'ரிஷப தேவர்' எனும் முதல் சமண-அமணத் திருத்தங்கரர் ஆவார். ஆதிநாதரிடம் பெற்ற மெய்யியல் கோட்பாட்டையே இந்நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது. ஆதி உலா என்பது மற்கலி எழுதிய 'ஒன்பதாம் கதிர்' எனும் நூல் என்ற ஐயப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டியிருக்கிறது.

பொதுவாக ஐயனார் கோயிலில் கல்வெட்டு இருப்பதில்லை. ஆனால், இக்கோயிலில் கல்வெட்டு உள்ளது. அதில்,

"திருமண்டப முடையார் கோயிலிற் கூத்தாடுந் தேவர்க்கு" எனும் வரிகளில், 'கூத்தாடும் தேவர்' எனும் வரிகள் நோக்கத் தக்கனவாகும். எனில், மற்கலியின் இறுதிப் பெருநடனமே இதன் பொருளாகும் எனவாம்.

ஆசீவகத் தலைவர் பூரணரை உறையூரில் கண்டு சமய வழக்காடியதாக நீலகேசி உரைப்பது, திருப்பிடவூர், உறையூர், ஆசீவகம் இவற்றுக்கு இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் கொள்ளலாம்.

ஆக, பிடவூர்ப் பெருஞ்சாத்தன் எனும் ஐயனாரே மற்கலி எனலாம்.

மறைவு

தொகு

மகாவம்சம் நூலின் அடிப்படையில் வரலாற்று அறிஞர், ஏ. எல். பசாம், மக்கலி கோசாளர், பொ.ஊ.மு. 484ல் மறைந்ததாக கருதுகிறார்.[2]

குறிப்புகள்

தொகு
  1. Marianne Yaldiz, Herbert Härtel, Along the Ancient Silk Routes: Central Asian Art from the West Berlin State Museums ; an Exhibition Lent by the Museum Für Indische Kunst, Staatliche Museen Preussischer Kulturbesitz, Berlin, Metropolitan Museum of Art, 1982 p. 78
  2. Kailash Chand Jain 1991, ப. 75.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மற்கலி_கோசாலர்&oldid=3759943" இலிருந்து மீள்விக்கப்பட்டது