மலாக்கா மாநில ஆட்சிக்குழு
மலாக்கா மாநில ஆட்சிக்குழு (ஆங்கிலம் Malacca State Executive Council; மலாய்: Majlis Mesyuarat Kerajaan Negeri Melaka) என்பது மலேசியா மலாக்கா மாநில அரசாங்கத்தின் நிர்வாக ஆட்சிக்குழுவாகும். மலாக்கா யாங் டி பெர்துவா (Yang di-Pertua Negeri of Malacca) அவர்களால் நியமிக்கப்பட்ட மலாக்கா முதலமைச்சர் (Ketua Menteri Melaka) இந்த ஆட்சிக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். [1][2]
மலாக்கா மாநில ஆட்சிக்குழு Malacca State Executive Council Majlis Mesyuarat Kerajaan Negeri Melaka | |
---|---|
2023 தொடக்கம் – தற்போது வரையில் | |
உருவான நாள் | 31 மார்ச் 2023 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | அப்துல் ரவுப் யூசோ (Ab Rauf Yusoh) (பாரிசான்–அம்னோ) |
நாட்டுத் தலைவர் | மலாக்கா யாங் டி பெர்துவா அலி ருஸ்தாம் (Mohd Ali Rustamr) |
அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை | 11 |
உறுப்புமை கட்சி | பாரிசான் நேசனல்; பாக்காத்தான் அரப்பான் கூட்டணி அரசு
|
சட்ட மன்றத்தில் நிலை | கூட்டணி அரசு 26 / 28 |
எதிர் கட்சி |
|
எதிர்க்கட்சித் தலைவர் | முகமட் யாசில் யாக்குப் (பெரிக்காத்தான் – பெர்சத்து) |
வரலாறு | |
Legislature term(s) | 15-ஆவது மலேசிய நாடாளுமன்றம் |
மலாக்கா முதலமைச்சர், மலாக்கா மாநில சட்டமன்றத்தில் (Malacca State Legislative Assembly) அதிகப் பெரும்பான்மையைப் பெற்றவராக இருக்க வேண்டும். ஆட்சிக்குழுவில் மாநிலச் செயலாளர், மாநில சட்ட ஆலோசகர் மற்றும் மாநில நிதி அதிகாரி ஆகியோரும் இடம் பெறுகிறார்கள்.
பொது
தொகுஇந்த ஆட்சிக்குழு மலேசிய அமைச்சரவை கட்டமைப்பைப் போன்றதாகும். ஆனாலும் இந்த ஆட்சிக்குழு அளவில் சிறியது. கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்தின் பொறுப்புகளும், மாநில அரசாங்கத்தின் பொறுப்புகளும் வேறுபடுவதால்; மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலேயும் பல துறைகளும் மாறுபடுகின்றன.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மலாக்கா முதலமைச்சரால் தேர்ந்தெடுக்கப்பட்டு மலாக்கா ஆளுநரால் நியமிக்கப் படுகிறார்கள். மலேசியாவின் மாநில ஆட்சிக் குழுக்களுக்கு தனித்தனியான அமைச்சுகள் இல்லை. மாறாக குழுக்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு குழுவும் அந்தக் குழு சார்ந்த மாநில விவகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் பல்வகைத் துறைகளைக் கவனித்துக் கொள்ளும். ஆட்சிக்குழுவின் உறுப்பினர் ஒரு குழுவின் தலைவராகச் செயல்படுவார்.
உறுப்பினர்களின் பட்டியல்
தொகுஅப்துல் ரவுப் யூசோ ஆட்சிக்குழு
தொகு(2023 தொடக்கம்)
தொகுபாரிசான் (10) | பாக்காத்தான் (1) |
|
31 மார்ச் 2023 தொடக்கம் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:[3]
பெயர் | துறை | கட்சி | சட்டமன்ற தொகுதி |
தொடக்கம் | முடிவு |
---|---|---|---|---|---|
அப்துல் ரவுப் யூசோ (முதலமைச்சர்) |
|
பாரிசான் (அம்னோ) | தஞ்சோங் பிடாரா | 31 மார்ச் 2023 | பதவியில் |
ராயிஸ் யாசின் (மூத்த உறுப்பினர்) |
|
பாயா ரும்புட் | 5 ஏப்ரல் 2023 | ||
அப்துல் ரசாக் அப்துல் ரகுமான் |
|
தெலுக் மாஸ் | |||
முகமது அக்மல் சலே |
|
மெர்லிமாவ் | |||
கல்சோம் நூர்டின் |
|
பெங்காலான் பத்து | |||
ரகமத் மரிமான் |
|
ஆயர் மோலேக் | |||
பைருல் நிசாம் ரோசுலான் |
|
அசகான் | |||
அமீத் மைதீன் குஞ்சு பசீர் |
|
ஆயர் லீமாவ் | |||
நிங்வே கி செம் |
|
பாரிசான் (மசீச) | மாச்சாப் ஜெயா | ||
சண்முகம் பிச்சை |
|
பாரிசான் (மஇகா) | காடேக் | ||
அலெக்ஸ் சீ சு சின் |
|
பாக்காத்தான் (ஜசெக) | கெசிடாங் |
துணை உறுப்பினர்கள்
தொகுபாரிசான் (8) | பாக்காத்தான் (2) |
|
|
6 ஏப்ரல் 2023 தொடக்கம் துணை ஆட்சிக்குழு உறுப்பினர்கள்:
பெயர் | துறை | கட்சி | சட்டமன்ற தொகுதி |
தொடக்கம் | முடிவு |
---|---|---|---|---|---|
கைதிரா அபு சகார் |
|
பாரிசான் (அம்னோ) | ரிம் | 6 ஏப்ரல் 2023 | பதவியில்' |
சுல்கிப்லி முகமட் சின் |
|
தாபோ நானிங் | |||
சைடி அத்தான் |
|
செர்க்காம் | |||
லோ சீ லியோங் |
|
பாக்காத்தான் (ஜசெக) | கோத்தா லக்சுமணா | ||
லெங் சாவ் யென் |
|
பண்டார் ஈலிர் | |||
ரோசுலி அப்துல்லா |
|
பாரிசான் (அம்னோ) | கோலா லிங்கி | ||
முகமது நூர் எல்மி அப்துல் அலீம் |
|
டூயோங் | |||
சகாரி அப்தில் காலில் |
|
டுரியான் துங்கல் | |||
சித்தி பைசா அப்துல் அஜிஸ் |
|
சுங்கை ரம்பை | |||
காலி |
|
காலி | |||
துமினா காடி முகமது அசிம் |
|
பாரிசான் (அம்னோ) | சுங்கை பந்தாய் குண்டூர் | 6 ஏப்ரல் 2023 | பதவியில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Mamat, Amir (5 April 2023). "New Melaka unity govt exco members sworn in [NSTTV] | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
- ↑ "DAP rep joins new Malacca state executive council line-up". Malaysiakini. 5 April 2023. பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.
- ↑ Reporters, F. M. T. (5 April 2023). "10 Melaka exco members sworn in, including 1 from DAP". Free Malaysia Today (FMT). பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.