மாடப்புறா
ஜெர்மனியில் ஒரு ஆண்புறா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. livia
இருசொற் பெயரீடு
Columba livia
Gmelin, 1789[2]
     approximate native range     introduced non-native populations

மாடப்புறா (rock dove, Columba livia) என்பது ஒருவகைப் புறாவாகும். இது வீட்டுப் புறாவின் மூதாதை. இதன் உடல் சாம்பல் நிறத்திலும், இதன் கழுத்து, மார்பு ஆகியவை பச்சை, நீலநிறம் கொண்டது. உயர்ந்த பாறைகள் கொண்ட திறந்தவெளிக் காடுகளிலும், உயர்ந்த மாடங்கள், கோபுரங்கள், கட்டடங்கள் போன்ற இடங்களிலும் வாழும்.

காட்டு மாடப் புறாக்கள் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும், ஒவ்வொரு இறக்கையிலும் இரண்டு கருப்புப் பட்டைகள் தெளிவாகத் தெரியும். அதேசமயம் வீட்டு மற்றும் வீட்டிலிருந்து காட்டுக்கு வந்த புறாக்கள் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபடுகின்றன. ஆண் பறவைகளுக்கும் பெண் பறவைகளுக்கும் இடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த இனம் பொதுவாக ஒரு வாழ்க்கைத் துணையைக் கொண்டது. இவை இரு முட்டைகளை இட்டு, ஆணும் பெண்ணும் மாறிமாறி அடைகாக்கும்.

இதன் வாழ்விடங்களில் பல்வேறு திறந்த மற்றும் அரை-திறந்த சூழல்கள் அடங்கும். இந்தப் புறாக்கள் பாறை இடுக்குகள், கோபுரங்கள், மாடங்கள் போன்றவற்றில் உள்ள பொந்துகளில் கூடமைத்து முட்டையிட்டடு இனப்பெருக்கம் செய்கிறது. முதலில் ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மேற்கு ஆசியாவில் காடுகளாகக் காணப்பட்ட புறாக்கள் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பரவியுள்ளன. இந்த இனங்கள் ஏராளமாக உள்ளன, ஐரோப்பாவில் மட்டும் 17 முதல் 28 மில்லியன் மாடப் புறாக்கள் மற்றும் உலகளவில் 120 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1][3]

வீட்டுப் புறாக்கள்

மாடப் புறாக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்தே வீட்டுப் புறாக்கள் தோன்றின. இவை தவிர அழகுக்காக வளர்க்கப்படும் பல வகை ஆடம்பரப் புறாக்களும் உள்ளன.

கிளையினங்கள்

தொகு

இதில் ஒன்பது கிளையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[4]

  • C. l. livia Gmelin, JF, 1789 – மேற்கு, மத்திய ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா முதல் மத்திய ஆசியா வரை
  • C. l. gymnocycla Gray, GR, 1856 – மொரிட்டானியா மற்றும் செனகல் தெற்கு மாலி மற்றும் கானா
  • C. l. targia Geyr von Schweppenburg, 1916 – வடக்கு மாலி மற்றும் தெற்கு அல்ஜீரியா முதல் மத்திய சூடான் வரை
  • C. l. dakhlae Meinertzhagen, R, 1928 – மேற்கு எகிப்து
  • C. l. schimperi Bonaparte, 1854 – கிழக்கு எகிப்து, தெற்கு சூடான் மற்றும் எரித்திரியா
  • C. l. palaestinae Zedlitz, 1912 – சினாய் தீபகற்பம் (எகிப்து) முதல் சிரியா மற்றும் மேற்கு, தெற்கு அறபுத் தீபகற்பம் வரை
  • C. l. gaddi Zarudny & Loudon, 1906 – கிழக்கு துருக்கி முதல் உசுபெக்கிசுத்தான் மற்றும் மேற்கு, வடக்கு ஆப்கானித்தான்
  • C. l. neglecta Hume, 1873 – மேற்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் முதல் இமயமலை வரை
  • C. l. intermedia Strickland, 1844 – தென் இந்தியாவிலும் இலங்கையிலும்

வாழ்க்கை சுழற்சி நிலைகள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. 1.0 1.1 பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Columba livia". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. "Columba livia". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 2008-02-23.
  3. "Rock Pigeon Life History, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-24.
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (January 2023). "Pigeons". IOC World Bird List Version 13.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 10 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாடப்புறா&oldid=3773728" இலிருந்து மீள்விக்கப்பட்டது