மாங்கனீசு(II) சல்பைடு
மாங்கனீசு(II) சல்பைடு (Manganese(II) sulfide) என்பது MnS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாங்கனீசு, கந்தகம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இயற்கையில் இச்சேர்மம் அல்பான்டைட்டு (சம அளவு), ராம்பர்கைட்டு (அறுகோணம்) போன்ற கனிமங்களாகக் காணப்படுகிறது. சமீபத்தில் பிரௌனெய்ட்டு என்ற கனிமத்திலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. இக்கனிமம் இசுபாலரைட்டு வகை கனிமத்துடன் சம அளவு கொண்டதாகவும், மிகவும் அரிய வகை கனிமமாகவும், விண்கற்களில் மட்டுமே காணப்படுகின்ற கனிமமாகவும் கருதப்படுகிறது [3].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மாங்கனீசு(II) சல்பைடு
| |
வேறு பெயர்கள்
மாங்கனீசு சல்பைடு
மாங்கனீசு மோனோசல்பைடு அல்பான்டைட்டு | |
இனங்காட்டிகள் | |
18820-29-6 | |
பப்கெம் | 87809 |
பண்புகள் | |
MnS | |
வாய்ப்பாட்டு எடை | 87.003 கி/மோல் |
தோற்றம் | சிகப்பு, பச்சை அல்லது பழுப்பு நிறத்தூள் [1] |
அடர்த்தி | 3.99 கி/செ.மீ3 |
உருகுநிலை | 1610 ˚C[2] |
0.0047 கி/100 மி.லி (18 °செ) | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஆலைட்டு (கனசதுரம்), cF8 |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்கோணம் (Mn2+); (S2−) |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | எரிச்சலூட்டி |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | மாங்கனீசு(II) ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுமாங்கனீசு(II) குளோரைடு போன்ற மாங்கனீசு(II) உப்புகளுடன் அமோனியம் சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக மாங்கனீசு(II) சல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- (NH
4)
2S + MnCl
2 → 2 NH
4Cl + MnS
பண்புகள்
தொகுமாங்கனீசு(II) சல்பைடின் படிகக் கட்டமைப்பு சோடியம் குளோரைடு சேர்மத்தின் படிகக் கட்டமைப்பு போலவே காணப்படுகிறது. குறைந்த ஆற்றல் கொண்ட ஆக்கிரமிப்பு செய்யாத மாங்கனீசு ஆர்பிட்டால்களுக்கு இடையில் உள்ள வலிமையற்ற பிணைப்புகள் காரணமாக இந்த இளஞ்சிவப்பு நிறம் தோன்றியிருக்கலாம். உள்ளடங்காப் பட்டைக்குப் பதிலாக வெவ்வேறான நிலைகளில் இது நிகழலாம். எனவே, குறைந்த ஆற்றல் பட்டையிலிருந்து மின்னணு பட்டை பரிமாற்றத்திற்கு உயர் ஆற்றல் போட்டான்கள் தேவைப்படுகின்றன.