மௌத்கல்யாயனர்
மௌத்கல்யாயனர் (Maudgalyāyana) {{இந்தி|मौद्गल्यायन}} (கி மு 568 - 484) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஆனந்தருக்கு அடுத்து இரண்டாவதாக விளங்கியவர். கௌதம புத்தருக்கு இடது கையாக விளங்கியவர்.
மௌத்கல்யாயனர் | |
---|---|
பதவி | வாமசாவகன் (புத்தரின் இடது கை) முதன்மைச் சீடர்களில் ஆனந்தருக்கு அடுத்த இரண்டாமவர். |
சுய தரவுகள் | |
பிறப்பு | கி மு 568 கோலிதா கிராமம், மகதம் |
இறப்பு | கி மு 484 (84-வது வயதில்)
[1] காலசிலா குகை, மகதம் |
சமயம் | பௌத்தம் |
தேசியம் | இந்தியன் |
பெற்றோர் | மொக்கலீ (தாயார்) |
Occupation | பௌத்த துறவி |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
மாணவர்கள்
|
வேதியர் குடியில் பிறந்த இவரின் தாயார் பெயர் மொக்கலீ ஆகும். [2] புத்தத்தன்மை பெற்றவர்களில் சுபூதி மற்றும் சாரிபுத்திரர் உடன் இவரும் ஒருவராவார். தெய்விக ஆற்றல் பெற்ற புத்தரின் சீடர்களில் ஒருவர். மற்றவர் சாரிபுத்திரர் ஆவார்.
கௌம புத்தரின் மகன் ராகுலனுக்கு குருவாக அமைந்தவர்.
வயது முதிர்வின் போது புத்தரிடமிருந்து விடை பெற்று, தான் பிறந்த மகதத்தின் கோலிதா கிராமத்திற்கு திரும்பிச் செல்கையில் காலசிலா நகரத்தில் உள்ள ஒரு குகை அருகே கள்வர்களின் வாளால் கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.accesstoinsight.org/lib/authors/hecker/wheel263.html#ch1
- ↑ P. 66 Buddha and Buddhist synods in India and abroad By Amarnath Thakur
வெளி இணைப்புகள்
தொகு- Life of Maha-Moggallana by Hellmuth Hecker
- [1] Nichiren Daishonin speaks about Maudgalyayana.
- Jack Daulton, "Sariputta and Moggallana in the Golden Land: The Relics of the Buddha's Chief Disciples at the Kaba Aye Pagoda" பரணிடப்பட்டது 2016-08-03 at the வந்தவழி இயந்திரம்