மகாகாசியபர்

கௌதம புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர்

மகாகாசியபர் (Mahākāśyapa) (சமசுகிருதம்; பாலி: Mahākassapa; ஜப்பான்: 摩訶迦葉 Maha Kasho or Makakasho or Kāśyapa) புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர். இவரே புத்த சங்கத்தின் பிக்குகளின் முதல் பேரவையை கூட்டியவர். வட இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்தவர்.

மகாகாசியபர்
மதப் பணி
ஆசிரியர்கௌதம புத்தர்


சீன மரபிலான மகாகாசியபரின் மர அச்சில் ஆன சிற்பம்
மகாகாசியபர் தங்கியிருந்த ராஜகிரக நகரத்தின் பிப்பாலி குகை

தொன்ம வரலாறுதொகு

வேதிய சமூகத்தைச் சார்ந்த துறவியான மகாகாசியபர், புத்தர் ஞானம் பெற்றவுடன், புத்தரின் முதல் சீடராகி சாரநாத்தில் மக்கள் முன்னிலையில் புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவில் கலந்து கொண்டவர். இவரும் புத்தரின் வேறு முதன்மை சீடரான ஆனந்தருடன் அறியப்படுபவர்.

தாமரை சூத்திரம்தொகு

தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் ஆறில் மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் போன்ற புத்தரின் முதன்மைச் சீடர்கள் ஞானம் பெற்ற நிகழ்வு கூறப்படுகிறது.

ஜென் புத்த சமயப் பிரிவுதொகு

போதி தருமன் துவக்கியதாக கருதப்படும் ஜென் பௌத்த மரபு[1] கௌதம புத்தரிடமிருந்து முதலில் ஞானத்தை பெற்றவர் மகாகாசியபர் கூறுகிறது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. Suzuki, Daisetz (1961). Essays in Zen Buddhism. Grove Press. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0802151183. 
  2. "Dharma Transmission". Sweeping Zen. செப்டம்பர் 29, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 7, 2012 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகாசியபர்&oldid=3322217" இருந்து மீள்விக்கப்பட்டது