மழுவண்ணூர் மகா சிவன் கோயில்
மழுவண்ணூர் மகா சிவன் கோயில் [1] என்பது இந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தருவணா என்னுமிடத்தில் உள்ள ஒரு பழமையான இந்துக் கோயிலாகும் . இக்கோயிலின் மூலவர் சிவபெருமான் ஆவார். இங்குள்ள பிற தெய்வங்கள் ஆரயில் பகவதி, துர்க்கை, நந்தி, ஐயப்பன் மற்றும் கணபதி ஆகியவையாகும். இந்தக் கோவில் கரிங்காரி, பாலியானா மற்றும் தருவணை பகுதிகளைச் சார்ந்த மிக உயரமான சிகரத்தில் உள்ளது. பழங்காலம் முதலே இங்கு தினமும் பூஜைகள் நிகழ்த்தப்பெற்று வந்துள்ளன. மழுவண்ணூர் தெக்கே இல்லத்தின் குடும்ப உறுப்பினர்கள் பல நூற்றாண்டுகளாக இந்த பூஜையில் ஈடுபட்டு செய்து வருகின்றனர்.
புராணக்கதைகள்
தொகுமழுவண்ணூர் என்ற பெயரானது மலையாள வார்த்தைகளான "மழு" (கோடாரி), "வண்ண" (வா), "ஊர்" (இடம்) என்பனவற்றிலிருந்து உருவானதாக நம்பப்படுகிறது. இதன் பொருள் "கோடாரி விழுந்த இடம்" என்பதாகும்.
பாணாசுரனின் மிகக்கடினமான தவத்தைக் கண்ட சிவபெருமான் அவருக்கு அவர் வேண்டியதைத் தருவதாகப் புராணம் கூறுகிறது. இதனைப் பயன்படுத்திய பாணாசுரன், சிவபெருமானிடம் தன்னுடைய ராஜ்ஜியத்தைக் காக்குமாறு வேண்டிக்கொண்டான். அதே காலகட்டத்தில் பாணாசுரனின் மகளான உஷா, கிருஷ்ணனின் மகனான அனிருத்தனிடம் அன்பு கொண்டாள். அனிருத்தன் ஒரு நாள் உஷாவைச் சந்திக்க வந்தான். அப்போது அனிருத்தனுக்கும் பாணாசுரனுக்கும் சண்டைக்கு வந்தது. அனிருத்தனைக் சிறைபிடிக்கப்பட்டு, தண்டனை பெற்றான். பாணாசுரனுக்கு பாதுகாவலராக இருந்த சிவன், கிருஷ்ணனுடன் போரிடும் நிலைக்கு ஆளானார். சிவபெருமான் சிவபெருமான் தனது ஆயுதத்தைப் பயன்படுத்த, கிருஷ்ணர் தனது ஆயுதத்தால் அதனை எதிர்கொண்டார். இருவராலும் வெற்றி பெற முடியவில்லை. கோபமுற்ற சிவன் தன்ஆயுதமான மழுவை சிவன்மீது வீசினார். அது, கோயில் உள்ள இடமான மழுவனூரில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் பரசுராமர் கோயில் கட்டியதாக நம்பப்படுகிறது.
பூசைகள், பிரார்த்தனைகள்
தொகுபழங்காலம் முதல் இந்தக் கோயிலில் தினசரி பூஜை நடைபெற்று வருகிறது. ஓணம், விஷு, ஆயுதபூஜை போன்ற விழாக் காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் சபரிமலை செல்லுகின்ற காலகட்டத்தில் தினமும் மாலை பூஜை நடைபெறும். இந்த விழாக்களில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்கின்றனர். சபரிமலை செல்லும் நேரத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. அண்மைக்காலமாக கோயில் குழுவினர் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் வழங்குகின்றனர்.
புதுப்பிக்கும் பணி
தொகுசெங்கற்கள் மற்றும் மரங்களால் இருந்த இக்கோயில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கோயில் மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மலை, அணை
தொகுஇந்தக் கோயிலுக்கு அருகில் பாணாசுர மலை உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய அணைகளில் ஒன்றான பாணாசுர சாகர் அணை அருகில் உள்ளது.
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mazhuvannur Temple Legend. See "Mazhuvannur Temple Legend" பரணிடப்பட்டது 2011-09-01 at the வந்தவழி இயந்திரம்