சாரிபுத்திரர்
சாரிபுத்திரர் (Sāriputta) (பாலி) & சமசுகிருதம் Śāriputra) புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவராவார். நாலந்தாவில் பிறந்து இறுதியில் நாலந்தாவிலேயே இறந்தவர்.
சாரிபுத்திரர் | |
---|---|
சுய தரவுகள் | |
பிறப்பு | கி மு 568 |
இறப்பு | கி மு 484 (84-வது வயதில்) நளகா |
Occupation | பிக்கு |
பதவிகள் | |
Teacher | கௌதம புத்தர் |
வாழ்க்கை
தொகுசாரிபுத்திரர் வேதிய குலத்தைச் சேர்ந்தவர்.[1] ஞானத்தை அடைய ஆர்வமாக இருந்த சாரிபுத்திரர் இல்லறத்தை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டவர். புத்தரின் ஞானத்தால் ஈர்க்கப்பட்ட சாரிபுத்திரர், புத்தரின் முதன்மைச் சீடர்களில் ஒருவராக விளங்கினார்.
பௌத்த தர்மத்தை உபதேசிப்பதிலும் விளக்குவதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றதாலும், பௌத்த சமய அபிதம்மம் (Abhidharma) தத்துவத்தை உருவாக்கியதற்காக சாரிபுத்திரருக்கு, தரும சேனாதிபதி (General of the Dharma) விருது வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
கௌதம புத்தர், சாரிபுத்திரரை தன்னுடைய ஆன்மிக மகன் என்றும் தன்னுடன் ஆன்மிக தர்மச் சக்கரத்தை சுழற்றுவதில் தனது தலைமை உதவியாளர் என அறிவித்தார்.[2]
இறப்பு
தொகுபாலி மொழி பௌத்த நூல்களின் படி, கௌதம புத்தர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சாரிபுத்திரர் தான் பிறந்த நாலந்தா நகரத்திலேயே, கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் பரிநிர்வாணம் அடைந்தார்.[3]
நினைவுத் தூண்
தொகுசாரிபுத்திரர் இறப்பதற்கு முன் மகத நாட்டில், தான் பிறந்த நாலந்தாவிற்குச் சென்று, தன் தாயை பௌத்த சமய தீட்சை வழங்கி பிக்குணி ஆக்கினார். கௌதம புத்தரின் அறிவுரைப் படி இறந்த சாரிபுத்திரரின் சடலம் எரிக்கப்பட்டப் பின்னர் சாம்பலை மகத மன்னன் அஜாதசத்ருவுக்கு அனுப்பினார். கி. மு. 261-இல் சாரிபுத்திரரின் சாம்பலை வைத்து நாலந்தாவில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ray, Reginald A. (1999). Buddhist Saints in India: A Study in Buddhist Values and Orientations. Oxford University Press. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195350616.
- ↑ MN 111, the Anupada Sutta
- ↑ SN 47.13, the Cunda Sutta
வெளி இணைப்புகள்:
தொகு
- The Buddha's Chief Disciples
- Sāriputta பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- The Life of Sāriputta - compiled and translated from Pāli by Nyanaponika Thera பரணிடப்பட்டது 2005-11-19 at the வந்தவழி இயந்திரம்
- GREAT MALE DISCIPLES - Part A Upatissa (Sariputta) and Kolita (Moggallana) by Radhika Abeysekera
- Jack Daulton, "Sariputta and Moggallana in the Golden Land: The Relics of the Buddha's Chief Disciples at the Kaba Aye Pagoda" பரணிடப்பட்டது 2016-08-03 at the வந்தவழி இயந்திரம்