மலேய கட்டுவிரியன்

மலேய கட்டுவிரியன்
இந்தோனேசிய சாவகம் தீவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாபிடே
பேரினம்:
பங்காரசு
இனம்:
ப. கேண்டிடசு
இருசொற் பெயரீடு
பங்காரசு கேண்டிடசு
லின்னேயஸ், 1758
வேறு பெயர்கள்

கோலிபெர் கேண்டிடசு லின்னேயஸ், 1758

மலேய கட்டுவிரியன் எனப் பொதுவாக அழைக்கப்படும் பங்காரசு கேண்டிடசு நீல கட்டுவிரியன் என்றும் அழைக்கப்படுகிறது. இது மிகவும் நச்சு நிறைந்த பாம்பு சிற்றினமாகும். ப. கேண்டிடசு, எலாபிடே குடும்பத்தைச் சேர்ந்தது.

விளக்கம்

தொகு

மலேய கட்டுவிரியனின் உடல் நீளம் 108 செமீ (43 அங்குலம்) வரை வளரும். இதில் வாலின் நீளம் 16 செமீ (6.3 அங்குலம்) ஆகும்.

மலேய கட்டுவிரியனின் உடல் முழுவதிலும் முதுகுப்புறத்தில், 27 முதல் 34 வரையிலான அடர் பழுப்பு, கருப்பு அல்லது நீலம் கலந்த கருப்பு குறுக்குப்பட்டைகள் காணப்படும். இவை குறுகி வட்டவடிவத்தில் பக்கவாட்டில் காணப்படுகின்றன. முதல் குறுக்குப்பட்டை தொடர்ச்சியாகவும் தலைப்பகுதியில் அடர் வண்ணத்திலும் காணப்படும். அடர் குறுக்குப்பட்டைகள் பரந்த, மஞ்சள்-வெள்ளை இடைவெளிகளால் பிரிக்கப்படுகின்றன. இவை கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படலாம். வயிற்றுப் புறம் எவ்வித வேறுபாடின்றி வெண்மை நிறத்தில் காணப்படும்.

மேற்கு மற்றும் மத்திய சாவகத்தில் காணப்படும் சில கட்டுவிரியன்கள் பட்டைகளிலின்றி கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன.[2]

மென்மையான முதுகெலும்பு செதில்கள் 15 வரிசைகளில் அமைக்கப்பட்டுள்ளன. வயிற்றுப் புறச் செதில்கள் 195 முதல் 237 வரை காணப்படும். குதத் தட்டு முழுமையும், ஒற்றையாகவும் (பிரிக்கப்படாத) உள்ளது. வாலடிச் செதில்கள் 37 முதல் 56 வரை காணப்படும்.[3]

பரவலும் வாழிடமும்

தொகு

மலேய கட்டுவிரியன் தென்கிழக்கு ஆசியாவில் ஆசிய பெருநிலத்தில் தெற்கிலிருந்து சாவகம் வரையிலும், இந்தோனேசியாவில் பாலியிலும் காணப்படுகிறது.

விடம்

தொகு

மலேய கட்டுவிரியனின் விடம் குறித்து எலிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனுடைய 50% சராசரி உயிர் போகும் அளவாக 0.1 மிகி/கி உள்ளது.[4] இந்தப் பாம்புக் கடித்து சிகிச்சையளிக்கப்படாத மனிதர்களில் இறப்பு விகிதம் 60 முதல் 70 சதவிகிதம் வரை ஆகும்.[5] இந்தப் பாம்பு கடிப்பதனால் உடலினுள் செலுத்தப்படும் விடத்தின் அளவு 5 மிகி ஆகும். ஆனால் 75 கிலோ எடையுள்ள மனிதனைக் கொல்ல 1 மிகி விடமே போதுமானது.[6]

பங்காரசு பேரினத்தின் பல சிற்றினங்களைப் போலவே, மலேய கட்டுவிரியனின் விடமும் நரம்பியல் நச்சுத்தன்மை கொண்டது. விடத்தின் முக்கிய கூறுகள் குறிப்பிடத்தக்க வகையில் மூன்று விரல் நச்சுகளையும் குனிட்சு வகை தடுப்பான்களையும் கொண்டுள்ளது. இந்த நச்சுகள் பெரும்பாலும் நரம்பு தசையின் செயல்பாட்டினை முடக்குதலைத் தூண்டும். இது சுவாச செயலிழப்புக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், உயர் இரத்த அழுத்ததம், அதிர்ச்சி போன்ற இதயப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Wogan, G.; Vogel, G.; Grismer, L.; Chan-Ard, T.; Nguyen, T.Q. (2012). "Bungarus candidus". IUCN Red List of Threatened Species 2012: e.T192238A2059709. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192238A2059709.en. https://www.iucnredlist.org/species/192238/2059709. பார்த்த நாள்: 20 November 2021. 
  2. Kuch, Ulrich; Mebs, Dietrich (March 2007). "The identity of the Javan Krait, Bungarus javanicus Kopstein, 1932 (Squamata: Elapidae): evidence from mitochondrial and nuclear DNA sequence analyses and morphology". Zootaxa 1426 (1): 1–26. doi:10.11646/zootaxa.1426.1.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. 
  3. Boulenger, George Albert (1896). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Vol. III. London: Taylor and Francis. p. 368.
  4. Tan, Nget Hong. "Toxins from Venoms of Poisonous Snake Indigenous to Malaysia: A Review". Department of Molecular Medicine, Faculty of Medicine. University of Malaya. Archived from the original on 21 October 2013. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
  5. "Clinical Toxinology-Bungarus candidus". Clinical Toxinology Resources. University of Adelaide. Mortality rate:70%
  6. Habermehl, G. (2012-12-06). Venomous Animals and Their Toxins (in ஆங்கிலம்). Springer Science & Business Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-88605-8.
  7. "Malayan krait venoms: Throughout Southeast Asia".

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேய_கட்டுவிரியன்&oldid=4177260" இலிருந்து மீள்விக்கப்பட்டது