மலேசிய வன ஆய்வு நிறுவனம்

மலேசிய அரசு நிறுவனம்

மலேசிய வன ஆய்வு நிறுவனம் அல்லது பிரிம் (மலாய்: Institut Penyelidikan Perhutanan Malaysia; ஆங்கிலம்: Forest Research Institute Malaysia) (FRIM); என்பது மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.

மலேசிய வன ஆய்வு நிறுவனம்
Forest Research Institute Malaysia
Institut Penyelidikan Perhutanan Malaysia

FRIM

கெப்போங்கில் மலேசிய வன ஆய்வு நிறுவனத்தின் மழைக்காடுகள்
துறை மேலோட்டம்
அமைப்பு1926; 98 ஆண்டுகளுக்கு முன்னர் (1926)
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம் சிலாங்கூர் கெப்போங்
 மலேசியா
3°14′13″N 101°38′16″E / 3.23694°N 101.63778°E / 3.23694; 101.63778
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • டாக்டர் இசுமாயில் பாரியான் (Dr Ismail Parlan), தலைமை இயக்குனர்
மூல அமைப்புமலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES)
வலைத்தளம்www.frim.gov.my

இந்த நிறுவனம், மலேசியாவில் ஒரு நிலையான மேலாண்மை மற்றும் வன வளங்களின் சிறந்த பயன்பாடுகள்; ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. வெப்பமண்டல மழைக்காடுகளில் ஆய்வு, மேம்பாடு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் வழியாக அறிவார்ந்த தொழில்நுட்ப மாற்றத்தை உருவாக்கலாம் என்பதே இந்த நிறுவனத்தின் முதன்மை இலக்காக உள்ளது.

இந்த அரசு நிறுவனம், கோலாலம்பூருக்கு அருகிலுள்ள கெப்போங் வனப் பகுதியில் அமைந்துள்ளது.[1] கெப்போங் வனப் பகுதியில் உள்ள மழைக்காடு, உலகின் மிகப் பழமையான மற்றும் மறு உருவாக்கம் பெற்ற மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடு ஆகும்.[2]

பொது

தொகு

இந்த வன ஆய்வு நிறுவனம், 1985-இல் மலேசியத் தொழில்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதே காலக் கட்டத்தில் மலேசிய வன ஆய்வு மற்றும் மேம்பாட்டு வாரியத்தால் (Malaysian Forestry Research and Development Board) நிர்வகிக்கப்படும் ஒரு முழு அளவிலான சட்டப்பூர்வ அமைப்பாகவும் மாறியது.[3]

கோலாலம்பூருக்கு வடமேற்கே 16 கிமீ தொலைவில் உள்ள கெப்போங் நகராட்சியில் உள்ள புக்கிட் லாகோங் வனப் பகுதிக்கு அருகில் 545 எக்டேர் பரப்பளவில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு 2017-ஆம் ஆண்டில் MS ISO 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதற்கு முன்னர் ஏப்ரல் 2009-இல் தேசிய பாரம்பரியச் சட்டம் 2005-இன் கீழ் ஒரு பாரம்பரியத் தளமாக நியமிக்கப்பட்டது; மற்றும் சனவரி 2015-இல் தேசியப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.[3]

ஆய்வுத் தளங்கள்

தொகு

இந்த வன ஆய்வு நிறுவனம் 545 எக்டேர் பரப்பளவைக் கொண்டது. சுற்றுச்சூழல் சுற்றுலாத் தளங்கள், ஆய்வகங்கள், பல்வகை ஆய்வுத் திட்டங்களைக் கொண்டுள்ளது.

வரலாறு

தொகு

1926-ஆம் ஆண்டில், மலாயா வனவியல் துறைக்கு, குபிட் (G.E.S Cubitt) என்பவர் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். அந்தக் கட்டத்தில், மலாயா வனவியல் துறைக்கு ஒரு தனி வன ஆய்வுப் பிரிவு தேவை என்பதை அவர் உணர்ந்தார். அதன் பின்னர் பாக்சுவொர்த்தி (F.W. Foxworthy) என்பவரிடம் ஆய்வுப் பிரிவை உருவாக்கித் தருமாறு குபிட்கேட்டுக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக சிலாங்கூர் கெப்போங் வனப்பகுதியில் தற்போதைய ஆய்வுத் தளம் தேர்ந்தெடுக்கப்பட்டது. தனி வன ஆய்வுப் பிரிவைத் தேர்வு செய்த பாக்சுவொர்த்தி, அந்தத் தளத்தின் முதல் தலைமை ஆய்வு அதிகாரியாகவும் பொறுப்பு ஏற்றார். தற்போது, டாக்டர் இசுமாயில் பாரியான் என்பவர் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Forest Research Institute Malaysia - Official Portal". frim.gov.my. பார்க்கப்பட்ட நாள் 14 March 2014.
  2. "FRIM Selangor Forest Park - UNESCO World Heritage Centre". UNESCO World Heritage Centre. பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
  3. 3.0 3.1 "Founded in 1926, the former Forest Research Institute became a full-fledged statutory body, governed by the Malaysian Forestry Research and Development Board (MFRDB) under the Ministry of Primary Industries, in 1985". Bukit Lagong Forest Reserve. பார்க்கப்பட்ட நாள் 19 September 2024.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_வன_ஆய்வு_நிறுவனம்&oldid=4093183" இலிருந்து மீள்விக்கப்பட்டது