மலபார் தாவரவியல் பூங்கா மற்றும் தாவர அறிவியல் நிறுவனம்
மலபார் தாவரவியல் பூங்கா மற்றும் தாவர அறிவியல் நிறுவனம் (Malabar Botanical Garden and Institute of Plant Sciences) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒலவண்ண கிராமப் பஞ்சாயத்தில் உள்ளது. நீர்வாழ் தாவர இனங்களைக் கருத்தில் கொண்டு நோக்குகையில் , இது இந்தியாவின் முன்னணி தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாகும். [1] பன்னாட்டு தாவரவியல் பூங்கா பாதுகாப்பு அமைப்பில் இத்தாவரவியல் பூங்கா ஓர் உறுப்பினராக உள்ளது மற்றும் சர்வதேச நிகழ்ச்சி நிரல் பதிவிலும் இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் நீர்வாழ் தாவரங்களைப் பாதுகாப்பதில் மலபார் தாவரவியல் பூங்காவை ஒரு முன்னணி தாவரவியல் பூங்காவாக அங்கீகரித்துள்ளது. [2] 2015 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் கேரளா மாநில அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் மன்றத்தின் கீழ் ஓர் ஆராய்ச்சி நிறுவனமாக மாறியது. [3] கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையமான இப்பூங்கா சப்பானின் ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நிலையான கல்வியில் நிபுணத்துவம் வாய்ந்த பிராந்திய மையமாகவும் திகழ்கிறது. [4] [5]
மலபார் தாவரவியல் பூங்கா மற்றும் தாவர அறிவியல் நிறுவனம் Malabar Botanical Garden and Institute for Plant Sciences | |
---|---|
அமைவிடம் | கோழிக்கோடு, கேரளம் இந்தியா |
ஆள்கூறு | 11°14′15″N 75°49′39″E / 11.23750°N 75.82750°E |
பரப்பளவு | 45 ஏக்கர்கள் (18 ha) |
இணையதளம் | mbgips |
இயற்கையாளர் எந்திரிக் வேன் இரீடு ஓர்ட்டசு மலபாரிக்கசு என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள 742 இனங்களில் 432 இனங்கள் இங்கே இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. அழிந்து வரும் பல அரிய நீர்வாழ் தாவரங்கள், 150 வகையான டெரிடோபைட்டுகள் எனப்படும் சாற்றுக்குழாய் தாவரங்கள், 60 க்கும் மேற்பட்ட பிரையோபைட்டுகள் எனப்படும் பாசி இனங்கள், 52 வகையான பழ மரங்கள், 60 வகையான நறுமண தாவரங்கள் மற்றும் பல மருத்துவ தாவரங்கள் இத்தாவரவியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டுள்ளன. [1] 400 வகைக்கும் மேற்பட்ட இந்திய நீர்வாழ் தாவரங்களின் தாயகமாக இப்பூங்கா திகழ்கிறது. மேலும் இந்த வகையில் இப்பூங்கா நாட்டின் மிகப்பெரிய சேகரிப்பு மையமாகும்
வரலாறு
தொகு1991 ஆம் ஆண்டில் அரசு தாவரவியல் பூங்காவாகத் இது தொடங்கப்பட்டது. , பின்னர் 1996 ஆம் ஆண்டில் இது அரசு மானியத்துடன் கூடிய தன்னாட்சி அமைப்பான மலபார் தாவரவியல் சங்கமாக மேம்படுத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் கேரளா மாநில அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஒரு ஆராய்ச்சி நிறுவனமாக மாறியது. [3]
வளர்ச்சி
தொகுமலபார் தாவரவியல் பூங்காவில் மேம்பட்ட ஆராய்ச்சி, விருந்தினர் மாளிகை வளாகம் மற்றும் நீர்வாழ் உயிரி பூங்கா ஆகியவற்றிற்கான புதிய தொகுதி கட்டப்பட்டு வருகிறது. [6]
அணுகுதல்
தொகுகோழிக்கோடு நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் 45 ஏக்கர் பரப்பளவில் இத் தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. கோழிக்கோடு இரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவிலும் இப்பூங்கா அமைந்துள்ளது. பூங்கா அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். [1]
விருதுகள்
தொகு- 2014: தேசிய உயிரியல் அறிவியல் அகாதமியின் தலைமைத்துவ விருது [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "മലബാർ ബൊട്ടാണിക്കൽ ഗാർഡൻ ജൈവവൈവിധ്യങ്ങളുടെ വിസ്മയം" இம் மூலத்தில் இருந்து 2021-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210626075719/https://www.mathrubhumi.com/kozhikode/nagaram/1.2721960.
- ↑ 2.0 2.1 "മലബാർ ബൊട്ടാണിക്കൽ ഗാർഡൻ ഗവേഷണ വികസനകേന്ദ്രമാകുന്നു" (in ml). Deshabhimani. https://www.deshabhimani.com/news/kerala/latest-news/499288."മലബാർ ബൊട്ടാണിക്കൽ ഗാർഡൻ ഗവേഷണ വികസനകേന്ദ്രമാകുന്നു". Deshabhimani (in Malayalam).
- ↑ 3.0 3.1 "Kerala Legislative Assembly Question and Answer" (PDF).
- ↑ "മുഖം മിനുക്കി മലബാർ ബൊട്ടാണിക്കൽ ഗാർഡൻ". https://www.manoramaonline.com/environment/earth-n-colors/botanical-garden.html.
- ↑ "Malabar Botanical Garden & Institute for Plant Sciences -MBGIPS – Kerala State Council for Science, Technology & Environment". Archived from the original on 2021-06-26. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
- ↑ Daily, Keralakaumudi. "മലബാർ ബൊട്ടാണിക്കൽ ഗാർഡൻ ഗവേഷണ സ്ഥാപനമായി: മുഖ്യമന്ത്രി" (in ml). Keralakaumudi Daily. https://keralakaumudi.com/news/news.php?id=416893&u=local-news-kozhikode-416893.