மலர்டு
மலர்டு (Malard பாரசீக மொழி: ملارد, பிற பெயர்கள் : Malārd and Melārd; பிறப் பெயர்: Malār) என்ற நகரமானது, மலர்டு கவுண்டியின் நகரங்களில் ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டு இந்த நகர நகராட்சி உருவாக்கப் பட்டது. மலர்டு கவுன்டியின் தலைநகரம், இந்த மலர்டு நகரமே ஆகும். 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தில் 61,302 குடும்பங்கள் வாழ்ந்தன. அப்பொழுது அதில் இருந்த பொது மக்கள் தொகை 228,673 நபர்களாக இருந்தது. இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பாரவேறு எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களை விடவும், அதக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[2]
மலர்டு
ملارد | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 35°39′57″N 50°58′36″E / 35.66583°N 50.97667°E | |
Country | ஈரான் |
Province | தெகுரான் மாகாணம் |
County | Malard |
Bakhsh | Central |
மக்கள்தொகை (2016 Census) | |
• நகர்ப்புறம் | 2,81,027 [1] |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (IRDT) |
காலநிலை
தொகுகோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு அமைப்புப் புள்ளி விவரப்படி, இதன் காலநிலையை குளிர் அரை வறண்ட காலநிலையாக (BSk) வகைப்படுத்தப் பட்டுள்ளது.[3]
தட்பவெப்ப நிலைத் தகவல், Malard | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 6.2 (43.2) |
8.9 (48) |
13.8 (56.8) |
20.3 (68.5) |
28 (82) |
32.4 (90.3) |
34.7 (94.5) |
35.1 (95.2) |
30.2 (86.4) |
24.6 (76.3) |
16 (61) |
10 (50) |
21.68 (71.03) |
தினசரி சராசரி °C (°F) | 1.2 (34.2) |
3.6 (38.5) |
8 (46) |
13.8 (56.8) |
20.7 (69.3) |
24.6 (76.3) |
27 (81) |
27.6 (81.7) |
22.6 (72.7) |
17.8 (64) |
10.2 (50.4) |
4.9 (40.8) |
15.17 (59.3) |
தாழ் சராசரி °C (°F) | -3.8 (25.2) |
-1.7 (28.9) |
2.3 (36.1) |
7.3 (45.1) |
13.4 (56.1) |
16.9 (62.4) |
19.4 (66.9) |
20.2 (68.4) |
15.1 (59.2) |
11.1 (52) |
4.4 (39.9) |
-0.2 (31.6) |
8.7 (47.66) |
பொழிவு mm (inches) | 43 (1.69) |
35 (1.38) |
39 (1.54) |
33 (1.3) |
17 (0.67) |
5 (0.2) |
2 (0.08) |
2 (0.08) |
4 (0.16) |
15 (0.59) |
26 (1.02) |
32 (1.26) |
253 (9.96) |
ஆதாரம்: Climate-Data.org, altitude: 1191m[3] |
மக்கள் தொகை
தொகு2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில், இந்த நகரம் 29 வது இடத்தினைப் பெறுகிறது.[1] பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[4][5] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 281,027 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 290,817 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுது உள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு −3.37% குறைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுமலர்டு நகர நகராட்சி தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மலர்டு நகர, புறநகர பேருந்து அமைப்பு வழியே, சாரியர், தெகுரான் மாகாணம், கராஜ், தெகுரான், குவாட்சு ஆகிய நகரங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 https://www.amar.org.ir/english
- ↑ http://countrystudies.us/iran/52.htm
- ↑ 3.0 3.1 "Climate: Malard - Climate graph, Temperature graph, Climate table". Climate-Data.org. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 9 September 2013.
- ↑ Asia-Pacific Population Journal, United Nations. "A New Direction in Population Policy and Family Planning in the Islamic Republic of Iran". Archived from the original on 14 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 April 2006.
- ↑ "Iran – population". Countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.