மாக்சிமிலியன் ஷெல்

மாக்சிமிலியன் ஷெல் (Maximilian Schell 8 டிசம்பர் 1930 - 1 பிப்ரவரி 2014) சுவிஸ் [1] திரைப்படமற்றும் மேடை நடிகர் ஆவார். இவர்ஆஸ்திரியாவில் பிறந்தவராவார். அவர் சுயாதீனமாக சில படங்களை எழுதி, இயக்கி, தயாரித்தார். ஹாலிவுட்டில் அவரது இரண்டாவது கதாப்பாத்திரமான 1961 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க திரைப்படம் ஜட்ஜ்மென்ட் நியூரம்பெர்க் படத்திற்காக சிறந்த நடிகருக்கான அகாடமி விருதை வென்றார். ஆஸ்திரியாவில் பிறந்த அவரது பெற்றோர் கலைகளிலர்வம் கொண்டவர்களாக இருந்தனர். இதனால் இவர் கலைகள் ,இலக்கியங்கள் நிறைந்த சூழலில் வளர்ந்தார். அவர் குழந்தையாக இருந்தபோது 1938 இல் நாஜி ஜெர்மனியால் ஆஸ்திரியாவை இணைத்தபோது அவரது குடும்பம் சுவிட்சர்லாந்திற்கு சென்றது.பின்னர் அவர்கள் சூரிச்சில் குடியேறினர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, ஷெல் முழுநேரமாக நடிபப்பு மற்றும் இயக்கும் பணிகளை மேற்கொண்டார். ஹாலிவுட்டுக்குச் செல்வதற்கு முன்பு பல ஜெர்மன் படங்களில்நடித்துள்ளார்.

மாக்சிமிலியன் ஷெல்
பிறப்பு8 திசம்பர் 1930
வியன்னா
இறப்பு1 பெப்பிரவரி 2014 (அகவை 83)
இன்ஸ்ப்ருக்
படித்த இடங்கள்
பணிநடிகர், இயக்குனர்
வாழ்க்கைத்
துணை/கள்
நடால்யா ஆன்டிரேசென்கோ
விருதுகள்Officer's Cross of the Order of Merit of the Federal Republic of Germany, பேர்ன்ஹார்டு விக்கி விருது

ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் பேசக்கூடிய பல நாஜி காலத்தினை கருப்பொருளாகக் கொண்ட திரைப்படங்களில் இவர் முதலில் நடித்தார். அவற்றில் 1975 ஆம் ஆன்டில் வெளியான தி மேன் இன் தி கிளாஸ் பூத் திரைப்படத்திற்கு சிரந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதிற்கும் 1977 ஆம் ஆண்டில் வெளியான் ஜூலியா திரைப்படத்திற்காக சிறந்த துணைக் கதாப்பாத்திரத்திற்கான ஆஸ்கர் விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

ஷெல் ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிறந்தார். இவரின் தாய் மார்கரெத்தே (நீ நோ வான் நோர்ட்பெர்க்), ஒரு நடிப்புப் பள்ளியை நடத்தி வந்த நடிகை மற்றும் சுவிஸ் கவிஞர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் மருந்தக உரிமையாளர் ஆவார். இவரது தந்தை ஹெர்மன் பெர்டினாண்ட் ஷெல். [2] [3] அவரது பெற்றோர் கத்தோலிக்கச் திருச்ச்சபையினைச் சேர்ந்தவர்கள் ஆவர் .

இளம் மாக்சிமிலியன் தனது தாயைப் போன்ற ஒரு நடிகராக மாறுவதைப் பற்றி ஷெல்லின் தந்தை ஒருபோதும் உற்சாகமாக இருக்கவில்லை, அது "உண்மையான மகிழ்ச்சிக்கு" வழிவகுக்காது என்று உணர்ந்தார். இருப்பினும், ஷெல் தனது ஆரம்பகால இளமைக்காலத்தில் நடிப்பால் சூழப்பட்டார்:

கதாபாத்திர நடிகர்

தொகு

ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் எனும் பெயர் பெறுவதனைத் தவிர்ப்பதற்காக, ஷெல் தனது வாழ்க்கை முழுவதும் பல படங்களில் மிகவும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்: அவர் டாப்காபியில் (1964) ஒரு அருங்காட்சியக புதையல் திருடனாக நடித்தார்; சிமன் பொலிவரில் வெனிசுலா தலைவர் (1969); ஈஸ்ட் ஆஃப் ஜாவா (1969) கிரகடோவாவில் 19 ஆம் நூற்றாண்டின் கப்பல் கேப்டன்; அறிவியல் புனைகதைத் திரைப்படமான தி பிளாக் ஹோல் (1979) இல் விஞ்ஞானியாகவும் தொலைக்காட்சி குறுந்தொடர்களில் உருசியப் பேரரசராக பீட்டர் தி கிரேட்டில் (1986), லாரன்ஸ் ஆலிவர், வனேசா ரெட்கிரேவ் மற்றும் ட்ரெவர் ஹோவர்ட் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதில் நடித்ததற்காக எம்மி விருதை வென்றார் ;.தி ஃப்ரெஷ்மேன் (1990) இல் மார்லன் பிராண்டோவுடன் நகைச்சுவை பாத்திரம், எ ஃபார் ஆஃப் பிளேஸில் ரீஸ் விதர்ஸ்பூனின் தாத்தா; ஜான் கார்பெண்டரின் வாம்பயர்ஸ் (1998) இல் ஒரு அதிகாரியகவும் நடித்தார். மேலும் 1992 ஆம் ஆண்டில் லெனின் எனும் தொலைக்க்காட்சித் தொடரில் விளாடிமிர் லெனினாக நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதை வென்றார்.

இறப்பு

தொகு

திடீரென ஏற்பட்ட கடுமையான நோய்க்கு பின்னர், ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக்கில், பிப்ரவரி 1, 2014 அன்று ஷெல் 83 வயதில் இறந்தார். [4] ஜேர்மன் தொலைக்காட்சி செய்தி சேவையான தாகெசாவ் நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தது.. [5] அவரது இறுதிச் சடங்கில் வால்ட்ராட் ஹாஸ், கிறிஸ்டியன் வோல்ஃப், கார்ல் ஸ்பீஹ்ஸ், லாரன்ஸ் டேவிட் ஃபோல்ட்ஸ், எலிசபெத் எண்ட்ரிஸ் மற்றும் பீட்டர் கைசர் ஆகியோர் கலந்து கொண்டனர். .

மேற்கோள்கள்

தொகு
  1. Johnstone, Iain (1977). The Arnhem Report: The story behind A Bridge Too Far. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0352397756. I'm Swiss, but I was born in Austria.
  2. Maximillian Schell Film Reference biography
  3. Ross, Lillian and Helen. The Player: A Profile of an Art, Simon & Schuster (1961) pp. 231-239
  4. "Oscar-Winning Actor Maximilian Schell Dies at 83". Associated Press in the த நியூயார்க் டைம்ஸ். 1 February 2014. https://www.nytimes.com/aponline/2014/02/01/world/europe/ap-eu-austria-obit-schell.html?hp. பார்த்த நாள்: 1 February 2014. "Schell's agent, Patricia Baumbauer, said Saturday he died overnight at a hospital in Innsbruck following a "sudden and serious illness," the Austria Press Agency reported." 
  5. Maximillian Schell is Dead at Tagesschau (German language). Retrieved 1 February 2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்சிமிலியன்_ஷெல்&oldid=3582476" இலிருந்து மீள்விக்கப்பட்டது