சுபூதி (Subhūti) (பாலி: सुभूति; {{zh|சீனம்=须菩提) கௌதம புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவர்.

திபெத்திய பௌத்தத்தில் இராப்ஜோர் என அறியப்படும் சுபூதி
அச்சான வைர சூத்திர நூலில் புத்தர் சுபூதி

பௌத்த நூலான தாமரை சூத்திரம், அத்தியாயம் ஆறில், சுபூதியுடன் ஆனந்தர், சாரிபுத்திரர், நந்தன் உபாலி, மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் ஆகியவர்களுக்கு புத்தர் தரும உபதேசத்தை அருளினார் எனக் குறிப்பிடப்படுகிறது.

மகாயான பௌத்த வைர சூத்திரத்திலும் (Diamond Sutra), இருதய சூத்திரத்திலும் புத்தர் சுபூதிக்கு அருளிய தரும உபதேசங்கள் குறிக்கப்பட்டுள்ளது. [1]

தேரவாதம், ஜென் பௌத்தம், திபெத்திய பௌத்தம், மற்றும் சீன பௌதத்த்தில் சுபூதிக்கு தனி இடம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலாய் லாமாக்களை சுபூதியின் பரம்பரையாக கருதுகின்றனர். [2][3]

சீன பௌத்தக் கலாச்சாத்தில் ஜென் பௌத்த கதைகளில் சுபூதியின் பெயர் குரங்கரசன் (சன் வூகோங்) என்ற கதாபாத்திரமாக குறிப்பிடப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. *Lopez, Donald S., Jr. The Heart Sutra Explained: Indian and Tibetan Commentaries (1988) State University of New York Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-589-9 p. 7
  2. Stein, R. A. Tibetan Civilization, (1972) p. 84. Stanford University Press, Stanford, California. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8047-0806-1 (cloth); பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-80-470901-7.
  3. Das, Sarat Chandra. Contributions on the Religion and History of Tibet (1970), pp. 81-103. Manjushri Publishing House, New Delhi. First published in the Journal of the Asiatic Society of Bengal, Vol. LI (1882).
  4. Nan Huaijin. Diamond Sutra Explained. Florham Park: Primordia, 2004. Page 25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபூதி&oldid=2696982" இலிருந்து மீள்விக்கப்பட்டது